Posts

திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில்  மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

Image
திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில்  மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்து பார்வையிட்டார். திருப்பூர் காங்கயம் சாலை, செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்லித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்து பார்வையிட்டார். திருப்பூர் மாவட்டம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் 47 -வது ஜவஹர்லால் நேரு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, அறிவியல் பெருவிழா, அறிவியல் நாடக விழா மற்றும் கணித கருத்தரங்கு நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும், இக்கண்காட்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 படைப்புகளும் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 100 படைப்புகளும் என 158 படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன. மேலும், இப்படைப்புகளிலிருந்து பள்ளிக் கல்வித் துறை  சார்பில்  6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்ப வரையிலான மாணவர்களுக் கிடையே 1 மாணவர் 1 படைப்பு பிரிவ...

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு பல்லடம் எம்.எல்.ஏ.,கரைப்புதூர் நடராஜன் தலைமையில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர்

Image
பல்லடம் எம்.எல்.ஏ., விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் ஓட்டு கேட்டு கானை, கெடார் ஊராட்சி, இந்திரா நகர், பெரியார் தெரு, ரெட்டியார் தெரு, ராஜாஜி தெரு ஆகிய இடங்களில் பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர். மாவட்டத் துணைச் செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், சிவாசலம், பொதுக்குழு உறுப்பினர் தண்ணீர் பந்தல் நடராஜன்,  மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் சித்துராஜ், ஏ.எம்.ராம மூர்த்தி, பண்ணையார் பழனிசாமி, சிடிசி பழனியப்பன், ஆவின் ஈஸ்வரன், வட்ட கழக செயலாளர்கள் தர்மலிங்கம, நாகஜோதி, கவின்குமார், சிவக்குமார், மங்கலம் முத்துசாமி, ஊராட்சிக் கழக செயலாளர்கள் விஸ்வநாதன், செண்ணியப்பன், கே.சரவணன், கெடார் ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிவக்குமார், துரை, ஜெயப்பிரகாஷ், வெற்றிவேல்...

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ.,கே.என். விஜயகுமார்  வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்

Image
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ.,கே.என். விஜயகுமார் தலைமையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு கழக வேட்பாளராக போட்டியிடும் முத்தமிழ் செல்வனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு, கானை ஒன்றியம் கெடார் ஊராட்சி செல்லங்குப்பம், மாரியம்மன் கோவில் வீதி,  84 வது பூத் பகுதியில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  கே.என். விஜயகுமார் எம்எல்ஏ வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். உடன் முன்னாள் மண்டல தலைவர்கள் ஜே.ஆர்.ஜான், ராதாகிருஷ்ணன் முன்னாள் கவுன்சிலர்கள் கலைமகள் கோபால்சாமி, விஜயகுமார்,  கனகராஜ், ஈஸ்வரன், சின்னசாமி, ரங்கசாமி, செந்தில் இளைஞரணி ஹரிஹரசுதன் செயலாளர்கள் மனோகரன் , ராஜகோபால் சொசைட்டி தலைவர் ஜுபிடர் சிவகுமார் 5 வது வார்டு நிர்வாகி நாகராஜ் உட்பட உள்ளூர் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக சென்று வாக்கு சேகரித்தனர்.  

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் தலைமையில் பிரச்சாரம்

Image
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர தலைமையில் பிரச்சாரம்  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு  இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு கானை ஒன்றியம் கெடார் ஊராட்சி சூரப்பட்டு பகுதியில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர தலைமையில் அவிநாசி தொகுதி நிர்வாகிகள் வேட்பாளருடன் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தனர். அவிநாசி வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர் வேலுசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணி, பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் லதா சேகர், பழனிசாமி, அவிநாசி ராமசாமி, அன்னூர் நிர்வாகிகள் சவுக்கத் அலி, அமுள் கந்தசாமி, ரத்தினகுமார், நீதிராஜன், பழனிவேல், ஷாஜகான் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.    

கடலூர் மாவட்டத்தில் 3.5 லட்சம் கால்நடைகளுக்கு 17 வது சுற்று  கோமாரி தடுப்பூசி போடும் முகாம்

Image
கடலூர் மாவட்டத்தில் 3.5 லட்சம் கால்நடைகளுக்கு 17 வது சுற்று  கோமாரி தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் அன்புச் செல்வன் துவக்கி வைத்தார்.     கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் கால்நடை மருந்தக கட்டுப்பாட்டிலுள்ள அரிசி பெரியங்குப்பத்தில் 3 .5லட்சம் கால்நடைகளுக்கு17 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிபோடும்  பணி துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை கடலூர் மண்டல இணை இயக்குனர் கே குபேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ. அன்புச்செல்வன் கலந்துகொண்டு கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின் ஊட்டச்சத்து  மாவு பாக்கெட், மற்றும் ரூ 23,000 மதிப்புள்ள நறுக்கும் கருவி இயந்திரத்தை சந்திரன் என்பவருக்கு கலெக்டர்.வழங்கினார்.     கோமாரி தடுப்பூசி போடும் பணியை கால்நடை உதவி மருத்துவர் கமலக்கண்ணன் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் நடராஜன்,ஸ்டாலின் வேதமாணிக்கம் ,சுந்தரம், நிக்சன், முரளி, மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் வீரக்குமார், சாந்தி, அன்பழகன், ஏழுமலை ,இரமே...

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட  சிறுபான்மை பிரிவு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

Image
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட  சிறுபான்மை பிரிவு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மறைமலைநகர் கழகச் செயலாளர் ரவிக்குமார் தலைமை தங்கினார். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் எம். கோதண்டமணி,  செங்கல்பட்டு சிறுபான்மை பிரிவு செயலாளர் கே. அப்துல் நபில், Tசிறுபான்மை நகரக் கழகச் செயலாளர் ஜேம்ஸ் டேனியல், நகர துணைத் தலைவர் எஸ். மணி, மாவட்ட செயலாளர்  ஜனார்த்தனன்,  நகர இளைஞரணி செயலாளர் தினகரன்,  ஆறாவது வார்டு திருமலை, நான்காவது வார்டு செயலாளர் டேனியல், நகர அம்மா பேரவை செயலாளர் ஜே.முத்துக்குமார், நகர மாணவரணி செயலாளர்  ஜோபின்,  குமார், ஆரோக்கியதாஸ், லோகேஷ் ராஜ், கிருபாகரன், மேகநாதன், ராமு, சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.    

திருப்பூரில் திமுக 51-வது வட்ட கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்றி கல்வெட்டு திறப்பு விழா

Image
திமுக 51-வது வட்ட கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்றி கல் வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் திறந்து வைத்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக 51-வது வட்ட கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்றி கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூரில் தி.மு.க. வடக்கு மாவட்டம், கருவம்பாளையம் பகுதிகழகம் சார்பில் 51-வது வட்ட தி.மு.க செயலாளர் ஆதவன் முருகேசன், பகுதிகழக அவைத்தலைவர் தம்பி.குமாரசாமி ஆகியோர் தலைமையில் திருப்பூர், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம், ஈஸ்வர பேக்கரி நால்ரோடு அருகே புதிதாக கட்டப்பட்ட சிட்டிபாபு நினைவு மன்றம், 51-வது வட்ட தி.மு.க அலுவலகத்தை வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாநகர செயலாளர் டி.கே.டி.நாகராசன், முன்னாள் மாவட்ட பொருளாளர் மேங்கோ அ.பழனிசாமி, மாநகர நிர்வாகிகள் சிட்டி கணேசன், ஈஸ்வரமூர்த்தி, வேலுச்சாமி, செந்தூர் முத்து, சுகன்யா லோகநாதன், அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சன் டிவி "...