Posts

ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரூ.183.70 இலட்சம் மதிப்பீட்டில் பணிகளை பல்லடம் எம்.எல்.ஏ கரைப்புத்தூர் ஏ.நடராஜன் துவக்கி வைத்தார்

Image
ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரூ.183.70 இலட்சம் மதிப்பீட்டில் பணிகளை பல்லடம் எம்.எல்.ஏ கரைப்புத்தூர் ஏ.நடராஜன் துவக்கி வைத்தார்.      திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முதலிபாளையம் ஊராட்சி பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் ரூ.183.70 இலட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டுதல், புதிய தார் சாலைகள்  மேம்பாடு செய்தல், கான்கிரீட் சாலைகள் அமைத்தல், புதிய தெரு விளக்குகள் அமைத்தல், குடிநீர் குழாய்கள் விரிவாக்கம் செய்தல், மயான சுற்றுச் சுவர் அமைத்து மேம்பாடு செய்தல், மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.     இந்நிகழ்ச்சியை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் A.நடராஜன் தலைமை தங்கி பணிகளை துவக்கி வைத்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மீனாட்சி, கனகராஜ், பொறியாளர், இளங்கோ, இந்துமதி, கௌசல்யா, மாணிக்காபுரம் கூட்டுறவு சொசைட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் நடராஜன், வேலுச்சாமி, கும...

காளான் வளர்ப்பு பயிற்சி முகாம்

Image
காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது      கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூரில் அமைந்துள்ள ஜெஎஸ் ஏ வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் உதவிப் பேராசிரியர் மோகனப்பிரியா வரவேற்புரையாற்றினார்.    கல்லூரி முதல்வர் முனைவர் தானு நாதன் தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாக இயக்குனர்பொறியாளர் நடராஜன், மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பராஜ், உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினர். முகாமில் விவசாயிகளுக்கு சிப்பி காளான் வளர்ப்பு பால் காளான் வளர்ப்பு பற்றிய பயிற்சி அளிக்கப் பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு   பயிற்சி பெற்றனர் முகாமில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமில் நிறைவாக வேளாண்மை விரிவாக்க துறை உதவி பேராசிரியர் முனைவர் ராவ் கெலுஸ்கர்  நன்றி கூறினார்.

கார்மாங்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு

Image
கார்மாங்குடி கிராமத்தில் கோவை வேளாண்மை பல்கலை கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.     கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவிற்கு உட்பட்ட கார்மாங்குடி கிராமத்தில் கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கார்மாங்குடி வெங்கடேசன் தலைமை தாங்கினார்.     சிறப்பு அழைப்பாளராக கோவை வேளாண் பல்கலைக் கழக தலைவர் பேராசிரியர் சோமசுந்தரம்,  ஜான்சிராணி, கணேசன், சுனிதா ஆகியோர் கலந்து கொண்டு மண்புழு எரு தயாரித்தல், பூச்சி விரட்டி , இயற்கை களைக்கொல்லி, மீன் அமினோ அமிலம்,  வேப்பங் கொட்டை சாறு,  இஞ்சி பூண்டு கரைசல் ஆகியவை தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளித்தனர். பின் விவசாயிகளுக்கு மண்புழு எரு தயாரிக்க கூடிய பொருட்களால் மண்புழு பாலிதீன் தொட்டி ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் கோவை வேளாண் பல்கலை கழகத்தை விவசாயிகள் பார்வையிட நேரில் அழைத்துச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் உழவர் மன்ற உறுப்பி...

எஸ் புதூர் கிராமத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு

Image
எஸ் புதூர் கிராமத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.     கடலூர் மாவட்டம் மங்களூர் அடுத்த எஸ் புதூர் கிராமத்தில் மக்காசோள பயிரில் படைப்புழு தாகத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். உதவி அலுவலர் கணேஷ் பாலன் முன்னிலை வகித்தார்.   சிறப்பு அழைப்பாளராக விருத்தாச்சலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் பூச்சியியல் துறை வல்லுநர் மருத்துவர் இந்திராகாந்தி கலந்துகொண்டு மக்காச்சோள பயிர்களைப் பார்வையிட்டார். பின்னர் ஆத்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்ட விவசாயிகளுக்கு மக்காச் சோளப் பயிரில் படைப்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்தும்  வழிமுறைகள் குறித்து பயிற்சிகள் அளித்தார். அதைத்தொடர்ந்து  ஏரிக்கரையில் பனை விதைகள் நட்டனர். இந்நிகழ்ச்சியில் ஆத்மா திட்ட அலுவலர்கள் சௌந்தரராஜன் செல்லமுத்து முத்துசாமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் ஆய்வு

Image
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்பட இருந்த முட்டைகள் கெட்டுப் போனதாக நாளிதழ்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் கு.மரகதம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிருவாக துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.பி.விஜயலலிதாம்பிகை, மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.மணி ஆகியோர்  இணைந்து 22.11.2019 அன்று அங்கேரிபாளையம் அவிநாசிகவுண்டன் பாளையம் பகுதியிலுள்ள மையங்களை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு வழங்கப்பட இருந்த வேக வைத்த முட்டைகள் மற்றும் வேக வைக்கப்படாத முட்டைகள் ஆய்வு செய்தனர். தரமான முட்டைகள் வழங்கப்பட்டுள்ளதை முட்டைகளை தண்ணீரில் போட்டுப் பார்ப்பதன் மூலமும், சாப்பிட்டு பார்ப்பதன் மூலமும் உணவு பாதுகாப்பு அலுவலரால் உறுதி செய்யப் பட்ட பிறகு குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்பட்டது. மேலும் நல்ல முட்டைகள் வழங்க உறுதி செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப் படுவதுடன் அங்கன்வாடி பணியாளர்களுக்கு முட்டைகளை வேக வைப்பதற்கு முன்பாக...

கமல்ஹாசன்னின் 65வது பிறந்தநாளில் 65 பனை விதைகள் நடும் விழா

Image
கமல்ஹாசன்னின் 65வது பிறந்தநாளில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி சார்பில் 65 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.     மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்னின் 65வது பிறந்தநாள் மற்றும் 60ஆம் ஆண்டு கலை பயணத்தை முன்னிட்டு ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி சார்பில் 65 பனை விதைகள் நடும் விழா ஈரோடு வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது    கோபி தொகுதிக்கு உட்பட்ட நஞ்சகவுண்டன்பாளையம், வெள்ளாளபாளையம், கலிங்கியம், வெள்ளாங்கோயில், கோட்டுப்புள்ளாம்பாளையம் மற்றும் வேமாண்டாம்பாளையம்  ஊராட்சி பகுதியில் 65 பனை விதைகளை மக்கள் நீதி மய்யத்தினர் நட்டனர் இந்த பணி தொடருமென்றும் இனி வரும் காலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகள் நட இருப்பதாக தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில்  கோபி மேற்கு தொகுதி பொறுப்பாளர் ஜி.சி.சிவக்குமார் கிழக்கு தொகுதி பொறுப்பாளர் என்.கே.பிரகாஷ் தெற்கு தொகுதி பொறுப்பாளர் சுதாசெல்வராஜ்   பகுதி பொறுப்பாளர் கே.ஜி.சரவணன் இளைஞர் அணி நா.முத்துகுமார் வர்த்தக அணி விஜய் சரவணன், பந்தல் குமார்...

கொண்டையம்பாளையம் பகுதியில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் துவக்கம்

Image
கொண்டையம்பாளையம் பகுதியில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் துவக்கம்.     டி.என்.பாளையம் அடுத்துள்ள கொண்டையம்பாளையம் பகுதியில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் பஷீர் அகமது ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சட்ட ஆலோசகர் ஜெகதீஸ்வரன் வரவேற்று பேசினார்.   நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் தலைவர் ராஜன் மற்றும் துணைத்தலைவரும் படவெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுகர்வோர் பாதுகாப்பு அடையாள அட்டையை வழங்கி பேசிய பங்களாபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கிராம புறங்களிலும் நுகர்வோர் பற்றிய விழிப்புணர்வு சென்றடைந்து மக்கள் பயன் பெற வேண்டும் என்று பேசினார். நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.