கொண்டையம்பாளையம் பகுதியில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் துவக்கம்

கொண்டையம்பாளையம் பகுதியில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் துவக்கம்.

 


 

டி.என்.பாளையம் அடுத்துள்ள கொண்டையம்பாளையம் பகுதியில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் பஷீர் அகமது ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சட்ட ஆலோசகர் ஜெகதீஸ்வரன் வரவேற்று பேசினார்.

 

நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் தலைவர் ராஜன் மற்றும் துணைத்தலைவரும் படவெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுகர்வோர் பாதுகாப்பு அடையாள அட்டையை வழங்கி பேசிய பங்களாபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கிராம புறங்களிலும் நுகர்வோர் பற்றிய விழிப்புணர்வு சென்றடைந்து மக்கள் பயன் பெற வேண்டும் என்று பேசினார். நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்