Posts

ஆயிரம் முன்னாள் மாணவிகள் சந்தித்த அற்புத சந்திப்பு! பசுமை நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்

Image
ஜெய்வாபாய் நகரவை மாதிரி பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சந்திப்பு கூட்டம் 71 ஆவது குடியரசு தினமான இன்று நடைபெற்றது. 1962 ம் ஆண்டு படித்த மாணவிகள் முதல் 2019- ம் ஆண்டுவரை படித்த மாணவிகள் சுமார் 1000- ம் பேர்கள் கலந்து கொண்டனர். இந்த முன்னாள் மாணவிகள் சார்பாக  பள்ளியின் வளர்ச்சிக்கு துணைபுரிய ஜே.எப்.எஸ். என்ற அறக்கட்டளையின் துவக்கவிழா நடைபெற்றது. பள்ளியின்முன்புறம் பேவர் சிமெண்ட் கற்கள் பதித்துக்கொடுத்த முன்னாள் மாணவி மனோன்மணிக்கும் அவரின் தாயார் திருமதி.அங்காத்தாள் கந்தசாமி , மாண்டிசோரி பொருட்களை பள்ளிக்கு தந்த திருமதி கிளாடிஸ் ,பள்ளியை திறம்பட நடத்திவரும் முதல்வர் திருமதி.ஸ்டெல்லா அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை திருமதி.பார்த்திபா,கார்த்திகேயனி, மோகன ரஞ்சினி ,பூவிழி,ஹேமலதா,செந்தாமரை,துளசி,ரூபா,மோகன பிரியா ஆகியோர் செய்தனர். ஜெய்வாபாய் பள்ளியில் மெதுவாகப்படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி, மாணவிகளுக்கு கவுன்சிலிங் போன்ற வற்றை நடத்துவது, என முடிவெடுக்கபட்டது..

குழந்தை பற்றி தகவல் தெரிவிக்க திருப்பூர் மாவட்ட காவல்துறை வேண்டுகோள்

திருப்பூர்  மாவட்டம்  பல்லடம் காவல் நிலைய  சரகத்தில்  உள்ள   மங்கலம் ரோடு அரசங்காட்டில்  குடியிருக்கும்  சுடலை முத்து-30  த/பெ. மாரியப்பன் என்பவருக்கு  திருமணமாகி   3 வயதில்  மகாலட்சுமி  என்ற  பெண் குழந்தை  உள்ளது. அவரது  மனைவி செல்வியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக   அவரது  மனைவி. குழந்தையையும்  கணவரையும்  விட்டு பிரிந்து போய்விட்டார். சுடலை முத்து  கார்பெயிண்டராக வேலை செய்து வருகிறார். அவரது  குழந்தையை  அவரது அப்பா மாரியப்பனிடம் விட்டு  கவனித்து வந்துள்ளார்.  கடந்த  23.01.2020 ம் தேதி   மாரியப்பன்  அவரது பேத்தி மகாலட்சுமியுடன்  பழனி கோவிலுக்கு  அழைத்து சென்று  2401.2020 ம் தேதி  மதியம் சுமார் 1 ½ மணிக்கு  திரும்பி  வரும் போது அவர்களுடன்  சுமார் 30 வயது மதிக்கதக்க  ஒரு பெண்ணை  அழைத்து கொண்டு  வீட்டிற்கு வந்துள்ளார். மாரியப்பன்   மது அருந்தி விட்டு  போதையில்  ...

குட்கா கடத்தலில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் மீது குண்டாசில் கைது:  திருப்பூர் போலீஸ் கமிஷனர் உத்தரவு 

  திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் விடுத்துள்ள அறிக்கை: திருப்பூர் மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமான குட்கா விற்பனையில் ஈடுபட்டும் மற்றும் பொதுமக்களுக்கு கேடுவிளைவிக்கும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்ப்படுத்தும் வகையிலும், குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த குட்கா வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார் ஆணையிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கல்யாணப்பூர் தேசிப்புறா பகுதியை சேர்ந்த தல்லாராம் மகன் சர்வன்ராம் (வயது 25),   அவரது தம்பி  தினேஷ் (வயது 24)  ஆகியோர் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த வாரத்தில் திருப்பூரில் கைப்பற்றப்பட்ட 750 கிலோ குட்கா இவர்கள் தான் திருப்பூருக்கு கடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாணவன் தயாரித்த பிரம்மாண்ட தேசியக் கொடி! கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்படுகிறது

Image
திருப்பூர் மாணவன் தயாரித்த பிரம்மாண்ட தேசியக் கொடி! கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்படுகிறது திருப்பூரில் கல்லூரி மாணவர் 90 ஆயிரம் வண்ண ஸ்டிக்கர்களை பயன்படுத்தி பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கி கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். திருப்பூரை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல்  கல்லூரியில் 4ம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு சமத்துவம், மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தி 5*4 செ.மீ அளவுள்ள 90 ஆயிரம்  ஸ்டிக்கர்களை பயன்படுத்தி ப்ளக்ஸ் பேனர் அச்சடிக்க பயன்படும் பிளாஸ்டிக் விரிப்பில்  9 மீ உயரம் 18 மீ நீளம் என 162 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தேசிய கொடியை 70 மணி நேரம் செலவழித்து தனி நபராக உருவாக்கியுள்ளார். இவரது இந்த முயற்சி கின்னஸ் சாதனை நிகழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  பேட்டி : பிரவீன் குமார்.

மொழிப்போர் தியாகிகளுக்காக உண்மையாக உழைத்த இயக்கம் அதிமுக: நடிகர் சுந்தர்ராஜன் பேச்சு

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் கே.வி.ஆர்., நகரில் நடைபெற்றது.  திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், கால்நடைத்துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், தலைமை கழக பேச்சாளரும், திரைப்பட நடிகருமான சுந்தரராஜன், திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன், திருப்பூர் ஒன்றிய கழக செயலாளரும், வடக்கு எம்.எல்.ஏ.,வுமான கே.என்.விஜயகுமார், திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளரும், பல்லடம் எம்.எல்.ஏ., வுமான கரைப்புதூர் நடராஜன், தலமை கழக பேச்சாளர் மதுரபாரதி, சிராஜுதீன், மகேஸ்வரி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.  கூட்டத்துக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி தலைமை தாங்கினார்.    இந்த கூட்டத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், கால்நடைத்துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:  மொழிபோர் தியாகிகளு...

குடியரசு நாள்: கலர்புல் கலைநிகழ்ச்சிகளுடன் திருப்பூரில் கோலாகல விழா!!

Image
  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் விஜய கார்த்திகேயன் தேசியகொடியை ஏற்றி வைத்தார். விழாவில் 93 லட்சம் மதிப்பிலான நல்ல உதவிகள் வழங்கப்பட்டது திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில், கலெக்டர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் 515 பேருக்கு, 93.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட காவல் துறை காவலர்களுக்கு 39 பேருக்கும், மாநகர காவலதுறை யினர் 16 பேர் என 55 பேருக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட்டது. 239 பேருக்கு பணியை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் எஸ். பி., திஷா மித்தல், மாநகர கமிஷனர் சஞ்சய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு.

மதியம் கட்டிங், ராத்திரிக்கு குவார்ட்டர்!! தொழிலாளிகளை கவர திருப்பூரில் தாங்க இந்த நிலைமை!

Image
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு பணியாட்கள் கிடைக்காத நிலையில் மதியம் கட்டிங் இரவு குவாட்டர் என பணியாளர்களை கவர ஒட்டப்பட்ட விளம்பரத்தால் பரபரப்பு. பின்னலாடை நகரான திருப்பூரில் ஆண்டுக்கு 26,000 கோடி ஏற்றுமதியும் 18 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கு தற்பொழுது ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது. பணியாளர்கள் வேலைக்கு வந்தாலும் பாதி நாட்கள் பணிபுரிந்து திரும்பி வராத சூழல் நிலவுகிறது இதனால் முன்னதாக பெறப்பட்ட ஆர்டர்கள் முடிந்து தரமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் தள்ளப்படுகின்றனர் இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்ததும் பல நிறுவனங்களுக்கு போதிய ஆட்கள் கிடைக்காத சூழ்நிலையில் திருப்பூரில் உள்ள சிறு பின்னலாடை நிறுவன உரிமையாளர் பேட்லாக் என்னும் தையல் இயந்திரத்தை இயக்குவதற்கு ஆட்கள் தேவை என பலமுறை தெரிவித்தும் ஆட்கள் கிடைக்காததால் பணிக்கு வருபவர்களுக்கு மதியம் இரவு குவாட்டர் மற்றும் டீ காசு வழங்கப்படும் என சுவரொட்டி அடித்து ஓட்டியுள்ளார். இதனைக் கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர் இதுகுறித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் ...