குட்கா கடத்தலில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் மீது குண்டாசில் கைது:  திருப்பூர் போலீஸ் கமிஷனர் உத்தரவு 


 

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் விடுத்துள்ள அறிக்கை:
திருப்பூர் மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமான குட்கா விற்பனையில் ஈடுபட்டும் மற்றும் பொதுமக்களுக்கு கேடுவிளைவிக்கும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்ப்படுத்தும் வகையிலும், குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த குட்கா வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார் ஆணையிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கல்யாணப்பூர் தேசிப்புறா பகுதியை சேர்ந்த தல்லாராம் மகன் சர்வன்ராம் (வயது 25),   அவரது தம்பி  தினேஷ் (வயது 24)  ஆகியோர் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த வாரத்தில் திருப்பூரில் கைப்பற்றப்பட்ட 750 கிலோ குட்கா இவர்கள் தான் திருப்பூருக்கு கடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்