பச்சைமலை முருகன் கோவில் சூரசம்ஹார விழா: சூரனை வதம் செய்தார் முருகன்
கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலமுருகன் கோயிலில் சூரசம்கார நிகழ்வு குறைந்தளவு பக்தர்களுடன் கோயில் பிரகாரத்திலேயே நடைபெற்றது. முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் ஒருமுறை கொங்கு நாட்டிற்கு எழுந்தருளினார். குன்னத்தூர் அருகே வந்துää சிவ பூஜை செய்ய சரியான இடத்தை தேட முற்பட்டார். அப்போது ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அமைந்துள்ள மொடச்சு10ர் என்னும் ஊர் தான் சிவ பூஜை செய்ய சரியான இடம் என்பதை ஞான திரிஷ்டியால் உணர்ந்து அங்கு வந்து சிவ பூஜை செய்ய முற்படுகிறார். அப்போது குறை தீர்க்கும் குமரக் கடவுளை காண எண்ணி அவரது மனம் பூஜையில் திளைக்க மறுக்கிறது. குறை தீர்க்கும் குகனை எண்ணி தவத்தால் அருகில் உள்ள பச்சைமலை என்னும் குன்றை அறிகிறார். அங்கு அவருக்கு பாலதண்டாயுதபானியாக முருகன் காட்சி அளிக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் பச்சைமலையில் நிலையாகக் குடிகொள்கின்றான். துர்வாசர் முருகனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்கிறார். இவ்வாறு பிரதித்தி பெற்ற அருள்மிகு பச்சமலை பாலமுருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கந்த சஷ்டி சூரசம்காரவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ச...