உயிரிழந்த தாயின் உடலை பார்க்க பாச போராட்டம் நடத்திய கொரானா நோயாளி: கண்கலங்க வைத்த இறுதி அஞ்சலி நிகழ்வு

உயிரிழந்த தாயின் உடலை பார்க்க பாச போராட்டம் நடத்திய கொரானா நோயாளி, பாதுகாப்பு உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி நெகிழ்ச்சி சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.



திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பா நேரி பகுதியை சார்ந்தவர் மின்னல் அம்மா உடல் நலிவுற்று நிலையில் நேற்று காலமாகிவிட்டார்.
இவரது மகன் முருகேசன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வாணியம்பாடி கொரானா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தனது தாய் இறந்த தகவலறிந்த முருகேசன் கடைசியாக தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என கோரி மருத்துவமனையில் மன்றாடி உள்ளார்.


தகவலறிந்த வருவாய் துறையினர் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் முருகேசனுக்கு பாதுகாப்பு கவச உடை அணிவித்து நேற்றிரவு அவரது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த அழைத்து சென்றுள்ளனர்.


தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுத முருகேசன் இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் அப்பகுதியில் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்