பச்சைமலை முருகன் கோவில் சூரசம்ஹார விழா: சூரனை வதம் செய்தார் முருகன்

 கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலமுருகன்

கோயிலில் சூரசம்கார நிகழ்வு குறைந்தளவு பக்தர்களுடன் கோயில்

பிரகாரத்திலேயே நடைபெற்றது.




முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் ஒருமுறை கொங்கு

நாட்டிற்கு எழுந்தருளினார். குன்னத்தூர் அருகே வந்துää சிவ பூஜை செய்ய

சரியான இடத்தை தேட முற்பட்டார். அப்போது ஈரோடுமாவட்டம்

கோபிசெட்டிபாளையம் அருகே அமைந்துள்ள மொடச்சு10ர் என்னும் ஊர் தான்

சிவ பூஜை செய்ய சரியான இடம் என்பதை ஞான திரிஷ்டியால் உணர்ந்து

அங்கு வந்து சிவ பூஜை செய்ய முற்படுகிறார். அப்போது குறை தீர்க்கும்

குமரக் கடவுளை காண எண்ணி அவரது மனம் பூஜையில் திளைக்க

மறுக்கிறது. குறை தீர்க்கும் குகனை எண்ணி தவத்தால் அருகில் உள்ள

பச்சைமலை என்னும் குன்றை அறிகிறார். அங்கு அவருக்கு

பாலதண்டாயுதபானியாக முருகன் காட்சி அளிக்கிறார். அவரின்

வேண்டுகோளை ஏற்று இறைவன் பச்சைமலையில் நிலையாகக்

குடிகொள்கின்றான். துர்வாசர் முருகனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை

செய்கிறார். இவ்வாறு பிரதித்தி பெற்ற அருள்மிகு பச்சமலை பாலமுருகன்

கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கந்த சஷ்டி

சூரசம்காரவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். சு10ரசம்ஹாரம்

என்பது சு10ரபத்மன் எனும் அரக்கனை அழித்த நிகழ்வாகும். சு10ரபத்மனை

முருகன் அழித்தார். அதன் நினைவாக முருகனுடைய ஆலயங்களில் இந்த

நிகழ்வினை விழாவாக கொண்டாடுகிறார்கள். பச்சமலை பாலமுருகன்

கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 15-ம் தேதி யாகசாலை பூஜையுடன்

தொடங்கியது. அன்று விரமிதமிருக்கும் பக்தர்கள் கைகளில் காப்பு கட்டி

சஷ்டி விரதம் மேற்கொண்டனர். விழாவில் 6-ம் நாளான இன்று காலை

சு10ரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது. இன்று அதிகாலை 3 மணிக்கு


நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை உதயமார்த்தாண்ட அபிஷேகம்

மற்றும் தீபாராதனை நடைபெற்றது அதனை தொடர்ந்து யாகசாலை

பூஜையைத் தொடர்ந்து பூர்ணா{ஹதி தீபாராதனைää சுவாமிää அம்மனுக்கு

அபிஷேகம் நடைபெறுகிறது. அதன்பின்னர்ää யாகசாலையில் இருந்து சுவாமி

சப்பரத்தில் கோயில் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள் முன் எழுந்தருளினார்.

அங்கு சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அங்கிருந்து

சு10ரசம்ஹாரத்துக்காக கோயில் சுற்று பிரகாரகாரத்திற்க சுவாமி

எழுந்தருளினார். வழக்கமாக சு10ரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான

பக்தர்கள் குவிவார்கள். கெரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு

சு10ரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை.

அதனால் குறைந்தளவு பக்தர்களே கலந்துகொண்டனர். சூரனை வதம்

செய்யும் நிகழ்வு கோபிசெட்டிபாளையம் நகர் பகுதி முழுவதும் வலம் வந்து

நடைபெற்று வந்த நிலையில் இந்தாண்டு கொரோனா நோய் தடுப்பு கோயில்

பிரகாரத்தில் கோலகலமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள்

முருகன் பிரகாரத்திற்கு பன்னீர் தெளித்து வழிபாடு செய்தனர். இந்நிகழ்வை

காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்த போது மலையோர அனுமதி

மறுக்கப்பட்ட நிலையில் ஏமாற்றமடைந்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!