Posts

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: களத்தில் இறங்கி பணியாற்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

Image
கோபி தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க கூட்டம் கூட்டமாக வரும் மக்களால் வைரஸ் நோய் பரவும் நிலை உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அவர்களிடம் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் வைத்தனர். அதனைதொடர்ந்து மாலை அனைத்து சங்க நிர்வாகிகளிடமும் வணிகர் சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து கோபி பஸ் நிலையத்தை தற்காலிக மார்க்கெட்டாக நாளை ஞாயிறு காலை முதல் செயல்படும் என அறிவித்தார். வரும்மக்கள் எவ்வித சிரமமுமின்றி காய்கறிகளை வாங்கிச் செல்ல கடைகளுக்கு கடை இடைவெளி விட்டு பொருட்கள் வாங்க ஏதுவாக நகராட்சி நிர்வாகத்திடம் மார்க் கோடுகள் அமைக்க உத்தரவும் பிறப்பித்தார். அமைச்சரின் இந்த துரித நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

கொரானா நோய் தடுப்புக்கு நிதி வழங்கிய தருமபுர ஆதீனத்திற்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை பாராட்டு

Image
கொரானா நோய் தடுப்புக்கு நிதி வழங்கிய தருமபுர ஆதீனத்திற்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை பாராட்டு  மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : தற்போது உலகமெங்கும் கொரானா நோய் காற்றைவிட வேகமாக பரவி வருகிறது . இந்த நோய் தடுப்புக்கு தாராளமாக நிதி உதவி வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் வேண்டுகோள். விடுத்தார் . அந்த வேண்டுகோளை ஏற்று சைவத்தையும் தமிழையும் இரு கண்களாக வளர்த்துவரும் தருமபுர ஆதீனத்தின் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்  அவர்கள் கொரானா  நோய் தடுப்பு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 11 லட்சம் நிதி  வழங்கியுள்ளார்கள்.  ஏற்கனவே இந்த  வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டு நலமுடன் வாழ தருமை ஆதீனத்தின் சார்பாக அதன் 27 திருக்கோயில்களில் சிறப்பு யாகங்கள், கூட்டு வழிபாடு, திருமுறை பாராயணம் ஆகியவை தருமபுரம் ஆதீனம் குருமகாசந்நிதானம் அருளாணைவண்ணம் நடத்தப்பட்டது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின்  வேண்டுகோளுக்கிணங்க மக்கள், ஆன்மீக அன்பர்கள் முழு...

சத்துணவுத்திட்டத்தில் சாதனை படைக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி

Image
தமிழக அரசின் மதிய சத்துணவு  திட்டம் பெற்றோரின் ஒத்துழைப்போடு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய முயற்சிகளுடன் முழுமையாக செயல்படுத்தி சாதனை படைத்துவருகிறது .                                                 பள்ளியில் மதிய சத்துணவு அனைத்து மாணவர்களும் அன்பாக சாப்பிடும் வகையில் புதிய முயற்சிகளுடன் நடைபெற்று வருகிறது.இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது :     எங்கள் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின்  பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்வதால் மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல்தான் வருகிறார்கள்.இதனால் பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்படும் மதிய சத்துணவை விரும்பி சாப்பிடுவார்கள் .எனவே பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் பள்ளியிலேயே சாப்பிடும் வைக்கும் வகைய...

திருநங்கைகள் கொரோனா விழிப்புணர்வு

Image
சூளைமேடு சிக்னல் அருகில் சூளைமேடு காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு முன்முயற்சியில் சகோதரன் மற்றும் தோழி அமைப்பை சார்ந்த திருநங்கைகள் கைகளை கழுவுவதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்பதை செயல்முறை விளக்கம் தந்தனர் .

கொரோனாவிலிருந்து காக்க வேண்டி பழனி மலைக்கோயிலில் 108 மூலிகைகளால் யாகபூஜை

Image
  பழனி மலைக்கோயிலில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க  கோவில்களுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பழனி   அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி  திருக்கோயிலில் கொரோனா  வைரஸ் தாக்கத்திலிருந்து தமிழகம் மற்றும் உலக மக்களை காக்கும் பொருட்டு மலைக்கோயிலில்  ஸ்கந்த ஹோமம் நடைபெற்றது.  இதில் திருக்கோயில் சார்பாக ஜூரபீதி நீங்க 108 மூலிகை பொருட்கள் கொண்டு யாக குண்டம் வளர்த்து உச்சிகால பூஜையின் போது அபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வழக்கமாக  பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா வைரஸ் எதிரொலியால்  பக்தர்கள், கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவில் கதவும் சாத்தப்பட்டு இருந்தது.  இதனால் அர்ச்சகர்கள் மட்டும் கலந்துகொண்டு

திருப்பூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு

Image
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திருப்பூர் தாராபுரம் சாலை, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள தனிமை படுத்தப்பட்ட சிகிச்சை பகுதியினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் க. விஜயகார்த்திகேயன், இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று (28.03.2020) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்நோய் குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு வகையான நடவடிக்கைகளும் தொடந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் நமது மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பகு...

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு

Image
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வணிகத்துறை அமைச்சர் கே சி வீரமணி கொராணா வைரஸ் நோயாளிகளுக்கன தனி வார்டை பார்வையிட்டார்.   அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கார்த்திகேயனிடம்  விசாரணை செய்து,  மேற்கொண்டு என்னென்ன வேண்டுமோ அதை நான் செய்து கொடுக்கிறேன் என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது, கொராணா வைரஸ் நோய் பரவி வருவதால் தமிழக அரசு தமிழக மக்களுக்கு கொராணா வைரஸ் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தாள் இந்த நோயை விரட்டி அடித்து விடலாம் ஆகையால் பொதுமக்கள் யாரும் அதிகமாக வெளியில் வர வேண்டாம்.  இளைஞர்களுக்குமு நான் ஒன்று சொல்ல வேண்டும் நீங்கள் தேவையில்லாத வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது.  தயவுசெய்து இளைஞர்கள் வீட்டிலேயே இருக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்  குடியாத்தம் நகர செயலாளர் ஜே கே என் பழனி, குடியாத்தம் நகர துணைச் செயலாளர்  கஸ்பா மூர்த்தி, குடியாத்தம் ஒன்றிய கிழக்கு செயலாளர் ராமு மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன்,  குடியாத்தம் தாசில்தார்  வத்சலா,...