Posts

மனாரூல் ஹுதா மஸ்ஜித் & மதரஸா சார்பாக 500 நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 

Image
  ஈரோடு காமராஜபுரம் புதுமைக்காலனி  மனாரூல் ஹுதா மஸ்ஜித் & மதரஸா சார்பாக ரமலான் நோன்பை முன்னிட்டு எழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 500 நபர்களுக்கு , பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன், டாக்டர் சமது பாரத் மருத்துவமனை , ஈரோடு தலைமை ஹாஜி கிஃபாயதுள்ள மற்றும் மனாரூல் ஹுதா பள்ளி முத்தவல்லி அண்ணன் தங்கப்பையன் (எ) J. இப்ராஹிம் தலைமையில்  வழங்கப்பட்டது .உடன் பள்ளியின் நிர்வாகிகள் , கமிட்டி  உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்  அனைவரும் உடன் இருந்தனர்.      

குடியாத்தம் நகர நகராட்சியில் பணி புரியும் பணியாளர்களுக்கு மதிய உணவு

Image
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர நகராட்சியில் பணி புரியும் பணியாளர்களுக்கு குடியாத்தம்  நகர கழக செயலாளர் ஜே கே என்.பழனி தனது சொந்த செலவில் மதிய உணவு வழங்கினார். குடியாத்தம்  நகராட்சியில் பணிபுரியும் சுமார் 300 நபர்கள் தூய்மை பணியாளர்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் மதிய உணவு  நகர கழக செயலாளர்  ஜே கே என் .பழனி, மற்றும் நகராட்சி ஆணையர். ரமேஷ் ஆகியோர் வழங்கினர்.  நிகழ்ச்சியில் நகர கழக துணை செயலாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்

குடியாத்தம் காட்டுப்பகுதியில் சுமார் 800 லிட்டர் சாராயம் ஊறல் அழிப்பு 

Image
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையில், மதுவிலக்கு போலீசார் குடியாத்தம் தாலுகா மோர்தனா அருகே காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 800 லிட்டர் சாராயம் ஊறல் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.  

முதல் அக்ரஹாரம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் இன்று வைகாசி ஏகாதசி முன்னிட்டு சிறப்பு பூஜை 

Image
  சேலம் மாவட்டம் முதல் அக்ரஹாரம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் இன்று வைகாசி மாதம் ஏகாதசி முன்னிட்டு  கொரோனோ நோய் தடுப்பில் இருந்து உலக மக்களை காத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி விரைவில் அனைத்து ஆலயங்களும் திறந்து பக்தர்களுக்கு சிறப்பாக தரிசனம் கிடைக்க  வேண்டுமென சிறப்பாக ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு சாத்தப்பட்டு கோபி சுரேஷ் அர்ச்சகர் சிறப்பாக அலங்காரம் செய்திருந்தார்.      பத்மநாபன் அர்ச்சகர் துளசி தளத்தில் சிறப்பாக அர்ச்சனை செய்யப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தி மற்றும் கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. ஊரடங்கு உத்தரவு  மற்றும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டுமென முக கவசம் அணிந்து  மிகவும் குறைவான பக்தர்களுடன் பூஜை சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் சடாரி மரியாதை வழங்கப்பட்டது.          

சொந்த ஊர் செல்லும் 1464 வடமாநில தொழிலாளர்கள்; எம்.எல்.ஏ., சு.குணசேகரன் வழியனுப்பி வைத்தார்

Image
திருப்பூரில் இருந்து  பீகார் மாநிலம் ஹாஜிபூருக்கு, சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள் 1464 பேரை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் புறப்பட்டது. இதை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு தாசில்தார் சுந்தரம், போலீஸ் உதவி கமிஷனர் கஜேந்திரன், இன்ஸ்பெக்டர் கணேசன், ரயில்வே அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

ஈரோடு மாவட்ட நிர்வாகம், காவல் துறை சார்பில் வாட்ஸ்அப் மூலம் நடத்தப்பட்ட ஓவியப் போட்டி

Image
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலத்தில் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கவும், அவர்களின் நேரத்தை சிறப்பாகவும், கற்பனை திறனை வெளிப்படுத்தவும்,  ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் வாட்ஸ்அப் மூலம் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற கருமாண்டம்  பாளையத்தை சேர்ந்த ஜீவா  என்ற மாணவருக்கு பாராட்டு  சான்றிதழை  மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் திருவானந்தம்  உத்தரவின்படி  மலையம்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் வரதராஜன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தனிப் பிரிவு தலைமை காவலர் சந்திரசேகரன்  அவர்களும் கலந்து கொண்டனர்.  

திருப்பூரில் 1500 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு; முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்

Image
  திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், திருப்பூர் மாநகராட்சி 56 வது வார்டில், கே.வி.ஆர்., நகர், செல்லம் நகரில் 1500 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார் .     முன்னாள் மண்டல தலைவர் வி.ராதாகிருஷ்ணன், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிட்டி பழனிசாமி, பகுதி செயலாளர் ஏ.எஸ்.கண்ணன், நீதிராஜன், ரத்தினகுமார், பழனிவேல், துரைசாமி, காதர்பேட்டை பாஷா,மேஸ்திரி சிவா, சண்முகம், பரமசிவம், சீனிவாசன், ஷாஜகான், பரமராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.