Posts

திருப்பூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் கடன் வழங்கும் விழா... முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., பங்கேற்பு

Image
திருப்பூர், அனுப்பர்பாளையத்தில், திருப்பூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில், வீடு கட்டுவதற்கு தலா ரூ.5 லட்சம் கடன் தொகைக்கான காசோலையை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் ஆகியோர் வழங்கினார்கள். இந்த நிகழ்வில், வங்கி தலைவர் நீதிராஜன், துணைத் தலைவர் பழனிவேலு, செயலாளர் கோபாலகிருஷ்ணன், இயக்குநர்கள் சுதா, சாந்தி, சுமதி, ஆறுமுகம், பாபு, அருண்குமார், அசோக்குமார், புண்ணியமூர்த்தி, செந்தில்குமார், உதவியாளர் கல்பனா,  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

திருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை

Image
70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன.   கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.   மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன.   இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது.   திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்ல...

ஆர்.எஸ். பாரதியை கைது செய்ய வேண்டி அதிமுக ஆர்ப்பாட்டம்

Image
பட்டியலின மக்களை பொதுவாக பேசிய திமுக வின் ஆர்.எஸ். பாரதியை கைது செய்ய வேண்டி திருப்பூர் ராயபுரம் பகுதியில் அதிமுக கிளைச் செயலாளர் தலைமையில் அப்பகுதி மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜீவ் ராமசாமி சின்னதம்பி, கோபால், மனோகரன், பழனிசாமி, ஆறுச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் எகிறுது பாதிப்பு... தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா... இன்று மட்டும் 13 பேர் பலி

Image
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில வாரங்களாக 500 முதல் 800 வரை இருந்த  நோயாளிகள் எண்ணிக்கை, நேற்று 938 ஆனது. இன்றைய கொரானா பாதிப்பு தமிழ்நாட்டில் ஆயிரம் பேரை தாண்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்  பாதிப்பு எண்ணிக்கையானது 1149 ஆக அதிகரித்து உள்ளது.   இதன்மூலம் தமிழகத்தில் இன்று வரை நோய் பாதிப்பு உடையவர்கள் எண்ணிக்கை 22,333 ஆக உள்ளது. 12,807 பேருக்கு சோதனை நடத்தியதில் 1,149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 173 ஆக அதிகரித்து உள்ளது. இன்னும் 6,710 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னையில் 84, செங்கல்பட்டில் 85, திருவள்ளூரில் 47, திருவண்ணாமலை 45, காஞ்சிபுரம் 16, சேலம் 13 பேர் உள்பட தமிழகத்தில் 1054 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுதவிர வெளிநாட்டிலிருந்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்துவந்த 95பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் 11,00க்கும் அதிகமானோர் நோய்த் தொற்றா...

இனி இ-பாஸ் தேவையில்லை... பஸ்கள் ஓடும்...70 நாள் முடக்கத்துக்கு விடுதலை

Image
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 29.5.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை படிப்படியாக விலக்கிக் கொள்ள பரிந்துரை செய்ய, 26.5.2020 அன்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையிலும், 26.5.2020 மற்றும் 30.5.2020 அன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையிலும், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.6.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கீழ்கண்ட சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. 1) ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும...

கொரோனா காலத்தில் அயராத பணி: கோபி போலீசாருக்கு பாராட்டு

Image
ஈரோடு மாவட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் பொருட்டு, ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பாக காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிவப்பு மண்டலமாக இருந்த ஈரோடு மாவட்டத்தை பச்சை மண்டலமாக மாற்ற கடந்த இரண்டு மாதங்களாக காவலர்கள் 24 மணி நேரமும் ஓய்வின்றி, உறக்கமின்றி, கடுமையாகவும், திறமையாகவும் பணியாற்றியுள்ளனர். இச்சிறப்பான பணியினை பாராட்டி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க   பள்ளி கல்வித்துறை அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் ,சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன், போலீஸ் எஸ்.பி., சக்தி கணேசன் ஆகியோர் கோபி காவல் நிலையத்திற்கு நேரில் வந்து காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கவுரப்படுத்தினார்கள். இது ஈரோடு மாவட்ட காவல் துறையின் சிறந்த பணிக்கு மேலும் ஒரு மைல்கல்லாக இந்நிகழ்வு அமையப்பட்டது என ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றி தெரிவித்து இன்பதுரை எம்எல்ஏ அறிக்கை

Image
தாமிரபரணி ஆறு− கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் 4-ம் கட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றி தெரிவித்து இன்பதுரை எம்எல்ஏ அறிக்கை ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதியான திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வறட்சியைப் போக்குவதற்காக தாமிரபரணி ஆறு − கருமேனியாறு −நம்பியாறு இணைப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.  இந்த திட்டத்தை சாத்தான்குளம் இடைத்தேர்தலின்போது மாண்புமிகு அம்மா அவர்கள்  அறிவித்தார்கள். மத்திய அரசின் விரைவுபடுத்தப்பட்ட பாசன திட்டத்தின்மூலம் செயல்படுத்தபடும் இத்திட்டத்திற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு தான் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.  நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை  மத்திய அரசு ரூபாய் 872 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றலாம் என்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை செயலாக்குவதன் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் சுமார் 17002 ஹெக்டேர் புதிய பாசன பரப்பு உள்பட மொத்தம் 23400 ஹெக்டேர் நிலங்கள் பாசன வச...