கொரோனா காலத்தில் அயராத பணி: கோபி போலீசாருக்கு பாராட்டு

ஈரோடு மாவட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் பொருட்டு, ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பாக காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிவப்பு மண்டலமாக இருந்த ஈரோடு மாவட்டத்தை பச்சை மண்டலமாக மாற்ற கடந்த இரண்டு மாதங்களாக காவலர்கள் 24 மணி நேரமும் ஓய்வின்றி, உறக்கமின்றி, கடுமையாகவும், திறமையாகவும் பணியாற்றியுள்ளனர்.



இச்சிறப்பான பணியினை பாராட்டி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க   பள்ளி கல்வித்துறை அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் ,சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன், போலீஸ் எஸ்.பி., சக்தி கணேசன் ஆகியோர் கோபி காவல் நிலையத்திற்கு நேரில் வந்து காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கவுரப்படுத்தினார்கள். இது ஈரோடு மாவட்ட காவல் துறையின் சிறந்த பணிக்கு மேலும் ஒரு மைல்கல்லாக இந்நிகழ்வு அமையப்பட்டது என ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்