திருப்பூர் பீஷ்மர் மோகன்ஜி விருது: 37 அமைப்புகளுக்கு கலெக்டர் விஜய்கார்த்திகேயன், எம்.எல்.ஏ.,சு.குணசேகரன் வழங்கினர்
அமிர்தம் தாய்ப்பால் தானம் குழுவிற்கு விருது வழங்கியபோது திருப்பூரில் மோகன் கந்தசாமி அறக்கட்டளை சார்பில் சமூக பணியில் சிறந்து விளங்கும் சமூக சேவை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி திருப்பூர் பீஷ்மார் மோகன்ஜி வி ருது வழங்கும் நிகழ்ச்சி ஷெரிப் காலனியில் உள்ள கிட்ஸ் கிளப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்திராசுந்தரம் அறக்கட்டளைக்கு விருது வழங்கியபோது இந்நிகழ்ச்சிக்கு அத்வைதா ரமேஷ் வரவேற்புரை வழங்கினார். கிட்ஸ் கிளப் கல்விக் குழும தலைவர் மோகன் கே.கார்த்திக் முன்னிலை வகித்தார். ஸ்ரீ மகா சக்தி அறக்கட்டளைக்கு விருது வழங்கியபோது திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ சு.குணசேகரன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.விஜய்கார்த்திகேயன் அனைவருக்கும் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். திருப்பூர் வாய்ஸ் ஆசிரியர் ஷியாம் பாபுவிற்கு விருது வழங்கியபோது வனத்துக்குள் திருப்பூர் குமார்துரைசாமி வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் சமூக பணியில் சிறந...