இந்திரசுந்தரம் தொண்டு நிறுவவனம் சார்பில் 50 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சிறுசேமிப்பு திட்டம் துவக்கம் 

திருப்பூரில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்திரசுந்தரம் தொண்டு நிறுவவனம் சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள் சுமார் 50 பெண்குழந்தைகளுக்கு செல்வமகள் சிறுசேமிப்பு திட்டத்திற்கு அஞ்சலகத்தில் கணக்கு துவங்கி கொடுக்கப்பட்டது. 



இது பற்றி இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் இந்திராசுந்தரம் பேசுகையில்:-


மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்காக்க கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் (sukanya samruddhi yojana). இத் திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும்.



மாதம் சுமார் ரூ 500 வீதம் 15 வருடங்களுக்கு 90,000 செலுத்தினால் முதிர்வு தொகையாக 1,83,488 கிடைக்கும். இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக மாதம் 250 முதல் அதிகபட்சமாக மாதம் 12,500 வரை செலுத்தலாம். மதம் 12,500 செலுத்தும்போது முதிர்வு தொகையாக 68,37,216 கிடைக்கும். சாமானியரும் இத்திட்டத்தில் இணைய வேண்டும் என்று மத்திய அரசு குறைந்த தவணையாக ரூ 250 செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் குமார்நகர் துணை அஞ்சலக அதிகாரி உமாமகேஸ்வரி என்னிடம் தொடர்புகொண்டு மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள் சுமார் 50 பேருக்கு அஞ்சலக கணக்கு துவங்கி கொடுக்குமாறு தெரிவித்தார். அதனை தொடர்ந்து நமது இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் அஞ்சலக கணக்கு துவங்கி கொடுத்துள்ளேன். சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தைகளுக்கு அஞ்சலக கணக்கு துவங்கி கொடுத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார். 


 


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்