திருப்பூர் நொய்யல் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற அண்ணன் தம்பி மூழ்கி பலி


திருப்பூர் பெரிய கடை வீதியை சேர்ந்தவர் பஷீர். இவர் திருப்பூரில் பிரிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன்கள் சபீர் (வயது 11), சபீர் (7) இருவரும் நேற்று மாலை முதல் காணவில்லை. இதுகுறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பஷீர் புகார் செய்து உள்ளார்.இந்நிலையில் இன்று காலை திருப்பூர் மின் மயானம் அருகில் உள்ள நொய்யல் தடுப்பணையில் சிறுவர்கள் இருவரும் பிணமாக மிதந்து உள்ளனர்.

 


 

இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் இருவரும் நொய்யல் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற போது மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மேலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்