தாளவாடி அருகே சூசையபுரம் கல்குவாரி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் அச்சம்







 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த சூசையபுரம் பகுதியானது தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்டது.சூசையபுரம் பகுதியில் செயல்படாத கல் குவாரிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் பதுங்கி உள்ளன. இந்த சிறுத்தைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து ஆடு,மாடு,நாய் போன்ற கால்நடைகளை  கடித்து கொன்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு புஷ்பராஜ் என்பவரது தோட்டத்தில் வீட்டில் வளர்த்து வந்த நாயை கடித்து இழுத்து சென்றது.மேலும் இருதயசாமி என்பவரது தோட்டத்தில் சிறுத்தையின் கால் தடம் பதிந்துள்ளது.இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ச்சியாக அப்பகுதியில் விவசாய நிலங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


 

 









 



 



 



 



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்