Posts

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Image
 திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் ஒரே நாளில் நடைபெற்ற மூன்று தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.  கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் தேர்த் திருவிழா பிப். 21ஆம் தேதி கொடியேற்றறத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதிகாலையில் விநாயகர், திருமுருகநாதர், வள்ளி, தெய்வானை, பார்வதி, சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. கரோனா விதிமுறைகளுக்கு உள்பட்ட மாலை 3 மணி அளவில் திருமுருகநாதர் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டமும் நடைபெற்றது. இதையடுத்து, சண்முகநாதர் திருத்தேர், அம்மன் திருத்தேர் தேரோட்டம் ஆகிய மூன்று தேர்களும் ஒரே நாளில் தேரோட்டம் நடைபெற்றது.  திருத்தேர் ரத வீதிகள் வழியாகச் சென்று நிலையை அடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரோகரா கோஷம் முழங்க திருத்தேரை வடம்ப...

சென்னை சாலையில் திடீர் பள்ளம்: பரபரப்பு

Image
ஆலந்தூர் பகுதியில் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு சென்னை நங்கநல்லூர் பிரதான சாலையில் கழிவுநீர் குழாயில்  உடைப்பு ஏற்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் கழிவு நீர் உடைப்பு ஏற்ப்படு இருந்த சாலையில் தற்போது திடீரென 10 அடி அகலத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதைக்கண்டு அப்பகுதி மக்களும்,வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து ஆலந்தூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பள்ளத்தை பார்வையிட்டு வருகின்றனர். தற்போது அந்த சாலையில் அப்பகுதி மக்களே தடுப்புகள்,கற்க்கள் அமைத்து சாலை மூடியுள்ளனர்.இதனால் அவ்வழியாக செல்லகூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதி அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்ப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. [17:18, 09/12/2020] Ta Gudiyatham Vengatesh: கிராமங்களில் உள்ள பயனாளிகளை தேடிச்சென்று விசாரணை நடத்தி உடனடியாக பழங்குடியினர் மற்றும் இருளர் சான்றிதழ்களை வழங்கும் குடியாத்தம் கோட்டாட்சியர்.    ...

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது -ரஜினிகாந்த்

Image
ஜனவரியில் கட்சி துவங்க உள்ளதாகவும் டிசம்பர் 31 ல் அதற்கான தேதி அறிவிப்பதாகவும்   ரஜினிகாந்த் அறிவித்தார். அதனை  தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.    இதற்கிடையே சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.  அவர் பேசுகையில் :- 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக கடந்த 2017 ம் ஆனது தெரிவித்திருந்தார். அதை நியாபகப்படுத்தி மக்களிடம் ஒரு எழுற்சி வரவேண்டும் என்று காத்திருந்தேன் அந்த நாள் வந்துவிட்டது  கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தாலும் அதுமக்களின் தோல்வி. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும். அரசியல் மாற்றம் நடக்கும்.   இவ்வாறு தெரிவித்தார்  

அவிநாசி அருகே விபத்து: லாரியில் சிக்கி 3 பேர் பலி

Image
 அவிநாசி அருகே சேலம்- கோவை ஆறுவழிச்சாலையில் முன்னே சென்ற லாரி மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் பைக்கில் சென்ற மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி.    ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கொச்சின் நோக்கி லாரி சென்றுகொண்டிருந்தது.   அவிநாசி அருகே சேலம் - கோவை ஆறுவழிச் சாலையில் வரும்போது பெருமாநல்லூரிலிருந்து அவிநாசி நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது.   இதில் ஒரே பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இதையடுத்து லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பியோடினார்.   சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுருகன்பூண்டி போலீசார் பிரேதங்களை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.   விபத்தால் சேலம் -கோவை ஆறுவழிச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தொடர்ந்து போலீசார் மேற்கொண் விசாரணையில் அவிநாசியை அருகே உமையங்செ...

அமித்ஷா வருகைக்காக, சென்னை விமான நிலையத்தில் பழங்கள், மலர்களால் அலங்காரம்

  மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா வருவதால் சென்னை விமான நிலையம் பழ, காய், மலர் அலங்கார வளைவு மத்திய உள்துறை மந்திரியும் பா.ஜ.க. மூத்த தலைவருமான அமீத்ஷா டெல்லியில் இருந்து நாளை (21ந் தேதி) தனி விமானத்தில் புறப்பட்டு பகல் 1.40 மணிக்கு  சென்னை வந்து சேருகிறார். மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வரும் அமீத்ஷாவிற்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு முடிந்த பின் மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு கேட் எண் 6 வழியாக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் லீலா பேலஸ் சென்று ஓய்வு எடுக்கிறாா். மாலை 4 மணிக்கு ஹோட்டல் லீலா பேலசில் இருந்து புறப்பட்டு கலைவானா் அரங்கம் செல்கிறாா். அங்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.  விழாவில்  முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்து கொள்கின்றனர்.  விழா முடிந்து மாலை 6.30 மணிக்கு மீண்டும் ஹோட்டல் லீலா பேலசுக்கு வந்து  சேருகிறாா். அங்கு பாஜக நிா்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகா்களை சந்தித்து பேசுகிறாா். மறுநாள் 22ந் தேதி (ஞாயிறு) காலை ஹோட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை மீனம்பாக்கம்  பழைய வி...

சென்னையில் ரூ. 2.6 கோடி மதிப்புள்ள 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 6 பேர் கைது

Image
 துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த  ரூ. 2 கோடியே 6 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ தங்கம் பறிமுதல் 6 பேர் கைது சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு  விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி  கொண்டே வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த சென்னையை சேர்ந்த பர்கத் பாஷா(36), சக்லா சர்தார்(55), கடலூரை சேர்ந்த சாகுல் அமீது(39), சேலத்தை சேர்ந்த சையத் அகமது(26), ராமநாதபுரம் எஸ்.பி.பட்டிணத்தை சேர்ந்த முகமது பைசூல்(24), ராமநாதபுரம் பாசிப்பட்டிணத்தை சேர்ந்த ஆதாம்(41) ஆகிய 6 பேரை  சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.  அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் கருப்பு நிற டேப் ஒட்டப்பட்ட 2 பெட்டலங்கள் இருந்தன. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென...

பச்சைமலை முருகன் கோவில் சூரசம்ஹார விழா: சூரனை வதம் செய்தார் முருகன்

Image
 கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலமுருகன் கோயிலில் சூரசம்கார நிகழ்வு குறைந்தளவு பக்தர்களுடன் கோயில் பிரகாரத்திலேயே நடைபெற்றது. முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் ஒருமுறை கொங்கு நாட்டிற்கு எழுந்தருளினார். குன்னத்தூர் அருகே வந்துää சிவ பூஜை செய்ய சரியான இடத்தை தேட முற்பட்டார். அப்போது ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அமைந்துள்ள மொடச்சு10ர் என்னும் ஊர் தான் சிவ பூஜை செய்ய சரியான இடம் என்பதை ஞான திரிஷ்டியால் உணர்ந்து அங்கு வந்து சிவ பூஜை செய்ய முற்படுகிறார். அப்போது குறை தீர்க்கும் குமரக் கடவுளை காண எண்ணி அவரது மனம் பூஜையில் திளைக்க மறுக்கிறது. குறை தீர்க்கும் குகனை எண்ணி தவத்தால் அருகில் உள்ள பச்சைமலை என்னும் குன்றை அறிகிறார். அங்கு அவருக்கு பாலதண்டாயுதபானியாக முருகன் காட்சி அளிக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் பச்சைமலையில் நிலையாகக் குடிகொள்கின்றான். துர்வாசர் முருகனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்கிறார். இவ்வாறு பிரதித்தி பெற்ற அருள்மிகு பச்சமலை பாலமுருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கந்த சஷ்டி சூரசம்காரவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ச...