Posts

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

Image
  வரும் சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இதில் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு எஸ் ஆர் ராஜாவும், பல்லாவரம் தொகுதிக்கு இ.கருணாநிதியும், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு தா.மோ.அன்பரசன், சோழிங்கநல்லூர் தொகுதிக்கு அரவிந்த் ரமேஷ் ஆகியோரை அறிவித்துள்ளார். நான்கு பேரும் ஏற்கனவே அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளனர்.மீண்டும் அவர்களுக்கே அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்புயளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தாம்பரம்,பல்லாவரம், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் தாம்பரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் திமுக கொடியை ஏந்தி முக்கிய சாலைகளான சண்முகம் சாலையில் காந்தி ரோடு ஆகிய சாலைகளில் பேரணியாக நடந்து வெற்றி சின்னம் உதயசூரியன் என கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர்.

சேலம் தாதகாப்பட்டி அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாஸ்தா ஐயப்பன் தேவஸ்தானத்தில் சர்வேஸ்வரருக்கு மகா சிவராத்திரி முன்னிட்டு நான்கு கால அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை சிறப்பாக நடைபெற்றது

Image
 சேலம் தாதகாப்பட்டி அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாஸ்தா ஐயப்பன் தேவஸ்தானத்தில் சர்வேஸ்வரருக்கு மகா சிவராத்திரி முன்னிட்டு நான்கு கால அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை சிறப்பாக நடைபெற்றது.  நான்காம் காலமாக அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் அர்ச்சகர் கோபி சுரேஷ் , பாலா, சதாசிவம்  சிறப்பாக அலங்காரம் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கும்ப ஆரத்தி  பஞ்ச கற்பூர ஆரத்தி மற்றும் மகா கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேணுகோபால் சண்முகவல்லி குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்

சேலம் சந்தைப்பேட்டை அருகே அமைந்துள்ள 100 ஆண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ சதாசிவ மஞ்சுநாதேஸ்வர ஸ்வாமி (சித்தர் முக சுயம்பு லிங்க வடிவம்)

Image
 சேலம் சந்தைப்பேட்டை அருகே அமைந்துள்ள 100 ஆண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ சதாசிவ மஞ்சுநாதேஸ்வர ஸ்வாமி (சித்தர் முக சுயம்பு லிங்க வடிவம்)  தேவி ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவில் மகா சிவராத்திரி முன்னிட்டு  சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆறுகால பூஜை சிறப்பாக நடைபெற்றது இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விபூதி குங்குமம் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் நாகேந்திரன்,எழில் மற்றும் சிவராத்திரி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்

சாா்ஜாவிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் ரூ.65.7 லட்சம் மதிப்புடைய 1.12 கிலோ தங்கம், ஐபோன்கள்,கைக்கடிகாரங்கள்,வெளிநாட்டு சிகரெட்கள் கடத்தல்

Image
  சாா்ஜாவிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் ரூ.65.7 லட்சம் மதிப்புடைய 1.12 கிலோ தங்கம், ஐபோன்கள்,கைக்கடிகாரங்கள்,வெளிநாட்டு சிகரெட்கள் கடத்திவந்த ராமநாதபுரத்தை சோ்ந்தவா் சென்னை விமானநிலையத்தில் கைது. சாா்ஜாவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு சிறப்பு விமானம் இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த ராஜாமுகமது (42) என்ற பயணியின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனா். அவருடைய உள்ளாடைகளுக்குள்   ரூ.52 லட்சம் மதிப்புடைய 1.12 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா். மேலும் அவருடைய சூட்கேஷ்,பையை சோதனையிட்டனா். அவைகளுனுள் ஐபோன்கள்,கைக்கடிகாரங்கள்,வெளிநாட்டு சிகரெட்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா். அவைகளின் மதிப்பு   ரூ.13.7 லட்சம். இதையடுத்து ரூ.65.7 லட்சம் மதிப்புடைய தங்கம் மற்றும் பொருட்களை கடத்தி வந்த பயணி ராஜாமுகமதுவை சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 43 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

Image
கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 43 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.   சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் விழிப்புணர்வு ராட்சச பலூன் பறக்க விடப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கூறுகையில் கோவை மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 43 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.சட்டமன்ற தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி 14 ம் தேதியும் இரண்டாம் கட்ட பயிற்சி 26 ம் தேதியும் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் சிரமமின்றி வசதிகள் செய்யப்பட்டுள்ளன எனவும் கிருமி நாசனி மற்றும் கையுறைகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கபட்டு உள்ளததாக...

தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிட்லபாக்கம் பேரூராட்சி அரசு ஊழியர்கள் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டுமென தேர்தல் பிரச்சார விழிப்புணர்வு பேரணி நடத்தினர்

Image
தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிட்லபாக்கம் பேரூராட்சி அரசு ஊழியர்கள் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டுமென தேர்தல் பிரச்சார விழிப்புணர்வு பேரணி நடத்தினர் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து பொதுமக்களுக்கு அரசு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிட்லபாக்கம் பேரூராட்சியில் அரசு ஊழியர்கள் 100% வாக்களிக்க வேண்டுமென தேர்தல் பிரச்சார விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் தேர்தல் நாளில் நேர்மையாக வாக்களிக்க வேண்டும், பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும், மனசாட்சிக்கு பயந்து வாக்களிக்கவேண்டும், நல்லது செய்யும் நபரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு வாக்களிக்க வேண்டும். போன்ற வாசகங்களை பதாகைகளாக ஏந்தியவாறு சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட முக்கிய  சாலைகள் மார்க்கமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சிட்லபாக்கம் பேரூராட்சி கழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வரும் சட்டமன்ற தேர்தல் ...

சேலம் அம்மாபேட்டையில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மிகவும் சக்திவாய்ந்த ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் மாசி மாத திருவிழா

Image
சேலம் அம்மாபேட்டையில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மிகவும் சக்திவாய்ந்த ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் மாசி மாத திருவிழா முன்னிட்டு இன்று உற்சவர் காளியம்மனை சிம்ம வாகனத்தில் சிறப்பாக அலங்காரம் செய்திருந்தனர்.  இதனை தொடர்ந்து மேலும் உற்சவருக்கு இருபுறம் சிங்க வாகனமும் ஏராளமான கற்கள் பதித்த நகை ஆபரணங்களால் சிறப்பாக அலங்காரம் செய்து மேடையில் கொழுவிருக்க  செய்தனர் மூலவர் ஸ்ரீ காளி அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது அர்ச்சகர் குணா சிறப்பாக அலங்காரம் செய்தார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட பம்பை குழுவினர் பம்பை முழங்க காளியம்மன் வேடமிட்டு பக்தர் ஜவகர் பச்சைக் காளி அம்மன் வேடமிட்டார்.  இதனை தொடர்ந்து 108  மாவிளக்கு ஊர்வலம் சக்தி அழைப்பு சிறப்பாக நடைபெற்றது இதனைத் தொடர்ந்து வருடம் தவறாமல்  காளியம்மன் வேடமிட்டு பக்தர் ஜவகர் விழாவில் சிறப்பாக காளியம்மனை  வழிபடுகிறார். இந்நிகழ்ச்சியில் திருக்கோவில் அறங்காவலர் மோகன்குமார், ஸ்ரீதர் மற்றும் திருக்கோவில் அர்ச்சகர் ரங்கநாதன், வரதராஜ், வெங்கட்ராமன், ராஜசேகர் மற்றும் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்...