சாா்ஜாவிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் ரூ.65.7 லட்சம் மதிப்புடைய 1.12 கிலோ தங்கம், ஐபோன்கள்,கைக்கடிகாரங்கள்,வெளிநாட்டு சிகரெட்கள் கடத்தல்

 
சாா்ஜாவிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் ரூ.65.7 லட்சம் மதிப்புடைய 1.12 கிலோ தங்கம், ஐபோன்கள்,கைக்கடிகாரங்கள்,வெளிநாட்டு சிகரெட்கள் கடத்திவந்த ராமநாதபுரத்தை சோ்ந்தவா் சென்னை விமானநிலையத்தில் கைது.



சாா்ஜாவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு சிறப்பு விமானம் இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த ராஜாமுகமது (42) என்ற பயணியின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனா். அவருடைய உள்ளாடைகளுக்குள்  

ரூ.52 லட்சம் மதிப்புடைய 1.12 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா். மேலும் அவருடைய சூட்கேஷ்,பையை சோதனையிட்டனா். அவைகளுனுள் ஐபோன்கள்,கைக்கடிகாரங்கள்,வெளிநாட்டு சிகரெட்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா். அவைகளின் மதிப்பு  

ரூ.13.7 லட்சம். இதையடுத்து ரூ.65.7 லட்சம் மதிப்புடைய தங்கம் மற்றும் பொருட்களை கடத்தி வந்த பயணி ராஜாமுகமதுவை சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்