தூத்துக்குடியில் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் - கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.!

தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் அருகில் தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலைய திறப்பு விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் மற்றும் இதர கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜ.பெரியசாமி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி முதல் விற்பனையை துவக்கிவைத்தார். சமூக நலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில், 847 பயனாளிகளுக்கு ரூ.4.87 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் காய்கறி தொகுப்பு பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட தன்னார்வளர்கள் 5 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்விழாவில், தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் முனைவர். ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சிவகாமி, மாநில பொதுக்குழ...