பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் பன்வாரிலால் புரோகித்.!


தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடியை இன்று சந்தித்து பேசுகிறார்.

இதற்காக நேற்று இரவு 9.50 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசும்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், கொரோனா தடுப்புக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்து தெரிவிப்பார் என தெரிகிறது. மேலும் கவர்னரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய இருப்பதால்  ,                புது ஆளுநர் நியமன ஆலோசனையாக கூட இந்த சந்திப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது

பிரதமர் நரேந்திரமோடியுடனான இந்த சந்திப்பு திடீர் சந்திப்பாக கூறப்பட்டாலும், ஏற்கனவே முன் அனுமதி பெற்ற பிறகே இந்த சந்திப்பு நடைபெறுவதாக தமிழக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை முதல் முறையாக சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி