Posts

Showing posts from May, 2026

தூத்துக்குடி :பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - இன்ஸ்பெக்டர் மீது புகார்.!

Image
  தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் ஆய்வாளர் திலீபன் மீது மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் சிங்கப்பெண் பாதுகாப்பு படைக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பணிமாறுதல் வழங்காமல் அதிக பணிச்சுமை கொடுத்ததாகவும், இதுகுறித்து தனது கணவர் கேட்டபோது துப்பாக்கியை காட்டி மார்பில் சுட்டுவிடுவதாக சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டியதாகவும் புகார்

தூத்துக்குடி : 3000 ஏக்கர் உப்பள நிலத்தை கையகப்படுத்தி கப்பல் கட்டு தளம் - "பிரச்சனையை முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்" : அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளக்காடு, முத்தையாபுரம், பொட்டல்காடு, சவேரியார்புரம், தங்கம்மாள்புரம் பழைய காயல், புல்லாவெளி ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 3000 ஏக்கர் உப்பளத்தை கையகப்படுத்தி கப்பல் கட்டு தளம் அமைப்பதற்கான நடவடிக்கை கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. ஒப்பந்தம் கோரப்பட்டு அதன் அடிப்படையில் பணி செய்வதற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.   இந்த நிலையில் உப்பளத்தை கையகப்படுத்தினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கோவளம், பசுவந்தரை தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியின்போது தமிழக முதலமைச்சர் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்களிடமும் கட்சித் தலைவர்களிடமும் கோரிக்கை மனு அளித்தோம், இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ஸ்ரீநாத்தை சந்தித்து எங்களின் உப்பளப் பகுதியை பார்வையிட வரவேண்டும் என்று சங்கத்தின் சார்பில் கோ...

தூத்துக்குடியில் ஜூன் 3-ல் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அறிக்கை!

Image
  தூத்துக்குடி கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஜூன் 3-ம் தேதி அனைத்துப் பகுதிகளிலும் திமுக கொடியேற்றி, இனிப்புகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி கொண்டாட வேண்டும் என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "முன்னாள் முதல்வர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளைக்கழக அமைப்புகள் தோறும் வரும் ஜூன் 3-ம் தேதி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். மேலும், கழக கொள்கை விளக்கப் பாடல்களை ஒலிபரப்பச் செய்தும், திமுக கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகளுடன் உணவு வழங்கியும் கழக நிர்வாகிகள் மக்கள் பயனுறும் வகையில் கொண்டாட வேண்டும்.  நவீன தமிழகத்தின் சிற்பி எனப் போற்றப்படும் கலைஞர், தமிழக...

தாமிரபரணி இலக்கிய பேரவை சார்பில் பெருங்குளம் மாதவையா மறைந்த நூற்றாண்டு நினைவேந்தல் விழா.!

Image
தூத்துக்குடி தாமிரபரணி இலக்கிய பேரவை சார்பில் பஜனை மடம் சன்னதி தெரு பெருங்குளத்தில் மாதவையா நூற்றாண்டு நினைவேந்தல் விழா நடைபெற்றது விழாவிற்கு பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவரும் மருத்துவருமான புவனேஸ்வரி தலைமை வகித்தாா். சீனிவாசன் கண்ணன் ஆறுமுக பாண்டியன் பேச்சிமுத்து வெங்கடாச்சாரி கதிர்வேல் ராமானுஜம் சோலைமலை பாலாஜ கோமதி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் எழுத்தாளர் மணிமொழி செல்வன் வரவேற்புரையாற்றினார் கணபதி சுப்ரமணியம் வழக்கறிஞர் மணி காசிராஜன் ஓய்வு ஆசிரியர் ஆறுமுகப்பெருமாள் புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோா் அறிமுக உரையாற்றினாா்கள். பேராசிரியர்கள் ராமச்சந்திரன் சத்தியபாலன் இளங்கோமணி முனைவர் மணிமொழி செல்வன் முதல் ஆசிரியர் பாலசுப்ரமணியன் கவிஞர் சாகுல் ஹைக்கூ மற்றும் தன் முனைக் கவிஞர் ஓவியர் வரவுணன் ஆகிய விருது பெற்ற படைப்பாளர்களுக்கு பாராட்டு மற்றும் படைப்பாளுமை விருது வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் ஏரல் ராஜன் நன்றியுரையாற்றினாா்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய அசனப் பெருவிழா.!

Image
  தூத்துக்குடி இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய மாபெரும் அசனப் பெருவிழா பங்குத்தந்தை செல்வரத்தினம் தலைமையில் உதவி பங்கு தந்தை மார்க்கோனி  முன்னிலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று அசன பெருவிழா நடைபெற்றது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டு சாப்பிட்டு சென்றனர் அசன நிகழ்வுக் கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் மரிய ரீகன் ஊர் பொருளாளர் ரமேஷ் மற்றும் ஊர் நிர்வாகிகள் திலக் மற்றும் ஜீனியஸ் மற்றும் ராகுல் சிங் ஆகியோர் அருட் சகோதரிகள் ஊர் இறை மக்கள் அனைத்து சபைகளும் ஆலயங்களும் சிறப்பாக செய்தனர்

ஸ்ரீசித்தர்பீட குருமகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேக விழா நடைபெற்றது.

Image
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வருக்கும் நந்திக்கும் வைகாசி மாத பவுர்ணமி முன்னிட்டு சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து குருமகாலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தாா். தொடர்ந்து, பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவேண்டியும், பக்தர்கள் வாழ்வில் செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவருக்கு யாகம் மற்றும் மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட 16வகையான அபிஷேக வழிபாடுகளும், தீபாராதனையும் நடைபெற்றது. முடிவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தூத்துக்குடி வட்டக்கோவில் எபனேசர் ஆலயத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் புத்தகப்பை வழங்கப்பட்டது

Image
  தூத்துக்குடி வட்டக்கோவில் நாசரேத் திருமண்டலம் கிருஷ்ணராஜபுரம் சேகரத்தை சேர்ந்த எபனேசர் ஆலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகம் வாட்டர் பாட்டில்  பென்சில் பேனா டப்பா  மற்றும்  புத்தகப்பை வழங்கப்பட்டது ஆலய சேகர குரு விஜய் மோகன்ராஜ் தலைமை தாங்கி ஜெபம் செய்து நலத்திட்டங்களை வழங்கினார் இதற்கான ஏற்பாடுகளை ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் செய்தனர்

பள்ளி திறப்பை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு.!

Image
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஜின்பேக்டாி ரோடு மாநகராட்சி பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ரியங்கா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனா்.  பின்னா் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சி பகுதியில் எங்களது நிர்வாகத்தின் கீழ் தொடக்கபள்ளி 8 நடுநிலைப்பள்ளி 11 மேல்நிலைப்பள்ளி 1 என மொத்தம் 20 பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி தோ்வுக்குபின் கோடை விடுமுறை முடிந்து வரும் 4ம் தேதி வியாழக்கிழமை பள்ளி திறக்கப்படும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  அதன்படி எல்லா பள்ளிகளிலும் எதிர்கால தலைமுறையினரான மாணவ மாணவிகள் நலன் கருதி பள்ளியில் உள்ள நிர்தேக்க தொட்டி கழிவறை விளையாட்டு மைதானம் மற்றும் ஆங்கில வழி கல்வி அறைகள் உள்ளிட்டவைகளை முழமையாக ஆய்வு செய்தோம். தேவையற்ற இடங்களில் இருக்கும் தேவையற்ற பொருட்களையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளோம் தற்போது மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை தேவையான அனைத்து கட்டமைப்புகளும் தற்போதைய காலத்திற்கு ஏற்ப செய்து கொடுத்துள்ளோம்.  அதனால் கடந்த ஆண்டு முதல...

தூத்துக்குடி அருகே கீழ அரசடியில் பெட்ரோல் பங்கை சூறையாடிய போதை கும்பல் :ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.! - தொடரும் குற்றச் செயல்களால் தொழில் செய்ய முடியாத நிலை என உாிமையாளா் திாிஷா குற்றசாட்டு.!

Image
தூத்துக்குடி தருவைகுளம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள கீழரசடியில் உள்ள பெட்ரோல் பங்க் திருவிக நகரை சேர்ந்த திரிஷா என்ற உரிமையாளர் நிர்வகித்து வருகிறார்.  இந்நிலையில் நேற்றிரவு பெட்ரோல் பங்கில் இரண்டு சக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக மூன்று நபர்கள்  போதையில் வந்துள்ளனர். மூன்று நபர்களில் ஒருவர் மட்டும் பெட்ரோல் பங்க் அருகில் பொதுமக்கள் முன்னால் மற்றும் விற்பனை கட்டிடம் முன்பு சிறுநீர் கழித்து உள்ளனர். அவரை பெட்ரோல் பங்க் ஊழியர் இங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது. சிறுநீர் கழிப்பிடத்தில் கழிக்குமாறு கூறினர். பின்பு ஆணுறுப்பை காட்டிக் கொண்டு தொடர்ச்சியாக போதையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் போதை நபர்களுக்கும் ஏற்பட்ட வாய் தகறாரில் மேற்படி 2 நபர்கள் பெட்ரோல் பங்க் ஊழியரை கையைப் பிடித்துக் கொண்டு நெஞ்சில் குத்தி உள்ளனர். பின்பு கெட்ட வார்த்தைகளால் உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என கூறிவிட்டு அங்கிருந்து மூவரும் சென்று விட்டனர்.  பின்னர் ஒரு மணி நேரத்துக்கு பின்பு அந்த மூவரும் கூடுதலாக  ஐந்துக்கும்  மேற்பட்ட நபர்களை அழைத்துக் கொண்டு கையில்...

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கோடை கால இலவச ஓவிய பயிற்சி நிறைவு விழா.!

Image
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆவது பிறந்தநாள் மற்றும் மே.01 தொழிலாளர் தினம் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச கோடைக்கால ஓவியப்பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. ஒருமாதம் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பு 30-05-2026 அன்று நிறைவுபெற்றதையொட்டி மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் ஓவிய வண்ணம் தீட்டும் உபகரணங்கள் வழங்கும் நிறைவு விழா வேலூர் மாவட்ட  பகுத்தறிவாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு தலைமையில் குடியேற்றம் புவனேசுவரிப்பேட்டை பெரியார்  அரங்கில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.  வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆசிரியர் பி.தனபால்  அனைவரையும் வரவேற்றார் குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் ப.ஜீவானந்தம்  இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மேனாள்  மாவட்ட செயலாளர் தி.க. கு. இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் சி.லதா, மாவட்ட மகளிர் அணி தலைவர் இரா.ராஜகுமாரி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியேற்றம் நகர திராவிடர் கழகத் தலைவர் சி.சாந்தகுமார்  இந்நிகழ்வில் புரட்சி பாடல்களை பாடினார். வேலூர் மாவட்ட பகுத்தறிவ...

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் நகர ஒன்றிய செயலாளர்கள் நியமனம் .!

Image
  வேலூர் மே.31 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர்  பூபாலன் குடியாத்தம் நகர செயலாளர் சம்பத்குமார் கிழக்கு ஒன்றிய செயலாளர் முரளி ஆகியோருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பதவி நியமனம் செய்தார். தொடர்ந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர ஒன்றியம் கட்சியின் நிர்வாகிகள் சார்பில் குடியாத்தம் காமராஜர் பலம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.பாண்டுரங்கன் வேலூர் மாநகர செயலாளர் சதீஷ்குமார் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சிட்டிபாபு கழக அமைப்பு செயலாளர் ராஜா தர்மலிங்கம் காசி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் மேலும் நகர பொருளாளர் நவ்ஷாத் நகர நிர்வாகிகள் கார்த்தி தனஞ்செயன் ஹரிராஜா ராஜேஷ் மற்றும் பேரணாம்பட்டு நகர கழகச் செயலாளர் சுரேஷ் மற்றும் ஜெயபிரகாஷ் காதர் தினேஷ்குமார் ஹோமத்குமார் ஜீவா தினேஷ்குமார் சரவணன் மாதனூர் ஒன்றிய காலகட்ட செயலாளர் சம்பத் குமார் வேலூர் மாவட்ட நகர மாவட்ட துண...

ஆரல்வாய்மொழி: டெம்போ மீது கார் மோதல்: தாய், மகன் உள்பட 3 பேர் பலி:விபத்தில் இறந்த உறவினரை பார்க்க வந்த போது சோகம்.!

Image
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சிறுமளஞ்சி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவருடைய மனைவி துரைச்சி (வயது 42). இந்த தம்பதியின் மகன் கிஷோர் (18). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். துரைச்சியின் தம்பி சுரேஷ் (40). இந்தநிலையில் சுரேஷின் மைத்துனர் ஒருவர், விபத்தில் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து அவரது உடல் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. மைத்துனர் இறந்த செய்தியை கேட்டதும் சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார். தனது அக்காள் துரைச்சி, கிஷோர், சித்தி சிவகாமி (55) ஆகியோருடன் நேற்று நாகர்கோவில் நோக்கி சுரேஷ் காரில் வந்தார். அந்த காரை சுரேஷ் ஓட்டினார். ஆரல்வாய்மொழி அருகே வெள்ளமடம் நான்கு வழிச் சாலையில் கார் வந்தது. அங்கு பழுதான டெம்போ ஒன்று சாலையோரம் நிறுத் தப்பட்டிருந்தது. எதிர்பாராதவிதமாக கார், அந்த டெம்போ பின் புறம் பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 4 ...

ஏடிஎம்-ல் உதவி செய்வது போல் நடித்து ரூ.3.75 லட்சம் மோசடி செய்த நபர் கைது!

Image
  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு தெருவில் உள்ள ஏடிஎம் மையத்தில், 70 வயது முதியவருக்கு பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து, அவரது ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19.05.2026 அன்று நடந்த இந்த சம்பவத்தில், அடையாளம் தெரியாத நபர் முதியவருக்கு பயனற்ற ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு, அவரது உண்மையான ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கிலிருந்து ரூ.3,75,000 பணத்தை எடுத்துள்ளார். இதுகுறித்து முதியவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், சிவகாசியைச் சேர்ந்த மாரிமுத்து (41) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.90,000 ரொக்கம், புதிய தொலைக்காட்சி பெட்டி மற்றும் ஒரு கைபேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். ஏடிஎம் மையங்களில் தெரியாத நபர்களின் உதவியை பெறும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Image
கடையநல்லூர் அருகே பரபரப்பு: திருட சென்ற கடைக்கு தீ வைத்த கொள்ளையன்.!!- பணம் குறைவாக இருந்ததால் ஆத்திரம்.!! கடையநல்லூர் அருகே திருடச் சென்ற கடையில் பணம் குறைவாக இருந்ததால் கடைக்கு தீ வைத்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் அருகே சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அரு கில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பலசரக்குக் கடை உள்ளது இந்தக் கடையை சொக்கம் பட்டி கென்னடி தெருவை சேர்ந்த மாடசாமி மகன் கண் ணன் என்பவர் நடத்தி வருகி றார். அவர் நேற்று முன்தினம் இரவில் கடையை அடைத்து விட்டு சென்று விட்டார். நேற்று அதிகாலை அருகி லுள்ள டீக்கடைக்காரர் டீக்க டையை திறக்க வந்தபோது கண்ணனுடைய பலசரக்குக் கடை தீப்பிடித்து எரிந்து கொண் டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில் கடையின் உரிமையாளர் கண்ணன் விரைந்து வந்தார். அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தார்.' இருப்பினும் கடைக்குள் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்பி லான பொருட்கள் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து தகவலறிந்த சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை ந...

மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமியிடம் தூத்துக்குடி பிரஸ் கிளப் கோாிக்கை.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தமிழ் வழிச்சாலையில் தூத்துக்குடி பிரஸ்கிளப் செயல்பட்டு வருகிறது. அதில் செய்தியாளா்கள் புகைப்படகாரா்கள் ஔிப்பதிவாளா்கள் பணியாற்றி வருகின்றனா் அதன் உள்பகுதியில் சிறுவா் சிறுமியா் மழலைகள் பயின்று வரும் அங்கன்வாடி மையமும் இருந்து வருகிறது. அதன் உட்புறப்பகுதி தாழ்வானதாக இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் கொசு, மற்றும் பல நோய்களை உருவாக்கும் கிருமிகள் உற்பத்தியாகி சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் இருந்து வருகிறது.  அதே போல் முன்பகுதியில் மாநகராட்சி சாா்பில் பிரதான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் மாநகராட்சி சாா்பில் பேவா்பிளாக் பதித்து மக்கள் நலனில் பாதுகாத்து ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திாிக்கைதுறையினருக்கும் தேவையான கோாிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று மாநகராட்சி அலுவலகத்தில் பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் மேயா் ஜெகன் பொியசாமியை சந்தித்து கோாிக்கை மனு வழங்கப்பட்டது. பெற்றுக் கொண்ட மேயா் ஜெகன் பொியசாமி விரைவாக இந்த கோாிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தாா். கௌரவ ஆலோசகா்கள...

கர்நாடகாவில் சொத்து தகராறில் பயங்கரம் : ஒரே குடும்பத்தில் 6 பேர் படுகொலை - அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கும்பல் வெறிச்செயல்.!

Image
  பெங்களூரு, மே.30- விஜயாப்புரா அருகே சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை வெட்டிக் கொலை செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் கோவிந்தாப்புரா கிராமத்தை சேர்ந்தவர் அப்பு கவுடா. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவணசித்தப்பா. இவர்கள் 2 பேர் குடும்பத்தின ருக்கும் இடையே 10 ஏக்கர் நிலத்துக்காக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த வாரம் இரு குடும்பத்தினரிடையேயும் சொத்து குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்து நடத்தி தீர்த்து வைத்ததனர். பின்னர் நேற்று முன்தினமும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்படவே, இதனை தீர்த்து வைக்க மீண்டும் ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பஞ்சாயத்துக்கு வந்திருந்த ரேவணசித்தப்பாவின் குடும்பத்தினரிடம் அப்பு கவுடாவின் குடும்பத்தினர் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுசுவார்த்தை நடத்தினர். இருத ரப்பு பேச்சுசுவார்த்தையும் நடந்து கொண்டிருந்தது. அப்போது அப்புகவுட மற்றும் அவ ரது குடும்பத்தினரின் கோரிக்கையை ரேவணசித்தப்பாவும், அவரது குடும்பத்தினரும் ஏற் கவில்லை. அதுபோல...

ரோட்டில் கட்டுக்கட்டாக கிடந்த ரூ.5 லட்சம்... போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு!

Image
 திருப்பூர்: சாலையில்  கட்டு கட்டாக கிடந்த பணத்தை  கண்டெடுத்து ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு  காவல் துறையினர் பாராட்டு. திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்.  ஆட்டோ ஓட்டி வரும்  இவர் வளர்மதி ஆட்டோ ஸ்டாண்டில் தனது வாகனத்தை நிறுத்தி பணி செய்து வருகிறார். இன்று காலை தனது உறவினர் பிரபு என்பவரை அழைத்துக் கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட் செல்லும் பொழுது வளம் பாலம் பகுதியில் கீழே இருந்த பிங்க் நிற பையை எடுத்து பார்த்தபோது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து மதன் உடனடியாக திருப்பூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமாரிடம்  பணப்பையை ஒப்படைத்தார். பையினை சோதனை செய்து பார்த்தபோது 5,64,000 பணம் இருந்தது தெரிய வந்தது. அதே சமயம் ராஜஸ்தானை சேர்ந்த தானாராம் என்பவர் திருப்பூர் வளம் சாலையில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் இன்று காலை தனது கடையிலிருந்து வங்கியில் செலுத்த ஐந்து லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றபோது இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் மாட்டியிருந்த பை கீழே விழுந்து விட்டதாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில்...

நாளை 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Image
தமிழ்நாட்டில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இதுதொடர்பாக வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.திருச்சிராப்பள்ளி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். 31-05-2026 மற்றும் 01-06-2026: ...

அங்கன்வாடி மையம் அருகே முள்புதர்கள், குப்பைகள் அகற்ற கோரிக்கை மாநகராட்சி மீது பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு.!

Image
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சுப்பையா முதலியார்புரம் 3வது தெருவில் அங்கன்வாடி மையமும், நியாயவிலை கடையும் செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் முள்புதர்கள் மற்றும் செடிகள் அதிகளவில் வளர்ந்து காணப்படுகின்றன.  மேலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகிலேயே அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு, அவை நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், அங்கு வரும் குழந்தைகளின் சுகாதாரத்திற்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், புதர்கள் அதிகமாக இருப்பதால் விஷப்பாம்புகள் உள்ளிட்ட விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அங்கன்வாடி மையத்திற்கு வரும் சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.  மேலும் நியாய விலை கடைக்கு தினமும் வருகை தரும் பொதுமக்களும் அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை மாநகராட்சியிடம் புகார் அளித்து, புதர்களை அகற்றி சுத்தம...

தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்.

Image
  தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் எல்லை பாதுகாப்பு படை டிஜிபியாக பணியாற்றி வரும் இவர், இப்போது தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மகேஷ்குமார் அகர்வால் 1994-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. இவர் சட்டம் பயின்றவர். சொந்த மாநிலம் பஞ்சாப் ஆகும். தந்தையும் வழக்கறிஞர் என்பதால் சட்டம் பயின்று பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 22 வயதில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். தேனி எஸ்.பி., தூத்துக்குடி எஸ்.பி., 2001-ல் சென்னை பூக்கடை துணை ஆணையர், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை ஆணையர் எனப் பொறுப்பு வகித்த மகேஷ்குமார் அகர்வால், பின்னர் சொந்த மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் சிபிஐ எஸ்.பி.யாக அயல் பணியில் சென்றார். 7 ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாக பஞ்சாப், ஹரியாணா, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றினார். பின்னர் ஐஜியாகப் பதவி உயர்வுபெற்று தமிழகம் திரும்பிய மகேஷ்குமார் அகர்வால், சிபிசிஐடி ஐஜியாகப் பதவி வகித்தார். பின்னர் மதுரை காவல் ஆணையராகச் சென்றார். மீண்டும் சிபிசிஐடி ஐஜியாகப் பத...

தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷண்னை விமா்சித்து ஆா்ப்பாட்டம் காங்கிரஸ் பிரமுகா் ஆட்டோ சேதம்.!

Image
  இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் அணியை சேர்ந்தவா்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜர் என்பவா் வீட்டிற்கு வந்து ஆட்டோவை உடைத்து அருவாளால் மிரட்டி "எங்கள் அண்ணனை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது" என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காவல்துறை கண்காணிப்பாளரிடம் இதைப் பற்றி புகாராக தெரிவிக்கப்பட்டது.  திமுகவின் சட்ட ஒழுங்கு பிரச்சனை இதோ ஆரம்பமாகிவிட்டது இனி மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இதை காவல்துறையினர் சரியாக கையாள வேண்டும் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை பெற்று தர வேண்டும் இல்லை என்றால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வரை இந்த பிரச்சனையை கொண்டு சென்று இதற்கு ஒரு முடிவு எடுப்போம். சட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது இல்லையேல் சட்டத்தை கையில் எடுக்கவும் காங்கிரஸ் கட்சி த...

“விசாரணை பெயரில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்?”- சென்னையில் எஸ்.ஐ மீது பரபரப்பு புகார்!

Image
சென்னை கொடுங்கையூரில் இளம்பெண்ணிடம் விசாரணை என்ற பெயரில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்டதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. நகை மாயமான விவகாரத்தில் விசாரணைக்கு சென்றதாக கூறப்படும் குற்றப்பிரிவு எஸ்.ஐ தனசேகரன், வீட்டில் இருந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு இளம்பெண்ணிடம் தனியாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அதிகார துஷ்பிரயோகம் செய்து அநாகரீகமாக நடந்து கொண்டதுடன், புகைப்படம் எடுத்து மிரட்டியதாகவும், முத்தம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார். பயந்து கூச்சலிட்ட இளம்பெண்ணை தொடர்ந்து, அங்கிருந்து எஸ்.ஐ தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பைக்கில் இடிப்பது போல் வந்த விவகாரத்தில் தூத்துக்குடியில் இளைஞர் வெட்டிக்கொலை - 3 பேர் கைது : ஒருவருக்கு வலைவீச்சு

Image
தூத்துக்குடியில் பைக் இடிப்பது போல் வந்த விவகாரத்தில் ஏற்பட்ட திடீர் மோதலில், வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகத் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி தாளமுத்து நகர், வண்ணாரப்பேட்டை ஆனந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் மாரிசெல்வம் (21). மீனவரான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மாரிசெல்வம் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு, இரவு 10 மணியளவில் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் தாளமுத்து நகர் நேரு நகரில் உள்ள ஒரு கெபி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே தாளமுத்து நகர் சோட்டையன்தோப்பைச் சேர்ந்த சண்முக கணேசன் மகன் சந்தனராஜ் (21) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்துள்ளார். அப்போது சந்தனராஜ், மாரிசெல்வத்தின் மோட்டார் சைக்கிள் மீது இடிப்பது போல் வண்டியை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த மாரிசெல்வம், சந்தனராஜைக் கையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். உடனே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஐபி தரிசனத்திற்கு அமைச்சரிடமே பணம் கேட்ட அர்ச்சகர்கள் - அமைச்சரிடமே அர்ச்சகர்கள் பணம் வசூலித்ததால் அதிர்ச்சி..!

Image
  அமைச்சர் ரமேஷிடம் விரைவு தரிசனத்துக்கு அழைத்து செல்ல ரூ.4,000 வாங்கிய அர்ச்சகர்கள்.ரூ.4,000 பணத்தை ஜி-பே மூலம் அனுப்பிய அமைச்சர் ரமேஷ். கையும் களவுமாக பிடிபட்ட அர்ச்சகர் இடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.  இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆய்வுக்கு சென்றிருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம்  4000 ரூபாய் பெற்றுக் கொண்ட பின்னரே அவரை அர்ச்சகர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதித்துள்ளனர்.  (கடந்த முறை திருச்செந்தூர் சென்று கைக்குழந்தையுடன் ஒரு தம்பதியினர்  பாதி வழியில் விட்டு விட்டு ஒரு அர்ச்சகர் பெயரை சொல்லச் சொல்லி சென்றார் அந்த அர்ச்சகரியிடம் அந்த தம்பதியினர் பெயரை குறிப்பிட்டு சொல்லிய போதும் உள்ளே வரவிடவில்லை. கைக்குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆன குழந்தையாக மட்டுமே இருக்கக்கூடும் அவ்வளவு நெரிசலில் பணத்தையும் கொடுத்துவிட்டு பாதியில் அந்த அர்ச்சகரை தேடிச் சென்றது மிகுந்த வேதனையை தந்தது). தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டின் அனைத்து கோவில்களுக்கும் நேரடியாக சென்று ஆய்...

பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் நிறுத்தப்பட்டால்...?? தமிழ்நாடு ₹50,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்புகளை இழக்க நேரிடும் என பொது மக்கள் அச்சம்.!

Image
  முதல்வர் விஜய்யின் உத்தரவுப்படி ஒருவேளை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டால், தமிழ்நாடு ₹50,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்புகளை இழக்க நேரிடும் - இதில் விமான நிலையம், ₹15,906 கோடி மதிப்பிலான மெட்ரோ இணைப்பு, விரைவுச்சாலை இணைப்பு, ஏரோசிட்டி, லாஜிஸ்டிக்ஸ் மையங்கள் மற்றும் மேற்கு சென்னையை இந்தியாவின் அடுத்த மாபெரும் பொருளாதார மண்டலமாக மாற்றக்கூடிய அசுர வேலைவாய்ப்பு உருவாக்கம் என அனைத்தும் முடங்கிப்போகும் அ*பாயம் உள்ளதாக நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத்துக்காக திட்டமிடப்பட்ட மொத்த முதலீடு ₹20,000 முதல் ₹32,700 கோடி. 2 ரன்வேக்கள், பிரம்மாண்டமான கார்ஹோ ஹப், ஏரோசிட்டி-னு வருஷத்துக்கு 10 கோடி பயணிகளைக் கையாளுற அளவுக்குப் பெரிய பிளான் இது. இதோட சேர்ந்து, பூந்தமல்லியில இருந்து ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியா பரந்தூர் வரைக்கும் ₹15,906 கோடியில் 53 கிலோமீட்டர் நீளத்துக்கு 20 ஸ்டேஷன்களோட சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கும் திட்டம் ரெடியாகி, ஆரம்பக்கட்ட நிலம் கையகப்படுத்துற வேலைகளுக்கு ₹2,126 கோடியும் ஒதுக்கப்பட...

தூத்துக்குடியில் ஆய்வுக்கு உட்படாத 27 விசைப்படகுகளின் உரிமப் பதிவை நிரந்தரமாக ரத்து செய்ய மீன்வளத்துறை நடவடிக்கை.!?

Image
தூத்துக்குடியில் ஆய்வுக்கு உட்படாத 27 விசைப்படகுகளின் உரிமப் பதிவை நிரந்தரமாக ரத்து செய்ய மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளின்படி, பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அனைத்து மீன்பிடி கலன்களும் ஆண்டுதோறும் தங்களது படகுகளின் தகுதி குறித்து அதிகாரிகளிடம் நேரடி ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன்பிடி விசைப்படகுகளையும் ஆய்வு செய்யும் பணிகள் கடந்த இரு நாட்களாகத் தீவிரமாக நடைபெற்றன. இப்பணிக்காக மீன்வளத்துறை சார்பில் மொத்தம் 14 சிறப்புக் தணிக்கை ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அதிகாரிகள் குழுவினர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், தருவைகுளம் மற்றும் வேம்பார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கடற்கரை மற்றும் மீனவப் கிராமப் பகுதிகளில் நங்கூரமிட்டிருந்த விசைப்படகுகளில் இறங்கி முழுமையாக நேரடி ஆய்வு நடத்தினர். இந்தத் தணிக்கையின் போது, விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கத் தகுதியான உடலமைப்பைக் கொண்டுள்ளனவா, படகு இயந்திரத்தின் ...

அமைச்சா் மதன்ராஜா தூத்துக்குடி வருகை: புறக்கனித்த தூத்துக்குடி தவெகவினா்.!

Image
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதன்ராஜா தமிழக முதலமைச்சா் விஜய் அமைச்சரவையில் கடந்த 21ம் தேதி குறுசிறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்ற கொண்டபின் முதன்முறையாக இன்று தூத்துக்குடிக்கு வந்தார். ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னா் தூத்துக்குடி 3ம்மைலில் உள்ள முத்துராமலிங்க தேவா் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வரும் வழியில் அரசு சாா்பில் அமைக்கப்பட்ட குரூஸ்பா்னாந்து மணிமண்டபத்தை கடந்து வந்து அம்பேத்காா் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அமைச்சா் சுமாா் 10 நிமிடம் பூட்டப்பட்டிருந்த கேட்டின் வௌியே நின்றிருந்தாா். பின்னா் திறக்கப்பட்ட நிலையில் அம்பேத்காா் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னா் யாரோ நினைவுறுத்தியதையடுத்து வந்த பாதைக்கு திரும்ப சென்று குரூஸ்பா்னாந்து மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த போது மாலை இல்லாத நிலையில் பின் தொடர்ந்து வந்த காாிலிருந்த மாலையை எடுத்து குரூஸ்பா்னாந்து சிலைக்கு மாலை அணிவித்தது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியத...

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர். அமைதியாக சாதித்து காட்டிய மேயர் ஜெகன் பொியசாமி.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவியேற்றபோது தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வகைகளில் மாநகரம் பாதிக்கப்பட்டிருந்தது குடிநீர் பிரச்சனை என்பது தூத்துக்குடி மாநகரில் தீர்க்க முடியாத பிரச்சனையாகவே இருந்து வந்தது. மாநகராட்சி அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு குடிநீர் பிரச்சனை நூறு சதவீதம் தீர்க்கப்பட்டது. 40-க்கும் மேற்பட்ட வார்டுகளில் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது சில பகுதிகளில் மட்டும் தான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க வேண்டும் என்பதுதான். மாநகராட்சியின் குறிக்கோள் அதற்கான முயற்சியை தொடர்ந்து செய்து வந்தனா்.  தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு வல்லநாடு. அகரம். கலியாவூர் ஆகிய பகுதிகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வரம் 2 3 வது உரக்கிணறு மற்றும் பம்பிங் ஸ்டேஷன் முற்றிலும் சேதம் அடைந்தது. அதனை கட...

பரந்துார் புது விமான நிலைய பணிகள் நிறுத்தம்; தொழில் பூங்கா அமைக்க அரசு ஆலோசனை என தகவல்.!

Image
  பரந்துாரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளை, தமிழக அரசு நிறுத்தியுள்ளது. ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட, 1,700 ஏக்கரில், 'சிட்காட்' தொழிற்பூங்கா அமைக்க, உயர்மட்ட அதிகாரிகள் நிலையில் ஆலோசனை நடத்தி வருவதாக, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மிகவும் தீவிரமாக குரல் கொடுத்து வந்தவர் தவெக தலைவர் விஜய். தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள விஜய், பரந்தூர் விமான நிலைய பணிகளை தொடர்வதற்கு தடை விதித்துள்ளார்.  கடந்த ஆட்சியில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 1700 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த சூழலில், இந்த நிலத்தை தமிழக அரசு நிலத்தின் உரிமையாளர்களுக்கு திருப்பித் தருமா? அல்லது அரசே தங்கள் வசம் வைத்துக்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்தது.  ஏனென்றால், இந்த நிலத்தை கடந்த ஆட்சியில் நில எடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு கையகப்படுத்தவில்லை. 1700 ஏக்கர் நிலங்களும் அந்தந்த நில உரிமையாளர்களின் சம்மதத்துடன் அரசுக்கு நேரடியாக பதிவு செய்து தரப்பட்டுள்ளது. இதனால், தற்போது அந்த...

கொரியர் ஆபீஸ் வைப்பதாக கூறி பட்டாசு ஆலை நடத்தியது அம்பலம்: கோவில்பட்டி அருகே வெடி விபத்தில் 2 பேர் பலியான நிலையில் தம்பதி உள்பட 3 பேர் கைது.!

Image
  கோவில்பட்டி அருகே வெடி விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவத்தில் காட்டுப்ப குதியில் கொரியர் ஆபீஸ் வைப்பதாகக்கூறி அனும தியின்றி பட்டாசு தயா ரிக்கும் ஆலை நடத்தியது. போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கட் டிட உரிமையாளர், ஆலை நடத்திய தம்பதி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்ட னர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில், காட்டுப்பகுதியில் ஒரு வீட்டில் நேற்று முன்தினம் இரவு திடீரென பட்டாசு கள் தொடர்ந்து வெடித் தது. இந்த சத்தம் புளியங்கு ளம் கிராமத்தில் பலமாக கேட்டதில் பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந் தனர். புளியங்குளத்தில் இருந்து 6 கிமீ தூரத்தில் இருக்கும் கோவில்பட்டி யிலும் பயங்கரமாக வெடி சத்தம் கேட்டுள்ளது. தகவலறிந்து தூத்துக்குடி எஸ்பி அபிஷேக் குப்தா, கோவில்பட்டி சப்-கலெக்டர் ஹூமான் சூமங்கள், தாசில்தார்அப் பணசாமி, டிஎஸ்பி ஜெக நாதன், இன்ஸ்பெக்டர்கள் மேற்கு நவநீதகிருஷ்ணன், கிழக்கு மாரியப்பன், மேற்கு எஸ்ஐ சண்முகம், தீயணைப்பு நிலைய அலுவலர் மாயாண்டி ஆகி யோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது வெடிவிபத்து ஏற்பட்ட...

ஐந்து தொகுதிகள் தமிழ்நாட்டில் காலியானதாக அறிவிப்பு -அரசிதழ் வெளியீடு.!

Image
  தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு உட்பட ஐந்து தொகுதிகள் காலியானதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு உட்பட ஐந்து தொகுதிகள் காலியானதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் அடுத்த ஆறு மாத கால இடைவெளிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். அதிமுக எஸ்.பி. வேலுமணி தலைமையில் இருந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர். தொடர்ந்து அவர்கள் மூவரும் தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்றே மூன்று தொகுதிகளும் காலியானதாக அரசிதழ் வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் அதிமுக அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து இன்று அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகள் மொத்தம் காலியாகியுள்ளது.

"சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்!

Image
  சென்னை திருவான்மியூர் மீனவ பகுதியில் அமைச்சர்கள் ஸ்ரீநாத், ஆர்.குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்த போது கச்சத்தீவு குறித்தும் பட்டா குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு No Comments என பதில் கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீனவளத் துறை அமைச்சராக ஸ்ரீநாத்தும், செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சராக ஆர்.குமாரும் நியமிக்கப்பட்டனர். அமைச்சர்கள் பொறுப்பேற்றதும் ஆய்வு பணிகள், ஆலோசனை கூட்டங்கள் உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஸ்ரீநாத்தும், குமாரும் திருவான்மியூர் மீனவ பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது மீனவ பகுதிமக்களிடம் இருவரும் குறைகளை கேட்டறிந்தனர். வெள்ளம், மழை காலங்களில் எந்த மாதிரியான பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பது குறித்தும் அவர்கள் கேட்டனர். இதையடுத்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்களிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதில் மீனவளத் துறை அமைச்சர் என்ற முறை ஸ்ரீநாத்திடம் கச்சத்தீவு குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என கேட்டதற்கு, நோ கமென்ட்ஸ் என தெரிவித்தனர். அது போல் குமாரிடம் பட்டா இல்லாத பிரச்சினை எப்போத...

நெல்லை அருகே கொடூர சம்பவம் -நூற்றுக்கணக்கான வாத்துகளை வெட்டிக் கொன்ற இளைஞர்கள் இருவர் கைது!!

Image
  நெல்லை மாவட்டம் தருவை பகுதியில், விற்பனைக்கு வாத்துகள் தர மறுத்ததால் நூற்றுக்கணக்கான வாத்துகளை வெட்டிக் கொன்ற இளைஞர்கள் இருவர் கைது மந்தை உரிமையாளர் ராமசாமியுடன் மதுபோதையில் தகராறு செய்த மகாராஜன், ராஜேஸ் இருவரும், இரவில் மீண்டும் வந்து  அங்கிருந்தவர்களை தாக்கி வாத்துகளைக் கொன்றுள்ளனர்

மகளிர் உரிமைத் தொகையில் இன்ப அதிர்ச்சி? தமிழக அரசின் ரூ.2500 அக்கவுண்ட்டில் வருவது எப்போது தெரியுமா.?

Image
  ஜூன் 22 முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த "மதிப்புமிகு மகளிர் திட்டம்" ஒட்டுமொத்த தமிழகப் பெண்கள் மத்தியிலும், குறிப்பாகக் குடும்பத் தலைவிகளிடமும் ஒரு புதிய நம்பிக்கையையும், மிக பலத்த எதிர்பார்ப்பையும் தற்போதே ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியோடு இந்தத் திட்டத்தின் தொடக்கத்தை இணைத்து அமல்படுத்துவது, அரசியல் ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஏராளமான தாய்மார்கள் மற்றும் பெண்கள் தவெக அரசின் இந்த புதிய அறிவிப்பைத் இப்போதே குஷியுடன் வரவேற்க தொடங்கியுள்ளனர்.. அதேசமயம், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பும் தமிழக பெண்களிடம் ஏற்பட்டுள்ளது...!!

எபோலோ வைரஸ் தொற்று: தமிழ்நாட்டில் விரைவில் ஊரடங்கு போடப்படுகிறதா? பொது சுகாதாரத்துறை விளக்கம்.!

Image
  எபோலோ வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம், விரைவில் தமிழ்நாட்டியில் ஊரடங்கு உத்தரவு வரும் என்ற தகவல்களுக்கு பொது சுகாதாரத்துறை இன்று விளக்கமளித்துள்ளது. காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் புண்டிபுக்யோ என்ற தொற்று காரணமாக எபோலா காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் புண்டிபுக்யோ என்ற தொற்று காரணமாக எபோலா காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நோய்க்கு தற்போது வரை தடுப்பூசியோ சிகிச்சையோ கண்டறியப்படவில்லை என்பதால் உலக சுகாதார அமைப்பு இந்த நாடுகளில் சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. இதையடுத்து ஆப்பிரிக்க நாடுகளில் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேநேரம் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் பலர் படிக்கின்றனர். மேலும் பலர் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அதேபோல் ஆப்பிரிக்கர்களும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சிகிச்சைக்காக ...