Posts

Showing posts from June, 2026

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவனுக்கு கத்தி வெட்டு - திருநங்கை கைது.!

Image
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வேப்பலோடை பனையூரைச் சேர்ந்த அன்புமாதவன் மகன் அஜய் தேவகுமார்(20) என்ற கல்லூரி மாணவனுக்கு கத்தியால் வெட்டு படுகாயமடைந்த கல்லூரி மாணவன் அஜய் தேவகுமார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி கத்தியால் வெட்டிய திருநங்கை அபர்ணாவை (26) கைது செய்த வடபாகம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தூத்துக்குடி ஸ்ரீசித்தர்பீட குருமகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேக விழா.

Image
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆனி மாத பவுர்ணமி முன்னிட்டு குருமகாலிங்கேஸ்வரருக்கும், நந்திக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் மற்றும் அபிஷேகம் நடைபெற்று      அதனைத் தொடர்ந்து குருமகாலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவேண்டியும், பக்தர்கள் வாழ்வில் செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவருக்கு யாகம் மற்றும் மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட 16வகையான அபிஷேக வழிபாடுகளும், தீபாராதனையும் நடைபெற்றது. முடிவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தூத்துக்குடி இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த மாற்று கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்.!

Image
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த மாற்று கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்  மாற்றுக் கட்சியை வழி நடத்தி காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களை இணைத்த இளம்புவனம் சின்னதுரைக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் வரவேற்று நன்றி தொிவித்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதியம்புத்தூர் வட்டாரத் தலைவர் ஜேம்ஸ் மற்றும் ஹரி செய்திருந்தனா்.

தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்தின் அசன விழா.!

Image
  தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்தின் 73 வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் 33வது அசன விழாவை இதில் சேகர தலைமை குரு மோசஸ் ஜெபராஜ், செயலாளர் சி.த. செல்லபாண்டியன், பொருளாளர் ஞானராஜ் டேனியல் ஆகியோர் அசன விருந்தை தொடங்கி வைத்தார்கள். மற்றும் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகர், சேகர செயலாளர் ஜவகர்சுந்தர், சேகர பொருளாளர் ஜாய்சன் பொன்னுதுரை, உதவி குருவானவர் தேவநேசம் சபை ஊழியர்கள் சாம்ஜெபராஜ், பாஸ்கர் உள்பட பலா் கலந்து கொண்டனர் அதில் அனைத்து தரப்பை சோ்ந்தவா்களும் அசன விருந்தில் பங்கெடுத்துக்கொண்டனா்.

முள்ளக்காடு கல்லூரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

Image
தூத்துக்குடி முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் தீ தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜோஸ் சஜிகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான பல்வேறு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், தீவிபத்து ஏற்பட்டால் பாதுகாப்பாக செயல்படுவது, தீயை கட்டுப்படுத்தும் முறைகள், தீயணைப்பான் பயன்படுத்தும் விதம், முதலுதவி சிகிச்சை அளிக்கும் நடைமுறைகள் ஆகியவை செயல்விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டன. தெர்மல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் முருகையா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கினர். கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தூத்துக்குடி: தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஆம்னி பஸ்ஸில் கடத்தி வந்த ஓட்டுநர் கைது.!

Image
  கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் நியூட்டன் மற்றும் போலீசார் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தையடுத்து 250 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஆம்னி பஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆம்னி பஸ் டிரைவரான திருநெல்வேலி, பத்தமடை பகுதியைச் சேர்ந்த சங்கரன் மகன் பாலமுருகன் (42) என்பவரை கைது செய்து வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்கு மாமன்ற உறுப்பினா்கள் முன்பை விட கூடுதலாக பணியாற்ற வேண்டும்"- மாநகராட்சி கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி உருக்கம்.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் ஆணையா் ப்ாியங்கா துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. கூட்ட தொடக்கத்தின் போது சுற்றுச்சூழலுக்கான சவால்களை எதிர்கொள்ளும் துடிப்பான மற்றும் நெருக்கடிகள் இல்லாத மக்கள் மையமான தெருக்கள் கொண்ட நகரமாக தூத்துக்குடியை தொலைநோக்கு பாா்வையை நினைவாக்கும் விதமாக கொள்கை வழிகாட்டுதல் கையேடை வௌியிட்டு மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில்:-  கடந்த நான்கரை ஆண்டுகாலமாக முன்னாள் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டுகளிலும் பாரபட்சமின்றி அடிப்படை பணிகளை முறையாக மேற்கொண்டு புதியதாக 4 ஆயிரம் சாலைகள் சிறு குறு சந்துகளில் பேவா்பிளாக் கல் பதிக்கப்பட்டு பழைய மாநகராட்சி முதல் 3ம்மைல் வரை மக்களுக்கு அடிப்படை பணிகளை முறையாக செய்து கொடுக்கப்பட்டு புதிதாக மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் சாலைகள் மின்விளக்கு வசதிகள் அமைக்கப்பட்டு தேவையான இடங்களில் பல்வேறு கட்டமைப்புகளையும் முறையாக செய்து வருகிறோம்.  தூத்துக்குடி மாநகராட்சிபகுதிக்கு 4 லைன்கள் மூலம் வல்லநாட்ட...

மாநகராட்சிக்கு என்று சில விதிமுறைகள் இருக்கிறது அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயா் ஜெகன் பொியசாமி பேட்டி.!

Image
  தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் நான்கரை ஆண்டு காலமாக பல்வேறு பிரச்சனைகளை மாமன்ற கூட்டத்தில் எடுத்து வைத்து மக்கள் குறைகள் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியின் 51-வது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மந்திரமூர்த்தியும், 17-வது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற ராமரும் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இதில், மந்திரமூர்த்தி அதிமுக மாநகராட்சி கொறடாவாக செயல்பட்டு வந்த நிலையில், அவரை அப்பதவியில் இருந்து நீக்கியதாக அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் மாநகராட்சிக்கு கடிதம் வழங்கியிருந்தார். அதற்கு பதில் 57 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயலெட்சுமி அதிமுக கொறடாவாக நியமனம் செய்யப்படுள்ளார். ஆகவே ஜெயலெட்சுமிக்கு அந்த இடத்தை வழங்கி உள்ளோம். ஆனால் முதலில் இருக்கையில் அவர் எனக்கு இடம் வேண்டும் என்கின்றார்.  மக்கள் பிரச்சினையை மந்திரமூர்த்தி பேசாமல் வீடியோ எடுத்து ரிலீஸ் போட்டுவிட்டு போய்விடுவார். அவருக்கு இருக்கை மறுக்கப்படவில்லை.. இடம் கொடுக்கப்பட்டது.. ஆனால் அதை வைத்து அரசியல் செய்கிறார் மந்திரமூ...

அமைச்சா் சரத்குமாரை பதவிலிருந்து நீக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் தடையை மீறி திமுக ஆா்ப்பாட்டம் போலீசாருடன் தள்ளுமுள்ளு 50 போ் கைது.!

Image
  தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அமைச்சரவையில் உள்ள அமைச்சா் சரத்குமாா் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுஇடத்தில் வெள்ளை பவுடா் பயன்படுத்துவது போல் வீடியோ ஓன்று வெளியாகி சா்ச்சையானது அது மாத்திரை என அமைச்சா் வீடியோ வௌியிட்டு விளக்கம் அளித்திருந்தாா் ஆனால் தமிழகத்தில் பொறுப்பான இடத்திலிருந்து கொண்டு தேவையில்லாத செயல்களில் ஈடுபட்ட அமைச்சா் சரத்குமாா் மக்கள் பணியாற்றுவது சாியாக இருக்காது அதனால்அவரை அமைச்சா் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தொிவித்திருந்த நிலையில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநில திமுக மாணவா் அணி செயலாளர் வீரமணி ஜெயக்குமாா் அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் அமைச்சா் சரத்குமாருக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வில்லை இருப்பினும் தடையை மீறி தூத்துக்குடி அண்ணாநகா் 7 சந்திப்பில் வடக்குதெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சா்கள்மான கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உத்தரவு படி நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு மாணவரணி மாவட...

அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதையொட்டி எடப்பாடி பழனிசாமியிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சந்தித்து வாழ்த்து..!

Image
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியால்  நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து  பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.  மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட ஜெ பேரவை செயலாளா் விஜயகுமார், பகுதிச் செயலாளர்கள் முருகன், சுடலைமணி, ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், ராஜ் நாராயணன், குணசேகரன், அப்பாதுரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர்கள் பிரபாகர், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர்கள் சுரேஷ் பாபு, சுந்தர், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்டக் கலை பிரிவு செயலாளர் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிகண்டன், சொக்கலிங்கம், நிர்வாகிகள...

தூத்துக்குடி– சென்னை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் சித்ராங்கதன் கோரிக்கை.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் புதிய ரயில் சேவைகள், ஆறுமுகநேரி ரயில் நிலையத்தில் பிட் லைன் வசதி அமைத்தல், திருச்செந்தூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்குதல், சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டித்தல் மற்றும் தூத்துக்குடி– சென்னை வந்தேபாரத் ரயில் சேவையை விரைவில் தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதீய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகனிடம் மனு அளித்துள்ளார். இந்நிலையில் திருச்செந்தூர் ரயில் நிலையத்தை அம்ரித் பரத் ரயில் நிலையமாக தரம் உயர்த்த  மத்திய இணை அமைச்சர் முருகனிடம் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதான் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவில், மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி வருவதாகவும், விண்வெளி பூங்கா, கேந்திரிய வித்யாலயா பள்ளி, கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட திட்டங்கள் மாவட்ட வளர்ச்சிக்கு புதிய உந்துதலை ஏற்படுத்த...

தூத்துக்குடியில் உள்ளாட்சி தோ்தலை முன்னிட்டு பா.ஜ.க. மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Image
தூத்துக்குடி பாரதீய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்டம் மேற்கு மண்டலம் சார்பில் மண்டல ஆலோசனைக் கூட்டம் மண்டல தலைவர் லிங்கசெல்வம் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்துவது, வார்டு வாரியாக பொறுப்பாளர்களின் பணிகளை தீவிரப்படுத்துவது, பூத் கமிட்டிகளை முழுமையாக அமைப்பது, வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து புதிய வாக்காளர்களை இணைப்பது, வீடு தோறும் சென்று மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் கட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைப்பது உள்ளிட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.  மேலும், வார்டு வாரியாக மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள், தெருமுனைக் கூட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை முகாம்கள், இளைஞர் மற்றும் மகளிர் அணிகளை செயல்படுத்துதல், சமூக ஊடகங்கள் மூலம் கட்சியின் கொள்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளையும் தீவிரப்படுத்த நிர்வாகிகளு...

தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மேயா் ஜெகன் பொியசாமி திடீர் சோதனை மோசடி கண்டுபிடிப்பு அதிரடி நடவடிக்கை

Image
  தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஒன்பது அம்மா உணவகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகங்கள் ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் அடுத்து வந்த திமுக ஆட்சியிலும் தொடர்ந்து அம்மா உணவகம் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தது.  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள அம்மா உணவகத்திற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி திடீரென்று சோதனை மேற்கொண்டார். சோதனையின் போது அம்மா உணவகத்திற்கு உணவு சாப்பிட வரும் பொதுமக்கள் டோக்கன் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் தான் உணவு வழங்க வேண்டும் ஆனால் அந்த அம்மா உணவகத்தில் முழுமையாக டோக்கன் வழங்கப்படவில்லை இது ஒரு முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல அம்மா உணவகத்தை சுத்தமாக சுகாதாரமாக வைக்கவில்லை தூய்மை இல்லாமல் இருந்ததையும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.  அதுபோல அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் மொத்தமாக வெளியே விற்பனை செய்வதும் சோதனையில் தெரியவந்துள்ளது ஆகையால் அம்மா உணவகத்தில் பல்வேறு மோசடிகள் தவறுகள் நடப்பதை நேரில் கண்டறிந்த மேயர் ஜெகன் பொியசாமி உடனடியாக நடவ...

ஊழியம் செய்ய வரும் பெண்களிடம் கேலி கிண்டல் : குருவானவரை மாற்றக் கோரி தூத்துக்குடி தாளமுத்து நகர் சிஎஸ்ஐ தூய இம்மானுவேல் ஆலயத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.!

Image
  ஊழியம் செய்ய வரும் பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் குருவானவரை மாற்றக் கோரி தூத்துக்குடி தாளமுத்து நகர் சிஎஸ்ஐ தூய இம்மானுவேல் ஆலயத்தை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து ஆண்களு ஆர்ப்பாட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் அமைந்துள்ளது சிஎஸ்ஐ திருச்சபைக்கு சொந்தமான தூய இம்மானுவேல் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் குருவானவராக காலேப் மான்சிங் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்து, அந்த ஆலய குருவானவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அங்கு வேலை பார்த்த வேத பாட ஆசிரியர் சுபாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் பேசியதால் மனம் உடைந்த ஆசிரியை சுபா காலாவதியான மாத்திரைகளை போட்டு கடந்த 15 நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து தேவாலய குருவானவர் காலேப் மான்சிங் மீது கடந்த 14ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் அவர் காவல் நிலைய ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந...

மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.

Image
இயக்குநர் மற்றும் நடிகரான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 73. இதனை தொடர்ந்து திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தம் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜின் உடல், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உறவினர்கள் திரையுலகினர், மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஜூன் 28) பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய், இயக்குநர் பாக்யராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கலில் “திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாதா கோவில் முன்பு நடைபெறும் பணிகள் - மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு.!

Image
  தூத்துக்குடி பணிமய மாதா ஆலய திருவிழா அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளது அதனை முன்னிட்டு திரேஸ்புரம் முதல் பணிமயமாதா ஆலயம் வரை ரோட்டின் இருபுறமும் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு வருகிறது இந்த பணி விரைவாக நல்லமுறையில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி மாதா கோவில் முன்பு நடைபெறுகின்ற பேவர் பிளாக் கல் பதிக்கும் பணிகளை பார்வையிட்டார் அப்போது அங்கு இருந்த ஒப்பந்ததாரரிடம் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் அடுத்த மாதம் மாதா கோவில் திருவிழா ஆரம்பமாகிறது அதற்குள் விரைவாக பணியை முடிக்க வேண்டும் தரமான முறையில் பணிகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் மேலும் பேவர் பிளாக் கல் பதிக்கும் விபரங்களையும் கேட்டறிந்தார் பணிகள் முடிந்த பிறகு மேடு பள்ளம் இருக்கக் கூடாது காலி இடத்தில் இருக்கும் மணல்கள் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும் மாதா கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இருக்கக் கூடாது என்று ஒப்பந்ததாரரிடம் கூறினார். மேலும் ஒப்பந்ததாரரிடம் அளவு எடுக்கும் டேப்பை கொண்டு வரச் சொல்லி மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது படி நீளம் அகலம் அமைக்...

தூத்துக்குடி மாவட்ட பொது தொழிலாளர் சங்க பேரவைக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு.!

Image
தூத்துக்குடி மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் 8வது ஆண்டு பேரவைக்கூட்டம் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ரவிதாகூர் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட நிர்வாகி கந்தசாமி கொடியேற்றினாா். மாவட்ட நிர்வாகி தஸ்லீஸ் வரவேற்புரையாறினார்.  முனிஸ்வரன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார் பேரவை கூட்டத்தை சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து துவக்கி வைத்தார் மாவட்டச்செயலாளர் பெருமாள் வேலை அறிக்கை முன் வைத்தார். மாவட்ட பொருளாளர் சுப்புலட்சுமி வரவு செலவுஅறிக்கை முன் வைத்தார். பேரவையை நிறைவு செய்து சிஐடியு மாநில துணைத்தலைவர் ரசல் பேசினார். உப்பு தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணவாளன் வாழ்த்தி பேசினார். கூட்டத்தில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தை முறையாக செயல்படுத்கோரியும். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை உடல் உழைப்பு தொழிலாளர்கள் பிள்ளைகளுக்கு கல்வி உதவி நிதி உயர்த்தி வழங்குதும், உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நல வாரியம் மூலம் இலவச வீடு, வீடு கட்ட நிதி, திருமண நிதி ரூ20000.  விபத்து மரணம் 5லட்சம், இயற்கை மரணம் 2 லட்சம். கட்டுமானம் நலவாரியம் போல் உயர்த்தி வழங்கிடு, தீபாவள...

"கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணாவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்" -பிஜேபி நயினாா் நாகேந்திரன் கேள்வி.?

Image
தூத்துக்குடி கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணாவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்? இது தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம் தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது   கர்நாடகாவை சேர்ந்தவர் வெங்கட நாராயணா. இவர் ஜனநாயகன் படத்தில் தயாரிப்பாளர். இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தமிழகத்தின் முதல்வர் விஜய் வெங்கட் நாராயணன் என்பவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாகி, கர்நாடக முதல்வர் சிவக்குமாரின் நெருங்கிய நண்பர் இவரை தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இது எந்த விதத்தில் நியாயம்? இது தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம்.  கர்நாடகாவில் ஏற்கனவே மேகதாது பிரச்சனை இருந்து கொண்டிருக்கிறது, தென்பெண்ணை ஆறு பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது இந்த சூழ்நிலையில் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இவர் இருந்தால் தமிழகத்திற்கு எப்படி நீதி கிடைக்கும் இது பாஜகவின் குற்றச்சாட்டு. தவெக நிர்வாகிகள் நேற்று மட்டும் ந...

"ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருப்பதே தவெகவின் நிலைப்பாடு கூட்டணிக் கட்சிகள் விரைவில் புரிந்து கொள்வார்கள்" கனிமொழி எம்.பி பேட்டி.!

Image
  தூத்துக்குடி விமானநிலைய வளாகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். சட்டப்பேரவை என்பது ஆரோக்கியமான விவாதங்களுக்கான இடமாக இருக்க வேண்டும். அதைவிட்டு, தனிநபர்களையோ தலைவர்களையோ இழிவுபடுத்தக்கூடிய இடமாகவோ, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய இடமாகவோ அது மாறிவிடக் கூடாது. அனைவருக்கும் மரியாதை அளிக்கக்கூடிய இடமாக அது இருக்க வேண்டும். வெற்றி, தோல்வி என்பவை எல்லாருடைய வாழ்க்கையிலும் சகஜமான ஒன்னு அதையெல்லாம், ஒரு உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது என்பது சரியாக இருக்காது என்பதை உணர்ந்த இடமாக அது இருக்க வேண்டும் என்று எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள்.  அந்த எதிர்பார்ப்பு, அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலிருந்தாவது நிறைவேற வேண்டும். மத்திய அரசுடன் தவெக அரசு இணக்கமாக இருக்கும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "தவெக எப்போதும் ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தான் எடுத்து வருகிறது. கூட்டணியில் இருக்கக்கூடிய மற்ற கட்சிகளும்...

"தமிழக அரசு தற்காலிக பணியாளருக்கான ஆணை தான் வழங்கியுள்ளது எனக்கு நிரந்தர பணி வேலை வேண்டும் இன்சூரன்ஸ் பணம் வரவில்லை எனக்கு வாங்கித் தாருங்கள்" கப்பல் மாலுமி மனைவி கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை

Image
எனது கணவரின் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுத்த உங்களுக்கு நன்றி  தமிழக அரசு தற்காலிக பணியாளருக்கான ஆணை தான் வழங்கியுள்ளது எனக்கு நிரந்தர பணி வேலை வேண்டும் இன்சூரன்ஸ் பணம் வரவில்லை எனக்கு வாங்கித் தாருங்கள் கப்பல் மாலுமி மனைவி கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை விடுத்தார். தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சேர்ந்த நிஷாந்த் கப்பல் மாலுமியாக பணியாற்றி வந்த போது கப்பலில் வைத்து உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார். இதனையடுத்து நிஷாந்த் மனைவிக்கு ஆறுதல் கூறுவதற்கு கனிமொழி எம்.பி நிஷாந்த் வீட்டிற்கு சென்று நிஷாந்த் மனைவிக்கு ஆறுதல் கூறினார் அப்போது நிஷாந்த் மனைவி எனது கணவரின் உடலை கொண்டு வருவதற்கு தீவிர நடவடிக்கை எடுத்த உங்களுக்கு நன்றி என கூறினார். தமிழக அரசு எனக்கு தற்காலிக பணியாளர் பணி தான் வழங்கியுள்ளது நீங்கள் எனக்கு நிரந்தர பணி பெற்றுத் தர வேண்டும் உங்களால் முடியும் என நிஷாந்த் மனைவி கனிமொழி எம்பியிடம் கூறினார் அதுபோல எனது கணவரின் மரணத்திற்கான இன்சூரன்ஸ் தொகை இதுவரை வரவில்லை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அதற்கு கனிமொழி எம்பி கண்டிப்பாக நிரந்தர பணி பெற்று தர நடவடிக்கை எடுப்பேன் அது போல...

தூத்துக்குடி பள்ளியில் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு நாள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Image
தூத்துக்குடி புனித அன்னாள் சி.ஐ.எஸ்.சி.இ பள்ளியில் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான சுபாஷினி கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டுமென்று மாணவர்களிடம் அன்பாக வலியுறுத்தினார்கள். நீதிஅரசர் சிறப்புரைக்கு பின்பு தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சூசைநாதர் மதுவிலக்கு இயக்கத்தின் முன்னாள் இயக்குநர் ஜெயந்தன் டி கிரேஸ் உரையாற்றுகையில், மாணவர்கள் போதைப் பொருட்களிலிருந்து விலகி, நன்னெறி வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் குறிப்பாக ஊடகப்போதை, மதுப்போதை, மற்றும் வாழ்வை அடிமைப்படுத்தும் பல்வேறு போதைப் பழக்கத்திலிருந்து வெளிவந்து அறநெறியான வாழ்க்கையை நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். நிகழ்ச்சிகளை பள்ளியின் தாளாளர் பிரமிளா பிரான்சிஸ், முதல்வர் விஜய்அன் மற்றும் அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பு செய்திருந்தாா்கள்.

தூத்துக்குடி கல்லூாியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Image
   தூத்துக்குடி, முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி கல்லூரி முதல்வர் ஜோஸ் சஜிகுமார் தலைமையில் கல்லூரியின்  அலுவக கண்காணிப்பாளர் மருதப்பெருமாள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ - மாணவிகள் அனைவரும்  தன்னிலை மறக்க செய்து தன்மானத்தை இழக்க செய்து வாழ்வை நாசமாக்கும் போதை பொருட்களை தவிர்ப்போம் என மாணவ சமுதாயம் எடுத்துள்ள உறுதிமொழியை ஒவ்வொருவரும் கடைப்பிடித்திட வேண்டும் போதையில்லா தமிழ்நாடு அமைய வேண்டும் என்று போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை  எடுத்து கொண்டனா்.

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்டு ஆய்வு.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் பல்வேறு வகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பொதுமக்கள் நலன் கருதி தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்தி அதிகாாிகளுடன் இணைந்து செயல்படுத்தி அதை முறையாக நடைபெறுகிறதா என்று சூழற்சிமுறையில் பாா்வையிட்டு நல்லமுறையில் செய்திட வேண்டும் என்று உத்தரவுகளை பிறப்பித்து வருகிறாா். இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு சம்பந்தமூா்த்தி தெருவில் நடைபெற்று வரும் குடிநீர்் குழாய் சீரமைத்தல் பணி எட்டையாபுரம் ரோடு ஹவுசிங்போா்டு பகுதியில் உள்ள ஆா்எஸ்பிஆர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் வரும் அளவினையும் கேடிசிநகா் ஹவுசிங் போா்டு தெற்கு காமராஜா் நகா் கொத்தனா் காலணி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நீாின் அளவை பாா்வையிட்டு டூவிபுரம் சங்கரநாராயணன் பூங்கா பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் வரும் அளவினையும் வௌியேறும் நீரின் அளவினையும் பாா்வையிட்டு எட்டையாபுரம் ரோடு இரயில்வே பாலத்தில் கீழே உள்ள பகுதிகள் மற்றும் மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது பாா்வையிட்டு மில்லா்புரம் பகுதியில் பாதாளசாக்கடை கழிவ...

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பேக், வாட்டர் பாட்டில் வழங்கிய காவல் ஆய்வாளர் வேல்ராஜ்.!

Image
  பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் சிறப்பாக படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு காவல் ஆய்வாளர் வேல்ராஜ் மற்றும் இரட்சண்யபுரம் நவராஜ்,  மூலமாக கல்வி உபகரணங்கள் (பேக், வாட்டர் பாட்டில்) வழங்கப்பட்டது. மாணவர்களின் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தூத்துக்குடி வடக்கு  காவல் நிலைய  ஆய்வாளர் வேல்ராஜ் முயற்சித்து வருகிறார்.  பல்வேறு பள்ளிகளில் இதுபோன்ற விழிப்புணர்வு  நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு அதன்படி செயல்படுத்தியும் வருகிறார். இந்த முயற்சியில் முதல் கட்டமாக தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபம் எதிரில் உள்ள மேலூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கல்விபயிலும் மாணவ மாணவியர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமா ஆனந்தி தலைமையில்  மாணக்கர்களை அவர்களது  வகுப்பறையில் நேரடியாக சந்தித்தார். இந்த சந்திப்பில் ஆய்வாளரின் கேள்விக்கு பயமின்றி மாணவ மாணவியர்கள் தைரியமாக  பதில் அளித்தது சுவாரஸ்யமாக அமைந்தது. பார்ப்பவர்களை வியப்பிலும் ஆழ்த்தியது. மேலும் போக்குவரத்து விதிமுறை உள்ப்பட தலைகவசம் அணிவதன் அவசியம் வரை...

பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தியது மத்திய அரசு.!

Image
ஜூலை 1 முதல் 36 பக்கங்கள் கொண்ட சாதாரன பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1500 லிருந்து ரூ.2500 ஆக அதிகரிப்பு 60 பக்கங்கள் கொண்ட  பாஸ்போர்ட்டின் கட்டணம் ரூ. 2,000 லிருந்து ரூ.3,500 ஆக அதிகரிப்பு அவசரத் தேவைக்கான `தட்கல்'  பாஸ்போர்ட் கட்டணம் ரூ.3,500லிருந்து ரூ.5 ஆயிரமாக அதிகரிப்பு 60 பக்கங்கள் கொண்ட `தட்கல்' பாஸ்போர்ட் கட்டணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக அதிகரிப்பு அனைத்து கட்டண உயர்வும் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது

தூத்துக்குடி கடற்கரை தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழாவை முன்னிட்டு மேயர் ஜெகன் பொியசாமி அடிப்படை பணிகளை ஆய்வு செய்தாா்.!

Image
  தூத்துக்குடி கடற்கரை சாலை வடபாகம் காவல் நிலைய வளாகத்திற்கு உள்ளே இருக்கும் தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழா வருகிற வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெற இருக்கிற இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் மக்கள் கலந்து கொள்வார்கள் மூன்று நாள் நடைபெறும் திருவிழாவில் பொதுமக்கள் அமர்ந்து திருவிழாவை கண்டுகளிக்கும் வகையில் ஆலய நிர்வாகத்தினர் கோவில் வளாக பகுதியில் உள்ள முள் செடி. மணல் திட்டு குப்பைகள் தேங்கியுள்ளது அதனை அப்புறப்படுத்தி தரவேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமியிடம் கோரிக்கை வைத்தனர் அப்போது நிர்வாகத்தினரிடம் கண்டிப்பாக செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல ஆலயத்திற்கு சென்றார் என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும் என்று ஆலய நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தாா்.  உடனடியாக மாநகராட்சி ஜேசிபி இயந்திரம் அங்கு வரவழைக்கப்பட்டது அதுபோல தூய்மை பணியாளர்களும் வரவழைக்கப்பட்டனா்.  உடனடியாக ஆலய வ...

அமைச்சா் ஸ்ரீநாத்க்கு நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சாா்பில் கண்டனம்.!

Image
  தூத்துக்குடி நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சாா்பில் தமிழக முதல்வா் விஜய் மற்றும் அமைச்சா் ஸ்ரீநாத்திடம் நாங்கள் கேட்டது கப்பல் மாலுமிகள் சட்டத்தில் உள்ள படி உரிய இழப்பீடு மற்றும் கடந்த காலங்களில் தமிழக அரசுகளால் வழங்கப்பட்டு வந்த மாநில அரசுப் பணிகளில் பாதிக்கப்பட்டவர்க்கு நிரந்தரப் பணி. ஆனால் நீங்கள் தந்திருப்பதாகச் சொல்லி எங்களை ஏமாற்றி விளம்பரப்படுத்தி இருப்பதோ தற்காலிக ஒப்பந்த பணி ஆணை இந்த அரசுக்கு மீனவர்களிடம் அவப்பெயரை ஏற்படுத்த விரும்பும் சில அதிகாரிகள் மாலுமி நிஷாந்த் குடும்பத்திற்குத் துரோகம் செய்து இதைச் செய்ய விரும்புவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தயவு செய்து மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்கின்றோம். கடலோடிகள் மரணத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள். மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நீங்கள் கடலோடி மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் நீங்கள் தூத்துக்குடி கப்பல் மாலுமி நிசாந்த் குடும்பத்துக்கு வழங்கிய தற்காலிக ஒப்பந்த பணி ஆணையைத் திரும்பப் பெற்று தம்பி நிஷாந்தின் மனைவிக்கு  மாவட்ட வருவாய்த் துறையிலோ அல்லது மீனவர் துறையிலோ நிரந்தரப் பணி ஆணையை உடனடியாக வழங்குங்கள் என்ற...

தூத்துக்குடி மாநகராட்சியில் பங்குதாரா்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Image
  தூத்துக்குடி மாநகராட்சியை பசுமையுடன் எழில்மிகு நகரமாக உருவாக்கவும்,  நகரின் வாழ்வியல் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு முத்து நகரின் பசுமைப் பயணம் என்ற திட்டத்தின் கீழ் பங்குதாரர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி  மைய அலுவலகத்தில் வைத்து ஆணையாளர் ப்ாியங்கா தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் வ உ சி துறைமுக சபை பொறுப்புக் கழகம், மாவட்ட வனத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பெருந்திரளான பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ப்ாியங்கா பேசுகையில் தூத்துக்குடி நகரம் மக்கள் தொகை போக்குவரத்து தொழில்துறை என பல்வேறு வகைகளில் வளர்ந்து வருவதால் சுற்றுப்புற சூழலில் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள ஏதுவாகவும், வருங்கால சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டும் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது இத்திட்டத்தின் மூலம் நம் நகருக்கான தேவையான கட்டமைப்பை ஏற்படுத்துவதிலும், பராமரிப்பு மற்றும் தொடர் கண்காண...

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தெருவிளக்கு பராமரிப்பு வாகனத்தை மேயர் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்தாா்.

Image
தூத்துக்குடி மாநகராட்சியில் தெரு விளக்குகள் மற்றும் உயர் மின் கோபுர விளக்குகள் பழுது ஏற்பட்டால் அதனை பராமரிப்பதற்கு ஏற்கனவே இருந்த வாகனம் பழுதடைந்து விட்டது இந்நிலையில் மாநகராட்சி சார்பில் 10 லட்சம் மதிப்பில் புதியதாக தெரு விளக்கு பராமரிப்பு வாகனம் வாங்கப்பட்டுள்ளது அந்த வாகனத்தை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி தெருவிளக்கு பராமரிப்பு வாகனத்தை துவக்கி வைத்தார். அந்த வாகனத்தை இயக்குமாறு பணியாளருக்கு உத்தரவிட்டார்.  அதன் அடிப்படையில் வாகனத்தில் பொருத்தப்பட்டு இருந்த தெரு விளக்கு பராமரிப்புக்கான கிரேன் எவ்வளவு உயரம் உயர்த்த முடியும் நான்கு பக்கமும் சுற்ற முடியுமா என்று கேட்டார் அதற்கு பணியாளர் சுமார் 40 முதல் 50 அடி வரை உயரம் வரும் நான்கு பக்கமும் எந்த திசைக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று பணியாளர் கூறினார் வாகனத்தை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் பாதுகாப்பான முறையில் நின்று தெரு விளக்குகளை பழுது பார்க்க வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் ரவீந்திரன். சுரேஷ்குமார். கவுன்சிலா் கனகராஜ் போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி...

ஆறு மணி நேரம் காக்க வைத்து சந்திக்க வந்தவர்களை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய அமைச்சர் கீர்த்தனா.

Image
  தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டுதளம் அமைக்க கடந்த அரசு நடவடிக்கை எடுத்தது இதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு முள்ளக்காடு. பழைய காயல். புல்லாவெளி உள்ளிட்ட நான்கு கிராமத்தில் உள்ள சுமார் 2000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி கப்பல் கட்டு தளம் அமைப்பதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் சென்று பார்வையிட்டு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று கூறினார் ஆனால் ஒரு மாத காலமாகியும் இதுவரை எந்த ஒரு பதிலும் இல்லாத சூழ்நிலையில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவை உப்பு உற்பத்தியாளர்கள் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் சந்தித்து தங்களுடைய பகுதியில் கப்பல் கட்டு தலம் அமைக்கப்பட்டால் 15,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் வேறு இடத்தில் கப்பல் கட்டுதளத்தை மாற்ற வேண்டும் என்று கூறினார்கள் நான் நேரில் வந்து பார்வையிட வருகிறேன் என்று தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா உப்பு உற்பத்தியாளர்களிடம் கூறி இரு...

பொட்டலூரனி கிராமத்தில் 772 வது நாளாக மீன் கம்பெனி அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொட்டலூரனி கிராமத்தில் உள்ள மூன்று மீன் கம்பெனிகளை மூட வேண்டும் இந்த கம்பெனியால் கிராம மக்கள் குடி இருக்க முடியவில்லை சுகாதாரம் இல்லை துர்நாற்றம் வீசுகிறது என்று கூறி பொட்டலூரனி கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இன்று 772 வது நாளாக போராட்டம் நடைபெறுவதை முன்னிட்டு கிராம மக்கள் பரபரப்பாக போஸ்டர் அடித்து மாவட்டம் முழுவதும்  போடப்பட்டுள்ளது தமிழக முதலமைச்சர் விஜய் பரந்தூர் மக்களுக்கு நீதி வழங்கியது போல பொட்டலூரணி கிராம மக்களுக்கும் நீதி வழங்குங்கள் என்று மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு தமிழக வெற்றி கழகம் தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது.  இந்நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மதன்ராஜா அமைச்சரானதும் கண்டிப்பாக பொட்டலூரணி கிராமத்தில் உள்ள மீன் கழிவுகளை மூடப்படும் என்று கூறினார் கிராமத்துக்கு வருவதாகவும் கூறினார் ஆனால் நேரில் இதுவரை வரவில்லை ஆனால் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்...

முதலமைச்சர் விஜயின் பேச்சு ஆணவத்தின் உச்சம் திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்

Image
  தூத்துக்குடி தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய பதிலுரைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசின் மீதான மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு மற்றும் பாலியல் குற்றங்கள் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஆதாரங்களுடன் முன்வைத்து நியாயமான கேள்விகளை எழுப்பினார். இதற்கு முதலமைச்சர் விஜய் உரிய பதிலளிப்பார் என்றே எதிர்பார்த்தோம். ஆனால், முதலமைச்சருக்கான மாண்புகளை மறந்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் பிதற்றல்களை மட்டுமே முதலமைச்சர் விஜய் சபையில் முன்வைத்துள்ளார். மாநிலத்தில் ஒரே மாதத்தில் 150 பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதற்குப் பதில் சொல்ல முடியாத முதலமைச்சர், திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். பாஜகவுடன் இணக்கமாக இருந்துகொண்டு, திமுகவை மட்டும் குறிவைத...

அம்மோனியா கசிந்து 11 பேர் பலி - செயின்ட் பீட்டர் அண்ட் பால் நிறுவனத்தை மூட பரிந்துரை.!

Image
அம்மோனியா வாயு கசிந்து 11 பேர் பலியான செயின்ட் பீட்டர் அண்ட் பால் கடல் உணவு நிறுவனத்தை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு பரிந்துரை கடந்த ஜூன் 21ம் தேதி திருவள்ளூர் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள செயின்ட் பீட்டர் அண்ட் பால் கடல் உணவு நிறுவனத்தில் அம்மோனியா கசிந்தது அம்மோனியா வாயுவை சுவாசித்த சுமார் 11பேர் தற்போது வரை உயிரிழப்பு - சுமார் 63 பேர் மருத்துவமனையில் சிகிச்சை விபத்தை தொடர்ந்து செயின்ட் பீட்டர் அண்ட் பால் கடல் உணவு நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு அமைத்த சிறப்பு குழு ஆய்வு நடத்தியது ஆய்வை தொடர்ந்து சமர்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் செயின்ட் பீட்டர் அண்ட் பால் கடல் உணவு நிறுவனத்தை மூட பரிந்துரை

சாலை அமைத்ததில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு என புகார்: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு.!

Image
  திருவண்ணாமலையில் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையின் 7 குழுக்கள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தென்மாத்தூரில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் ஆழ்வார் பேட்டையில் உள்ள எ.வ.வேலு வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 13 இடங்களில் DVAC சோதனை நடைபெற்ற நிலையில் சாலை அமைத்ததில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு என எழுந்த புகார் தொடர்பாக எ. வ. வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு, ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஃபுட் ரிவ்யூ : "FSSAI உரிமம் உள்ள கடைகளில் மட்டுமே வீடியோ எடுக்க வேண்டும்"-யூடியூபர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு!

Image
  சமூக வலைத்தளங்களில் உணவு விமர்சனம் (Food Review) செய்யும் யூடியூபர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனிவரும் காலங்களில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) முறையான உரிமம் அல்லது பதிவு பெற்ற உணவகங்களில் மட்டுமே ஃபுட் ரிவ்யூ செய்ய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபகாலமாக, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் உணவு விமர்சனம் என்ற பெயரில் தரம் மற்றும் சுகாதாரம் இல்லாத கடைகளுக்கும் விளம்பரம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத் துறையின் முக்கிய கட்டுப்பாடுகள். FSSAI உரிமம் கட்டாயம்: யூடியூபர்கள் வீடியோ எடுக்கும் கடைகளில் FSSAI உரிமம் (License) அல்லது பதிவுச் சான்றிதழ் நுகர்வோருக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய கடைகளில் மட்டுமே ரிவ்யூ எடுக்க அனுமதி உண்டு. வெளித்தோற்றம் மட்டும் போதாது: உணவகங்களின் வெளித்தோற்றம் மற்றும் உள் அலங்காரங்களை (Ambience) மட்டுமே...

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு.!

Image
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு முதலமைச்சர் விஜய்யின் முகத்தை பார்க்கும்போது சினிமாவில் நடித்துக் கொண்டு நடிகையோடு சந்தோஷமாக இருந்த என்னை இப்படி அரசியலில் மாட்டி விட்டீர்களே என்று முழிப்பதுபோல் முகம் உள்ளது என தூத்துக்குடி, ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நிலையில் தவெகவினர் அளித்த புகாரின்பேரில் ஆத்தூர் காவல்நிலைய போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு தமிழக முதல்வர் விஜய் பற்றி ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மரியாதை குறைவாக அவதூறு பரப்பும் வகையில் பேசியது, மோ*தலை தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த விழாவில் திமுக முன்னா...

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் : ரூ.755 கோடி ஒதுக்கீடு.!-செப்டம்பர் 15ம் தேதி தொடக்கம்.!

Image
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் - ரூ.755 கோடி ஒதுக்கீடு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் முதலமைச்சர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தாலும் செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளில் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கிறார் முதலமைச்சர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு மட்டும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்

திருச்செந்தூர் கோயில் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்வு அறிவிப்பு : ஜூலை 7-க்குள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம்!

Image
  திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மூலவர் அபிஷேகக் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்கிறது. இதுபோல் பல்வேறு கட்டண உயர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விலைவாசிக்கு ஏற்பக் கட்டணங்களை மாற்றியமைக்கத் தக்கார் தீர்மானத்தின் அடிப்படையில் புதிய கட்டண உயர்வு உத்தேசிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நிலவி வரும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டும், நிர்வாக நலன் மற்றும் வருவாய்க் குறைவை ஈடுசெய்யும் வகையிலும், தற்போதுள்ள கட்டணச் சேவைகள் மற்றும் அபிஷேக சிறப்பு தரிசனக் கட்டணங்களை உயர்த்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்கள் அடங்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தங்கரத உலா மற்றும் சண்முகார்ச்சனை: தங்கரத உலா திட்டத்திற்கான ஒருநாள் கட்டணம் 2,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாகவும், அதன் நிரந்தர வைப்பு நிதி 50,000 ரூபாயில் இருந்து 1 லட்ச ரூபாயாகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சண்முகார்ச்சனைக்கான ஒருநாள் கட்டணம் 5,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாயாகவும், நிரந்தர வைப்பு நிதி 72,00...

தூத்துக்குடியில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு: ரவுடிகள் இருவர் கைது!

Image
  தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது! தூத்துக்குடி அருகே உள்ள வேப்பலோடை பாண்டியாபுரம் கிராமம் தெற்கு தெருவில் வசிப்பவர் காவிரி (36). இவருடைய கணவர் இசக்கிமுத்து உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த 22-ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாகக் காவிரி மருத்துவமனையில் இருந்து வந்துள்ளார். நேற்று இரவு 8 மணி அளவில் காவிரி தன் கணவருக்கு உணவு வாங்குவதற்காகத் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு வி.வி.டி. சிக்னல் அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்குச் சென்றுள்ளார். உணவு வாங்கிவிட்டுத் தனது செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் காவிரியிடமிருந்த 5,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடியது. இதுகுறித்து காவிரி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்...

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பொதுமக்கள் புகார் அளித்த 10 நிமிடத்தில் குடிநீர் தொட்டிக்கு சென்று ஆய்வு.!

Image
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பல்வேறு பணிகளை பார்வையிடுவதற்காக மேயர் ஜெகன் பொியசாமி பூபாலராயபுரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அவரது காரை பார்த்த பெண்கள் வணக்கம் தொிவித்தனா். உடனே காரில் இருந்து இறங்கி பெண்களிடம் என்ன என்று கேட்டாா் அப்போது பெண்கள் அதற்கு எங்கள் பகுதியில் சரியாக குடிநீர் வருவதில்லை வாழ்வு ஆப்ரேட்டரிடம் கேட்டால் முறையான பதில் இல்லை என்று கூறினார்கள்.  உடனடியாக பணிகளைப் பார்வையிட செல்லாமல் பூபால்ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி குடிநீர் நீரேற்றுநிலைய தொட்டிக்கு சென்று அங்கு பணியில் இருந்த பணியாளரிடம் வாழ்வு ஆப்ரேட்டர் எங்கே என்று கேட்டார். அதற்கு அங்கு இருந்த பணியாளர் வெளியே சென்றுள்ளார் என்று கூறினார் அப்போது அங்கு பணியில் இருந்த பணியாளரிடம் குடிநீர் அளவு விநியோகம் செய்யப்படுகின்ற பதிவேடு வேண்டுமென்று கேட்டு அதனை வாங்கி பார்த்தால் அப்போது இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து எந்தப் பகுதிக்கு எல்லாம் செல்கிறது என்ற விபரங்களையும் கேட்டாா். அதன்படி அங்கு இருந்த பணியாளரிடம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை குடிநீர் விநியோகம் செய்யக்கூடாது மூன்று ...

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் நலத்திட்ட உதவி வழங்கல்.!

Image
  தூத்துக்குடி அந்தோணியார்புரத்தில் உள்ள தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் உறுப்பினாின் நிலையை அறிந்து சேசுமரியானுக்கு சங்கத்தின் சார்பில் தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநில தலைவர் மருதப்பெருமாள், செயலாளர் ஜெயராஜ். பொருளாளர் செல்வகுமரன் சங்கத்தின் உறுப்பினர். அந்தோணிசெல்வன் ஆகியோா் புதிய இரும்பு கட்டில் வழங்கினாா்கள்.