தூத்துக்குடி பள்ளியில் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு நாள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி புனித அன்னாள் சி.ஐ.எஸ்.சி.இ பள்ளியில் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான சுபாஷினி கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டுமென்று மாணவர்களிடம் அன்பாக வலியுறுத்தினார்கள். நீதிஅரசர் சிறப்புரைக்கு பின்பு தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சூசைநாதர் மதுவிலக்கு இயக்கத்தின் முன்னாள் இயக்குநர் ஜெயந்தன் டி கிரேஸ் உரையாற்றுகையில், மாணவர்கள் போதைப் பொருட்களிலிருந்து விலகி, நன்னெறி வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் குறிப்பாக ஊடகப்போதை, மதுப்போதை, மற்றும் வாழ்வை அடிமைப்படுத்தும் பல்வேறு போதைப் பழக்கத்திலிருந்து வெளிவந்து அறநெறியான வாழ்க்கையை நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

நிகழ்ச்சிகளை பள்ளியின் தாளாளர் பிரமிளா பிரான்சிஸ், முதல்வர் விஜய்அன் மற்றும் அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பு செய்திருந்தாா்கள்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி