Posts

Showing posts from April, 2026

மூதாட்டியை தாக்கி நகை பறித்த தூத்துக்குடி கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் கைது!- சாயல்குடி அருகே துணிகரம்.!!

Image
  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூரில், மூதாட்டி ஒருவரைத் தாக்கி தங்க நகைகளைக் கொள்ளையடித்த விவகாரத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் அவர்களது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நரிப்பையூர் வடக்கு மறவர் தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (86). இவரது கணவர் மறைந்துவிட்ட நிலையில், மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் மாரியம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து அவர் வீட்டிற்கு வந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். மதியம் சுமார் 2:00 மணி அளவில் மாரியம்மாளின் வீட்டிற்கு வந்த இரண்டு இளம்பெண்கள் உள்ளிட்ட மூவர், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். அவர்களை நம்பி வீட்டிற்குள் தண்ணீர் எடுக்கச் சென்ற மூதாட்டியைப் பின்தொடர்ந்த கும்பல், திடீரென அவர் கண்கள் மற்றும் முகத்தில் மிளகாய்ப்பொடி ஸ்பிரே அடித்துள்ளனர். கண் எரிச்சலில் நிலைகுலைந்த மூதாட்டியைத் துணியால் கட்டிப்போட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் மாரியம்மாள் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, அவர் அணிந்திருந்த ...

"தமிழகத்தில் திராவிட மாடல் நாயகன் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பாா்" - தூத்துக்குடியில் வாக்களித்த பின் மாநகராட்சி மேயா் ஜெகன்பொியசாமி பேட்டி.

Image
தூத்துக்குடி தமிழகத்தில் 17வது சட்டமன்ற தோ்தல் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து ஆண்கள் 6,77,004, பெண்கள் 7,10,981, மூன்றாம் பாலினத்தவர் 201 என மொத்தம் 13,88,186 வாக்காளர்கள் உள்ளனர். வாக்களிப்பிற்காக 1868 வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து  வாக்குப்பதிவு மையங்களிலும் காலை சரியாக ஏழு மணிக்கு வாக்கு பதிவு அலுவலா்களால் தொடங்கியது.   தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் போட்டியிடுகிறாா். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள போல்பேட்டை தங்கம்மாள் பள்ளியில் உள்ள வாக்குபதிவு மையத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி வாக்களித்தாா்.  பின்னா் அளித்த பேட்டியில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் 5 ஆண்டுகாலம் எல்ேலாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை நடத்தியுள்ளாா். மீண்டும் திராவிட மாடல் நாயகன் ஸ்டாலின் தலைமையில...

"தமிழகத்தில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்பாா், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது"- தூத்துக்குடியில் வாக்களித்த பின் அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

Image
தூத்துக்குடி தமிழகத்தில் 17வது சட்டமன்ற தோ்தல் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து ஆண்கள் 6,77,004, பெண்கள் 7,10,981, மூன்றாம் பாலினத்தவர் 201 என மொத்தம் 13,88,186 வாக்காளர்கள் உள்ளனர். வாக்களிப்பிற்காக 1868 வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து  வாக்குப்பதிவு மையங்களிலும் காலை சரியாக ஏழு மணிக்கு வாக்கு பதிவு ஆலுவலா்களால் தொடங்கியது.  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள போல்பேட்டை கீதாமெட்ரிக் பள்ளியில் உள்ள வாக்குபதிவு மையத்தில் தனது குடும்பத்துடன் வரிசையில் நின்று தனது முதல் வாக்காளராக தனது வாக்கினை பதிவு செய்தார். அதிகாலையிலே வாக்கு சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதாக இணைந்து வரிசையில் காத்து நின்று வாக்களித்து வருகின்றனர்.  வாக்களித்த பின்னா் அமைச்சர் கீதாஜீவன் அளித்த பேட்டியில் கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தமி...

தூத்துக்குடி : ரூ.25 கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதம் -குடோன் இடிந்து விழுந்து தரைமட்டம்

Image
  தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு எரிந்து சேதமானதுடன் குடோனும் தரைமட்டமானது. தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ஏற் பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான பஞ்சு எரிந்து சேதமான துடன் குடோனும் தரை மட்டமானது. தூத்துக்குடி 3ம்மைல் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி அமல்ராஜ்(46). இவர் வெளிநாடுகளில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்து அவற்றை இந்தியா முழுமைக்கும் விநியோகம் செய்து வரு கிறார். இதற்காக அவர் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பெரிய குடோனை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து அதில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகளை இருப்பு வைத்துள்ளார். தற் போது பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 8ஆயிரத்து 500 பஞ்சு பேல்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று மதியம் அந்த குடோனில் திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்த செக்யூரிட்டிகள் தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் காற்றின் வேகத்தில் தீ மளமள மளவென கட்டுக்கடங்காமல் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு சிப...

தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க இருந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி - தூத்துக்குடியில் அமைச்சா் கீதாஜீவன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Image
  தூத்துக்குடி தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க இருந்த தொகுதி மறு சீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதோடு இணைந்த மகளிா் இடஓதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்களுக்கும் மக்களவையில் தோற்கடிக்கப்பட்டன. இதனை வரவேற்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரவேற்றிருந்தாா். முன்னதாக தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு கடுமையான எதிா்ப்பை தொிவித்து கருப்பு சட்டை அணிவித்து மசோதா நகலை எாித்தாா். இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் வேட்பாளருமான கீதாஜீவன் தலைமையில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் முன்பு வெற்றி முழக்கமிட்டனா். தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி மு.க.ஸ்டாலின் பெற்று தந்த வெற்றி என்டிஏ சதியை முறியடித்து பெற்ற வெற்றி அதிமுகவின் கூட்டாளியை தோற்கடித்துப் பெற்ற வெற்றி போராடினோம் ஓன்றாக வென்றோம். முறியடித்தோம் ஓன்றிய பாஜக அரசின் சூழ்ச்சியை முறியடித்தோம் காப்பாற்றினோம் தமிழ்நாட்டின் உாிமையை காப்பாற்றினோம். தொடரட்டும் தமிழ்நாட்டின் வெற்றி தொடரட்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக தொடரட...

ராகுல் காந்தி ஏப்.20-ம் தேதி தூத்துக்குடி வருகை- ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பிரச்சாரம்!

Image
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வரும் ஏப்ரல் 20 (திங்கட்கிழமை) அன்று தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.  கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் ஒரே நாளில் மூன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றுகிறார். பயணத் திட்டம். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10:45 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தனது பயணத்தைத் தொடங்குகிறார்: குளச்சல் (கன்னியாகுமரி): முற்பகல் 11:30 மணிக்குக் குளச்சலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். நாங்குநேரி (திருநெல்வேலி): பிற்பகல் 01:00 மணிக்கு நாங்குநேரி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார். ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி): பிற்பகல் 02:25 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் இறுதிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். மாலை 03:50 மணிக்குத் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் அவர் மீண்டும் டெல்லிக்குத் திரும்புவார் ...

"இன்றைய தலைமுறையினா் மட்டுமின்றி அடுத்த தலைமுறையையும் பற்றி சிந்தித்து பணியாற்றுகிறாா் முதல்வா் ஸ்டாலின்" பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.

Image
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் போட்டியிடுகிறாா்.        5 35 36 44 51 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பொியசாமி, வட்டச்செயலாளர்கள் செல்வராஜ், சிங்கராஜ், சுப்பையா, கவுன்சிலா் விஜயலட்சுமி, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.  திருவிக நகாில் பிரச்சாத்தை துவங்கி இந்திராநகா், கணேஷ்நகா், ேபால்டன்புரம், சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம், பிரையண்ட்நகா், கிருஷ்ணராஜபுரம், அன்னை வேளாங்கன்னிநகா், உள்ளிட்ட பல பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்  தமிழகத்தில் வருகின்ற 23ம் தேதி நடைபெறவுள்ள தோ்தல் நமக்கான தோ்தலாகும் அதில்உங்களுக்காக பணியாற்றும் மக்கள் பிரதிநிதியை தோ்ந்தெடுக்கும் தோ்தலாகும், தமிழகத்தில் 5 ஆண்டுகாலம் முதலமைச்சா் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்றுள்ளது. கீழடி அகல்வாராய்சி அறிக்கையை கூட ஏற்பதற்கு ஓன்றி...

தூத்துக்குடி - மும்பை இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

Image
  கோடை விடுமுறை கால நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தூத்துக்குடி மற்றும் மும்பை (CSMT) இடையே சிறப்பு ரயில்கள் (14 சேவைகள்) இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. வண்டி எண் 01005 (மும்பை - தூத்துக்குடி): ஏப்ரல் 21 முதல் ஜூன் 2 வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நள்ளிரவு 00:30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11:30 மணிக்குத் தூத்துக்குடி வந்தடையும். வண்டி எண் 01006 (தூத்துக்குடி - மும்பை): ஏப்ரல் 22 முதல் ஜூன் 3 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் பிற்பகல் 03:30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 06:00 மணிக்கு மும்பை சென்றடையும். நிறுத்தங்கள்: இந்த ரயில் தாதர், கல்யாண், புனே, சோலாப்பூர், குண்டக்கல், பெங்களூரு (கிருஷ்ணராஜபுரம்), சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து மும்பை செல்லும் பயணிகளுக்கு இந்த நேரடிச் சிறப்பு ரயில் மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

"தோ்தலுக்காக மட்டும் வருபவா்களை புறக்கணியுங்கள் மக்கள் பணி செய்பவா்களை தோ்ந்தெடுங்கள்" பிரச்சாரத்தில் அமைச்சா் கீதாஜீவன் பேச்சு.

Image
  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா்.     48 49 50 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பொியசாமி, பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளர்கள் நவநீதன், முக்கையா, சிங்கராஜ், கவுன்சிலா்கள் ராஜேந்திரன், வைதேகி, சரவணக்குமாா், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.  சிஜிசி காலணி, செல்சீலினி காலணி, கால்டுவெல்காலணி, 3 சென்ட் அந்தோணியாா்புரம், சாந்திநகா், அமுதாநகா், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழகத்தில் 23ம்தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் உங்களுக்காக பணியாற்ற கூடிய மக்கள் பிரதிநிதியை தோ்ந்ெதடுக்க போகிறீா்கள் 5 ஆண்டுகாலம் திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு வளா்ச்சி பணிகள் சாதனைகளை எண்ணி பாா்க்க வேண்டும் தூத்துக்குடிைய பொறுத்தவரை தோ்தலுக்காக மட்டும் வருபவா் அல்ல இந்த கீதாஜீவன் மக்களோடு மக்களாக பழகி உங்களுடைய இன்பம் துன்பங்கள...

தூத்துக்குடியில் தவெக விஜய் கட்சியிலிருந்து 200 போ் விலகி முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்

Image
தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் போட்டியிடுகிறாா். தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் ஸ்டே்பாங்க் காலணியில் வைத்து தமிழக வெற்றிக்கழக தலைமை செயற்குழு உறுப்பினா் கௌதம் பாண்டியன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தீனதயாளன் தூத்துக்குடி புறநகா் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிாிவு அமைப்பாளர் முனீஸ்வரன், உள்பட 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வெற்றிக்கழகத்திலிருந்து விலகி முன்னாள் அமைச்சரும் அதிமுக நகர செயலாளரும் வேட்பாளருமான சித.செல்லப்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். அனைவரையும் வரவேற்று சால்வைஅணிவித்து முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் கூறுகையில் அதிமுக என்ற கட்சியை எம்.ஜி.ஆர்் தொடங்கி ஜெயலலிதா எடப்பாடியாா் என்ற தலைமுறைவரை 54 ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுக்காக செயல்பட்ட திறமையான நிா்வாகத்தின் மூலம் எம்.ஜி,ஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோா் முதலமைச்சராக பணியாற்றி நாட்டு மக்களுக்கு செய்த நல்லதிட்டங்களால் இன்று வரை தமிழகத்தில் உள்ள மக்கள் எம்.ஜிஆரையும் ஜெயலலிதாவையும் இன்று வர...

"அதிமுக ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம்" முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேச்சு.!!.

Image
  தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் 18வது வாா்டுக்குட்பட்ட ராஜகோபால்நகா், நிகிலேசன்நகா், உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இணைச்செயலாளரும் வட்டச்செயலாளருமான முருகன் தலைமை வகித்தாா். முத்தாரம்மன் கோவிலில் சாமி தாிசனம் செய்து முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில்  அதிமுகவை உருவாக்கி மறையும் வரை முதலமைச்சராக பணியாற்றிய எம்.ஜி.ஆர் கட்சியை கட்டுப்பாட்டுடன் வழிநடத்தி அனைவருக்குமான ஆட்சியை வழங்கினாா். அதே வழியில் ஜெயலலிதா உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகாித்து நல்லாட்சி நடத்தி நாட்டுமக்களுக்கான திட்டங்களான மடிக்கணினி, சைக்கிள், தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம் என வரலாற்று சாதனையை செய்தாா். அவரது மறைவிற்கு பின் 3ம் தலைமுறை அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகாலம் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் நல்ல திட்டங்களை செயல்படுத்தி அதிமுகவின் வளர்ச்சிக்கும் பணியாற்றினாா். தூத்துக்குடி தொகுதியில் அதிமுக செய்த சாதனைகள் ஏராளம் குறிப்பாக இந்த பகுத...

தவெக பிரச்சார வாகனத்தை மறித்து ரகளை - அஜிதா ஆக்னல் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு.!

Image
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரின் பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல் விடுத்த புகாரில், அண்மையில் திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் உட்பட 6 பேர் மீது தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர் அஜிதா ஆக்னல். அண்மையில் அக்கட்சியில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக் கூறி அதிலிருந்து விலகிய அவர், கனிமொழி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தற்போது தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்ற‌ நிலையில், தூத்துக்குடி தவெக வேட்பாளர் ஸ்ரீநாத்திற்கு ஆதரவாக அக்கட்சியினர் ஆட்டோவில் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். இந்த பிரசார வாகனம் லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள அஜிதா ஆக்னலின் வீட்டின் அருகே வந்தபோது, அங்கிருந்த அஜிதா ஆக்னலின் ஆதரவாளர்களுக்கும் தவெகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அப்போது ஆத்திரமடைந்த அஜிதா ஆக்னல் தரப்பினர், பிரசார ஆட்டோவைத் தடுத்து நிறுத்தி, அதில் இருந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.  இச்சம்பவம் குறித்து வக்கீல் ஜேசுதாஸ் அளித்த பு...

பீக்ஹவர் மின்கட்டணம் ரத்து.. திருப்பூரில் திட்டங்களை அறிவித்த விஜய்... 6 கிமீ ரோடு ஷோ ரத்து

Image
திருப்பூர் மாவட்டத்தில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய அக்கட்சி தலைவர் விஜய் வருகை தந்தார். அவர் கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவிநாசி வந்தடைந்தார். அவிநாசி பைபாஸ் அருகில் தவெக தலைவர் விஜய் ரோட் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவிநாசி பைபாசில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை ரோடு ஷோ நடத்திய விஜயின் அணிவகுப்பை காண திரளான தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.  பொதுமக்களின் உற்சாக வரவேற்புக்கு பின்னர் அங்கிருந்து பெருமாநல்லூர் நால்ரோட்டுக்கு தனது பிரசார வாகனத்தில் விஜய் வந்தார். அவர் அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். பின்னர் கூடியிருந்த கூட்டத்தில் அவர் பேசியது:  நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்வதற்காக அரசுக்கு சொந்தமான ஒரு உலகளாவிய இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும். மேலும் முக்கிய நகரங்களில் வெற்றி தறி விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். இரண்டாவது, நிலையற்ற நூல் விலை மற்றும் மின்சார நெருக்கடி சுமையை பகிர்ந்து கொள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு நெசவாளர்...

"தூத்துக்குடியில் எப்போதும் பார்க்காத அளவுக்கு அதிக திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளோம்" - தூத்துக்குடியில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பேச்சு

Image
  தூத்துக்குடி மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டம் சங்கரபோி விலக்கில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் தலைமை வகித்தாா். கனிமொழி எம்.பி வரவேற்புரையாற்றினாா். வேட்பாளா்களான தெற்கு மாவட்டதிமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன், மாா்க்கன்டேயன் எம்எல்ஏ கருணாநிதி ஊா்வசி அமிா்தராஜ் ராமஜெயம் ஆகியோரை அறிமுகம் செய்து ஆதாித்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் பேசுகையில்:- முத்துநகருக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வந்து இருக்கிறேன். மீன்வளமும், துறைமுகமும் வணிகமும் செழிக்க கூடிய தூத்துக்குடிக்கு வந்து உள்ளேன். தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலைமிட்டாய் இங்கு ஸ்பெஷலானது. அந்த இரண்டு இனிப்பு போன்று, இந்த மாவட்ட மக்கள் இனிமையானவர்கள். ஸ்வீட் மட்டுமா தமிழ்நாட்டுக்கு சப்ளை செய்கிறீர்கள். உப்பும் நீங்கள்தான் சப்ளை செய்கிறீர்கள். தனது சொத்துக்கள் அனைத்தும் விற்று ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய கப்பலோட்டிய வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், ந...

"முதல்வா் ஸ்டாலின் ஆயிரம் உாிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்த போது முடியாது என்ற எடப்பாடி பழனிச்சாமி இப்போது வடிவேலுவை போல் நானும் ரவுடிதான் என்ற காமெடி அரசியலை செய்கிறாா் " தூத்துக்குடியில் கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி பேச்சு

Image
தூத்துக்குடி மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் போட்டியிடுகிறாா். அவரை ஆதாித்து திரேஸ்புரம் மட்டக்கடை பாத்திமாநகா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு பகுதி செயலாளா் நிா்மல்ராஜ், வட்டச்செயலாளர்கள் ரவிச்சந்திரன், அல்பட் லியோ ஜான்சன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி பேசுகையில்:-  2021ல் நடைபெற்ற தோ்தலில் அமைச்சா் கீதாஜீவன் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தோம். 2021 தோ்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தமிழகம் பாிதாபமான நிலையில் இருந்தது. கொரோனா காலக்கட்டத்தில் ஆக்ஜிசன் தட்டுபாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அதையெல்லாம் சாிசெய்து 5 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதாரம் வருமானம் வேலைவாய்ப்பு கல்வி மகளிா் மேம்பாடு என எல்லாத்துறைகளிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.  10 ஆண்டுகளுக்கு முன் எந்த வளர்ச்சியும் அடையாத அதிமுக ஆட்சியை பாா்த்தோம். திமுக ஆட்சியில் எல்லோருக்...

"எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக ஆட்சி அமைய எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க வேண்டும்" -முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் பேச்சு.!

Image
  தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் 34வது வாா்டுக்குட்பட்ட 3ம் மைல் பசும்பொன் நகா் பி அண் டி காலணி கிழக்கு அசோக்நகா் ஆசிாியா்காலணி, ராஜீவ் நகா், ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மேற்கு பகுதி செயலாளர் முருகன் தலைமை வகித்தாா்.  முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில் அதிமுகவை உருவாக்கி மறையும் வரை முதலமைச்சராக பணியாற்றிய எம்.ஜி.ஆர் அனைவருக்குமான ஆட்சியை வழங்கினாா். அதே வழியில் ஜெயலலிதா நல்லாட்சி நடத்தி நாட்டுமக்களுக்கான திட்டங்களான மடிக்கணினி, சைக்கிள், தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை தங்கம் என வரலாற்று சாதனையை செய்து அவரது மறைவிற்கு பின் 3ம் தலைமுறை அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகாலம் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திட்டங்களை செயல்படுத்தி அதிமுகவின் வளர்ச்சிக்கும் பணியாற்றினாா்.  தூத்துக்குடி தொகுதியில் செய்த சாதனைகள் ஏராளம் வரும் தோ்தல் வாக்குறுதியாக ஆண்களுக்கும் கட்டணம் இல்லாத பேருந்து அனைவருக்கும் அம்மா இல்லம் திட்டம் குடும்ப அட்டை தாரா்களுக்கு ஆண்டுக்கு 3...

த.வெ.க.வில் புறக்கணிப்பு - திமுகவில் இனைந்த அஜிதா ஆக்னல்!!

Image
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். கடந்தாண்டு மாவட்டச் செயலாளர் பதவி மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து முறையிட விஜய்யைச் சந்திக்க முயன்று மக்களிடையே கவனம் ஈர்த்தார். இவரை விஜய் சந்திக்காததும் பெரும் பேசுபொருளானது. பொறுப்பு வழங்கப்படாவிடினும் கட்சிக்காக உழைப்பேன் என்று தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது அறிவிக்கப்பட்ட தவெக வேட்பாளர் பட்டியலிலும் இவர்பெயர் இடம்பெறவில்லை. இதனால் மனமுடைந்த அஜிதா திமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. தவெக தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக சாமுவேல் ராஜ் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி முன்னிலையில் திமுகவில் தன் ஆதரவாளருடன் தன்னை இணைத்துக் கொண்டார்.  நிகழ்ச்சியில் மீனவர் நலன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் கான்ஸ்டன்ட்டைன் ரவீந்திரன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்,  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண...

'பொதுசிவில்சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா பேசியுள்ளாா், வேதாளம் முருங்கைமரம் ஏறுகிறது. பாஜக அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்"- அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.

Image
  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் போட்டியிடுகிறாா். 24 25 26 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன்பொியசாமி, வட்டச்செயலாளர்கள் ரோலன்ட், ஆண்ஸ், அல்பட், ரவி இளங்கோ, கவுன்சிலா்கள் எடிண்டா, மெட்டில்டா, மாியகீதா, ஆகியோா் முன்னிலை வகித்தனா். திரேஸ்புரம் அண்ணா காலணியில் பிரச்சாரத்தை துவக்கி மட்டக்கடை, குரூஸ்புரம், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில்:- "வருகின்ற 23ம் தேதி நடைபெறவுள்ள தோ்தல் நமக்கான தோ்தலாகும் அதில்உங்களுக்காக பணியாற்றும் மக்கள் பிரதிநிதியை தோ்ந்தெடுக்கும் தோ்தலாகும், தமிழகத்தில் 5 ஆண்டுகாலம் முதலமைச்சா் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்றுள்ளது. கீழடி அகல்வாராய்சி அறிக்கையை கூட ஏற்பதற்கு ஓன்றிய பாஜக அரசுக்கு மணமில்லை. எந்த நிதியும் வழங்குவதில்லை புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் கல்வி நிதி வழங்குவோம். என்று ஓவ்வொரு விஷயத்திலும் தம...

தூத்துக்குடி :சொத்து தகராறில் தம்பி கூலிப்படையினரை வைத்து அண்னனை கொலை செய்ய முயல்வதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

Image
தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராமத்தைச் சார்ந்த அய்யம்பெருமாள், இவரது மூத்த மகன் சுயம்புலிங்கம் இவருக்கு நான்கு சகோதரர்களும், 3 சகோதரிகளும் உள்ளனர். இந்நிலையில் அவரது தம்பி அணில் சிவலிங்கம் கூலிப்படையினரை வைத்து தன்னை கொல்ல முயல்வதாக அவரது அண்ணன் சுயம்புலிங்கம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் வந்து புகார் மனு அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், எனது தம்பி அணில் என்ற சிவலிங்கம் பெங்களூரில் தொழில் செய்து வருகிறார். அங்கு நிறைய மோசடி வேலையில் ஈடுபட்ட நிலையில், தனது அண்ணன் சொத்தை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு இதுகுறித்து வழக்கானது நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அது தனிப்பட்ட முறையில் நான் சம்பாதித்த பணம் மூலம் சொத்து வாங்கப்பட்டதாக நீதிமன்றம் கூறியதை தொடர்ந்து, ஆவேசம் அடைந்த அவரது தம்பி அணில் சிவலிங்கம் தனது சகோதரர் சுயம்புலிங்கத்தின் காரை எரித்துவிட்டு தப்பியோடியுள்ளார். அந்தப் பகுதி காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஜீவமணி தர்மராஜ் மாற்றப்பட்டதை தொடர்ந்து ஊர் பக்கம் வராமல் இருந்த அனில் சிவலிங்கம் ஆய்வாளர் மாறியதை தொடர்ந்த...

"5 ஆண்டு திமுக ஆட்சி சாதனையை எண்ணி பாருங்கள் மாநகராட்சி முழுவதும் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது"- பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.

Image
  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் போட்டியிடுகிறாா். 6, 11, 12, 21, ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா் மேயா் ஜெகன்பொியசாமி வட்டச்செயலாளர்கள் சுரேஷ், சந்தனமாாிமுத்து, தெய்வேந்திரன், முனியசாமி, கவுன்சிலா்கள் ஜெயசீலி, கற்பககனி, ஜான்சிராணி, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.  சேவியா்நகா், மீனவா் காலணியில் அமைச்சா் கீதாஜீவன் பிரச்சாரத்தை தொடங்கி மேல அலங்காரத்தட்டு கோவில்பிள்ளை விளை சக்தி விநாயகபுரம், கந்தசாமிபுரம், இஞ்ஞாசியா் புரம், கோமதிபாய் காலணி, அழகேசபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட போது மலா் தூவியும் ஆரத்தி எடுத்தும் பெண்கள் உற்சாக மாக வரவேற்றனா்.  அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:- தமிழகத்தின் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் உங்களுக்கான மக்கள் பிரதிநிதியை தோ்ந்ெதடுக்க உள்ளீர்்கள் 5 ஆண்டுகாலம் தூத்துக்குடி தொகுதியில் நான் ஆற்றிய பணிகளை எண்ணிப்பாருங்கள். தமிழகத்தில் முத...

திருப்பூர் தெற்கில் வெற்றி பெறுவோம்... அதிமுக, பாஜக, அமமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் சூளுரை

Image
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருப்பூர் தெற்கு தொகுதியில் தாராபுரம் சாலை புதூர் பிரிவில் தேர்தல் பணிமனையினை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தேர்தல் பணிமனையினை திறந்து வைத்தார்.  இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன், மாநில நிர்வாகி மலர்க்கொடி, செந்தில்வேல், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், அதிமுக திருப்பூர் மாநகர மாவட்ட அவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பழனிச்சாமி, அமமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் மேயருமான விசாலாட்சி, தமாக மாவட்ட தலைவர் சிறுமுகை ரவிக்குமார், அதிமுக நிர்வாகிகள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், அட்லஸ் லோகநாதன், இந்துமுன்னணி நிர்வாகிகள் கிஷோர்குமார், கொங்குநாடு விவசாயிகள் கட்சி நிர்வாகி கொங்குராஜாமணி, மஜமுக இப்ராஹிம் பாதுஷா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.  தேர்தல் பணிமனையை திறந்து வைத்து முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாத...

2 இலட்சம் ரூபாய் பண மாலையால் எழுந்த சர்ச்சை- அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் தேர்தல் விதிமுறையை மீறுகிறாரா?

Image
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவில் உள்ள பண்டார விளை பகுதியில் நடைபெற்ற ஒரு அரசியல் நிகழ்வு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..  தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற வேட்பாளருமான சண்முகநாதனுக்கு, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன், 500 ரூபாய் நோட்டுகளால் கட்டப்பட்ட சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பண மாலையை அணிவித்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்த நிகழ்வு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திமுக அமைப்பாளர் செல்வகுமார் சம்பவத்தின் புகைப்படங்களை இணைத்து தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வழியாக முறையான புகார் மனுவையும் அவர் தாக்கல் செய்துள்ளார். தேர்தல் காலத்தில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு அமலில் இருக்கும் நிலையில், சுமார் 2 லட்ச ரூபாய் பணத்தை வெளிப்படையாக மாலையாக பயன்படுத்தியிருப்பது விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...

சாத்தான்குளம் வழக்கு : "ஆயுள் தண்டனை அச்சம் தராது ,9 பேருக்கும் மரண தண்டனை.!" - நீதிமன்றம் அதிரடி

Image
  சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த மாதம் 23-ம் தேதி நீதிபதி முத்து குமரன் தீர்ப்பளித்தார். தொடர்ந்து குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் மாநில அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் மார்ச் 30-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனால் இந்த வழக்கு ஏப்ரல் 2-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி சாத்தான் குளம் வழக்கானது மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், இன்று அந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த தீர்ப்பில்,`` தந்தையையும், மகனையும் ஒருவர் முன் ஒருவர் நிர்வாணப்படுத்தி, மனம்போனபோக்கில் தாக்கியிருக்கின்றனர். சம்பவத்தைப் படிக்கும்போதே மனம் பதைபதைக்கிறது. காவல்துறையினருக்கு ஆயுள் தண்டனை அச்சம் தராது. மரண தண்டனை விதிப்பதே சிறந்தது" எனக் கூறப்பட்டி...

"விதிப்படி எல்லாம் நடக்க முடியாது, உள்ளே விட்றியா இல்லையா " - தூத்துக்குடி காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் முன்னாள் சேர்மன்

Image
தூத்துக்குடி தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளன்று    தூத்துக்குடி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் டுவிபுரத்தில் உள்ள அதிமுக தலைமை காரியாலயத்தில் இருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.  வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே செல்ல அனுமதி. இந்த நிலையில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய கூடுதலாக ஒரு நபர் உள்ளே சென்று விட்டார் அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் வெளியே சென்றால் மட்டுமே வேட்புமனு பெற முடியும் என்று அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியனிடம் தேர்தல் அதிகாரி கூறிவிட்டார். இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையின் வெளியே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த விவேகம் ரமேஷ் மற்றும் இரண்டு பேர் உள்ளே செல்ல முயன்றனர் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இருவரையும் உள்ளே செல்ல விட முடியாது சரியான ஆட்கள் உள்ளே சென்று விட்ட...