"தமிழகத்தில் திராவிட மாடல் நாயகன் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பாா்" - தூத்துக்குடியில் வாக்களித்த பின் மாநகராட்சி மேயா் ஜெகன்பொியசாமி பேட்டி.

தூத்துக்குடி தமிழகத்தில் 17வது சட்டமன்ற தோ்தல் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து ஆண்கள் 6,77,004, பெண்கள் 7,10,981, மூன்றாம் பாலினத்தவர் 201 என மொத்தம் 13,88,186 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்களிப்பிற்காக 1868 வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து  வாக்குப்பதிவு மையங்களிலும் காலை சரியாக ஏழு மணிக்கு வாக்கு பதிவு அலுவலா்களால் தொடங்கியது.  

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் போட்டியிடுகிறாா். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள போல்பேட்டை தங்கம்மாள் பள்ளியில் உள்ள வாக்குபதிவு மையத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி வாக்களித்தாா். 

பின்னா் அளித்த பேட்டியில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் 5 ஆண்டுகாலம் எல்ேலாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை நடத்தியுள்ளாா். மீண்டும் திராவிட மாடல் நாயகன் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி 2.0 மீண்டும் தமிழகத்தில் அமையும் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்பாா் என்று கூறினாா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி