Posts

Showing posts from July, 2026

இளம் பெண் மாயம் - பெற்றோர் புகார்.!

Image
  பெயர்: லூர்துஷாமினி (27/26) தந்தை பெயர்: இரவீந்திரன் முகவரி: 49C, பூபால்ராயபுரம், 1-வது தெரு, தூத்துக்குடி. மேற்படி பெண் 30.07.2026 அன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர், இரவு வரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் குற்ற எண்: 659/2026, பெண் காணாமல் போனது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்படி பெண்ணைப் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தால், கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்: தூத்துக்குடி வடக்கு காவல் நிலையம்: 94981 01884 வடக்கு காவல் நிலைய ஆய்வாளர்: 94458 80573

தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தாவிற்கு போயிங் ஏர்பஸ் ரக விமானங்களை இயக்க வேண்டும். ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை.!

Image
தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தாவிற்கு போயிங் ஏர்பஸ் ரக விமானங்களை இயக்க வேண்டும் என ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும்  முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் :- தூத்துக்குடி மாவட்டம் ஏராளமான தொழில்கள் நிறைந்த மாவட்டமாகும். உப்பு உற்பத்தி, தீப்பெட்டி தயாரிப்பு போன்ற பாரம்பரிய தொழில்களுடன் அனல் மின் நிலையங்கள், ஸ்பிக் உரத் தொழிற்சாலை, கனநீர் தயாரிப்பு, சிர்கோனியம், DCW கெமிக்கல் ஆலை ஆகிய கனரக இயந்திர தொழிற்சாலைகள் மற்றும் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் என்ற வகையில் தொழில்வளம் பெருகியுள்ளது. தற்போது வின் பாஸ்ட் நவீன கார் தொழிற்சாலை, உடன்குடி அனல் மின் நிலையம், குலசேகரபட்டினம் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் போன்று புதிய தொழில்கள் வருகின்றன. மேலும் பல பெரிய தொழிற்சாலைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். துறைமுகம், இர...

151 மருத்துவ இடங்களை கைவிட்ட தவெக அரசு - மருத்துவர்கள் சங்கம் கண்டனம்!

Image
151 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை ஒன்றிய அரசுக்கு ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு, அரசின் நிர்வாக தோல்வியே காரணம் என மருத்துவர்கள் சங்கம் கண்டனம்! தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அரசின் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சரண்டர் செய்ய எதிர்ப்பு கூட தெரிவிக்க முடியாமல் போயுள்ளது. #MedicalCollege | #SupremeCourt | #TNGovt

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு!

Image
  கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு அரசு வழங்கிய அரசுப் பணி நியமன ஆணைகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட நிலையில், தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து கடந்த ஜூலை 10-ஆம் தேதி உயிரிழந்த 31 பேரின் வாரிசுதார்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார். கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியதை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. வழக்கு விசாரணையின் போது, காவல்துறையின் தவறால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், சாதாரண அரசுப் பணியே வழங்கப்பட்டுள்ளதாகவும் அ...

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Image
  தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444 வது ஆண்டுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணியளவில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலி முடிந்ததும் அருள்தந்தைகள் ஊர்வலமாக கொண்டுவந்த தூய பனிமயமாதா உருவம் பொறித்த கொடி பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என முழக்கமிட்டனர். மேலும், புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளைத் தட்டி தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26 இல் தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும். திருவிழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவர்-மாணவிகள் கல்வி மேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், நற்கருணை பவனி நடைபெறும். 10 ஆம் நாள் விழாவில் நகர வீதிகளில் பனிமய அன்னையின் திருவுருவ தேர் பவனி நடைபெறும். வரும் ஆகஸ்ட...

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!

Image
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், காவல் துறை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி  எம்பி குற்றம் சாட்டினார். தூத்துக்குடிக்கு வருகை தந்த கனிமொழி, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது, நாடு முழுவதும் போராடிய இளைஞர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு போராடி மத்திய அரசை எதிர்கொண்டு வென்று காட்டியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை இளைஞர்கள் முன்வைக்கிறார்கள். திமுக தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையும் அதுவே ஆகும். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உருவாகும்" என்று தெரிவித்தார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர்: "தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்...

தூத்துக்குடி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினா் 100 போ் திமுகவில் ஐக்கியம்.!

Image
தூத்துக்குடி கடம்பூா் பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினா் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.    கயத்தாறு அருகே கடம்பூா் பகுதியை சேர்ந்த தொழிலதிபா் ராமசாமி, மதிமுக முன்னாள் கிளைச்செயலாளா் கந்தசாமி, 10வது வாா்டு அதிமுக செயலாளர் சுப்புராஜ், முன்னாள் தேமுதிக கிளைச்செயலாளர் அச்சப்பன், அமமுக கிளைசெயலாளர் சுடலைராஜன், அமமுக மகளிரணி மகாலட்சுமி, சிபிஐ கலாவதி, அதிமுக செல்லத்துரை பாண்டியன், சீனிவாசன், பேரூராட்சி 12வது வாா்டு கவுன்சிலா் முத்துமாாி உள்பட 100க்கும் மேற்பட்டோா் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். அவா்களுக்கு கருப்பு சிவப்பு துண்டு அணிவித்து முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் வரவேற்றாா். அப்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கயத்தாறு ஓன்றிய செயலாளர்கள் சின்னப்பாண்டியன், பாலக்குமாா், கடம்பூர் பேரூராட்சி தலைவர் நாகராஜா, பேரூராட்சி 9வது வாா்டு கவுன்சிலா் ஜெயராஜ், முருகன், கிருஷ்ணமூர்த்தி, மாியசுந்தரம் மாநகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் ...

"நாட்டில் சட்ட ஒழுங்கு, காவல்துறை இருக்கிறதா இல்லையென்றால் சிலருக்கு மட்டும் செயல்படுவதாக மாறிவிட்டதா" - கனிமொழி எம்.பி கேள்வி?

Image
தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டியனின் மகன் லிங்ககுமாருக்கு சொந்தமான 30 சென்ட் நிலத்தில் தற்போது கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், கோவில்பட்டியைச் சேர்ந்த துளசி அம்மாள் போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் தூத்துக்குடி சப் கோர்ட், துளசி அம்மாளின் மனுவை தள்ளுபடி செய்து லிங்ககுமாருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. ஆனால், அதே நிலத்தை துளசி அம்மாள் மீண்டும் தூத்துக்குடியைச் சேர்ந்த சங்கரலிங்கம் உள்ளிட்டோருக்கு பத்திரப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்நிலையில், நேற்று இரவு சங்கரலிங்கத்தின் ஆதரவாளராகக் கூறப்படும் தவெக வக்கீல் அணி அமைப்பாளர் ஜேசுதாஸ், வக்கீல் சேசு உள்ளிட்டோர் ஜேசிபி இயந்திரத்துடன் அத்துமீறி நுழைந்து, லிங்ககுமார் கட்டி வந்த கட்டடத்தை இடித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக லிங்ககுமார் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஆனால் காவல்துறையினர் புகார் அளித்த தவெக வக்கீல் அணி அமைப்பாளர் ஜேசுதாஸ் மற்றும் சங்கரலிங்கம் ம...

கோரம்பள்ளம் காலங்கரைப் பகுதியில் சுய-கணக்கெடுப்பு உதவி முகாமில் தூத்துக்குடி கல்லூாி மாணவிகள் உதவி!.

Image
தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியின் கணிதத் துறையின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, துறைத் தலைவர் குழந்தை தெரஸ் வழிகாட்டுதலில் கோரம்பள்ளம்  காலங்கரைப் பகுதியில் சுய-கணக்கெடுப்பு உதவி முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இரண்டாம் ஆண்டு கணிதத் துறை மாணவிகள் கிராம மக்களுக்கு வீடு வீடாகச் சென்று பயனாளிகள் இணையவழி சுய-கணக்கெடுப்பு நடைமுறையை நிறைவு செய்ய உதவும் வகையில், தங்கள் கைபேசிகள் மற்றும் இணைய வசதிகளைப் பயன்படுத்தி குடும்ப விவரங்களைச் சரியாகப் பதிவு செய்ய மற்றும் சுய-கணக்கெடுப்பு விவரங்களை சமர்ப்பிக்க உதவி செய்தனர். மேலும், கணக்கெடுப்புக்குத் தேவையான ஆவணங்கள், தனிப்பட்ட விவரங்கள் மற்றும் துல்லியமான தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்த சந்தேகங்களையும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.

தூத்துக்குடி இசக்கியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு அன்னதானம்.

Image
தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாத்து ஓடை இசக்கியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று தீா்த்தகரை சென்று புனித நீர் எடுத்து வரப்பட்டது. இதனை தொடா்ந்து சாமக்கொடை நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  கொடைவிழாவை முன்னிட்டு 2000 பேர் பங்கேற்ற அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை முத்தையாபுரம் தொழிலதிபா் டிரான்ஸ்போா்ட் உாிமையாளா் பாலமுருகன் தொடங்கி வைத்தாா்.  விழாவில் கோவில் தா்மகா்த்தா பிரபாகரன், பொருளாளா் அய்யம்பெருமாள், நிா்வாகிகள் கனிராஜ், ஆறுமுகம், அன்னராஜ், பொன்ராஜ், இசக்கிராஜா, முருகன் உள்பட கோவில் கமிட்டியினா் ஊா் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி பனிமயமாதா கோவில் பொருட்காட்சியை மேயா் ஜெகன் பொியசாமி திறந்து வைத்தாா்.!

Image
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 444வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஓஎல்எஸ் ப்ரண்ட்ஸ் எக்ஸ்போ 2026 பொருட்காட்சி புனித சவேரியானா மைதானத்தில்  தொடங்கியது. பொருட்காட்சி திறப்பு விழாவிற்கு பனிமயமாதா பேராலய அருட்தந்தை ஜான் செல்வம் தலைமை வகித்தாா். புனித சவேரியானா அருட்தந்தை சிங்கராயன்  முன்னிலை வகித்தாா்.  மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி  பொருட்காட்சியை திறந்து வைத்து கூறுகையில் பிரதி பெற்ற பனிமயமாதா கோவில் திருவிழா 10 நாட்கள் தொடா்ந்து நடைபெறவுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையும் கடந்து வௌிநாட்டிலிருந்து வருகைதந்து அனைத்து தரப்பினரும் பங்கு பெறும் மிகப்பொிய திருவிழாவாக நடைபெறுகிறது. விழாவிற்கு வருமை தரும் அனைவரும் சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை பல்வேறு பொழுது போக்கு அம்சத்துடன் கூடிய மனதிற்கு மகிழ்ச்சியுடன் குடும்பத்தோடு கொண்டாடும் வகையில் 80க்கும் மேற்பட்ட விளையாட்டு உபயோகத்திற்குடிய ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனங்கள், ஆடைகள், உணவக அரங்குகள், சிறுவர் விளையாட்டு அம்சங்கள், பல்வேறு வணிக நிறுவனங்களின் அரங்குக...

"பாசனக் கால்வாய்கள், குளங்கள், மதகுகளை ஆய்வு செய்து வடகிழக்கு பருவமழைக்கு முன் சீரமைக்க வேண்டும் " - கலெக்டாிடம் பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாசனக் கால்வாய்கள், வெள்ளநீர் கால்வாய்கள் மற்றும் பாசனக் குளங்களில் பழுதடைந்துள்ள மதகுகளை நேரடியாக ஆய்வு செய்து, வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக தேவையான சீரமைப்பு மற்றும் முன்னேற்பாட்டு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கலெக்டா் விஷுமகாஜனிடம் அளித்துள்ள  கோரிக்கை மனு கூறியிருப்பதாவது       தாமிரபரணி ஆற்றின் மூலம் மருதூர் மேலக்கால்வாய், மருதூர் கீழக்கால்வாய் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட, தென்கால் கால்வாய்கள் வழியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்து வருவதாகவும், சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட வறட்சி பகுதிகளின் குடிநீர் தேவைக்கும் இந்த நீராதாரங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது      தற்போது தென்மேற்கு பருவமழை போதிய அளவில் இல்லாததால் மாவட்டத்தில் பெரும்பாலான பாசனக் குளங்கள் வறண்டு காணப்படுவதாகவும், கார் பருவ சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளதால், விவசாயிகள் வரவிருக்கும் வடகிழக...

பக்கிள் ஓடையில் கொட்டப்படும் இறைச்சி கடை கழிவுகளால் சுகாதார சீர்கேடு.!- மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Image
  தூத்துக்குடி டேவிஸ்புரம் பிரதான சாலையில் அமைந்துள்ள குரூஸ்புரம்  பக்கிள் ஓடை 4ம் பாலத்தில் இறைச்சி கடை கழிவுகளை வாளி வாளியாக தினமும் வந்து கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் அதிகம் உள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது எல்லா நாட்களையும் விட ஞாயிற்றுக்கிழமை அதிகமாகி வருகிறது. இதை சுற்றியுள்ள இறைச்சி கடை உரிமையாளர்கள் இதனை தொடர்ந்து செய்து வருகின்றனர் என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இதே இடத்தில் வழி போக்கில் பலரும் தங்களது வீட்டு குப்பைகள் மற்றும் கழிவுகளை பிளாஸ்டிக் கேரி பையில் வைத்து பக்கிள் ஓடையில் போட்டு விட்டு செல்வதால் தன்ணீர் சரியாக செல்லாமல் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள், ஈக்கள் அதிகமாகி நோய்களை பரப்பும் ஆபத்தும் உள்ளது. காலையில் தெரு தெருவாக வீடு தவறாமல் மாநகராட்சி குப்பை வண்டி வீட்டு வாசல் முன் வருகிறது. அங்கு இந்த குப்பைகளை மற்றும் கழிவுகளை போடாமல் பக்கிள் ஓடையில் போடுவது தவறு என்பதை சுட்டிக்காட்ட மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்க...

"நெஞ்சம் கலங்குகிறது, முதலமைச்சர் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது" - தூத்துக்குடி வாலிபர் மரண சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின், கனிமொழி MP கண்டனம்.!

Image
  தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது. போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது. காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். கனிமொழி MP வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் :-நாகர்கோவிலைத் தொடர்ந்...

தூத்துக்குடியில் கைதான வாலிபர் உயிரிழந்தது எப்படி? காவல் துறை விளக்கம்!

Image
  தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர் உயிரிழந்தது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த 17.07.2026 அன்று தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாசலம் (24) என்பவர், 120 மதுபான பாட்டில்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறி, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையக் காவல்துறையினரால் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர், காணொளிப் பதிவுடன் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தகவல்கள் அவரது குடும்பத்தினருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, அன்று மாலை 5.50 மணியளவில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை செய்த மருத்துவர், அவர் திடகாத்திரமாக இருப்பதாகவும், உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை என்றும் சான்றளித்தார். பின்னர் சட்ட நடைமுறைகளுக்காக மீண்டும் தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, லாக்-அப்பில் பிற கைதிகளுடன் வைக்கப்பட்டார். அங்கு மற்றவர்களுடன் பேசிக் கொண...

தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் த.வெ.க-வில் ஐக்கியம்!

Image
தூத்துக்குடி முன்னாள் அதிமுக நகர மன்றத் தலைவர் மனோஜ் குமார் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுகவிலிருந்து விலகிய நிர்வாகிகள் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இணைப்பு விழாவில் அமைச்சர் மற்றும் த.வெ.க மாநிலப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், தூத்துக்குடி மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க முன்னணி நிர்வாகிகள் முன்னிலை வகித்து, புதிய உறுப்பினர்களைச் சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்வில், அதிமுக முக்கிய நிர்வாகிகளான கு. கென்னடி, பி. சார்லஸ், பி. லியோ உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்பாளர்களும், 24 மற்றும் 25-வது வார்டுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களும் த.வெ.க-வில் இணைந்தனர். தூத்துக்குடி மாநகரப் பகுதியில் அதிமுகவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் மாற்றுக்கட்சியில் இணைந்த சம்பவம் உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக மோகம்,...

தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு சாா்பில் ரயில்வே நிர்வாகத்திடம் கோாிக்கை.!

Image
தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு சாா்பில் ரயில்வே நிர்வாகத்திடம் அளித்த கோாிக்கையில் 1வது கேட்டு 2வது கேட்டு இரண்டும் ஒரே நேரத்தில் அடைக்கப்படுகிறது அதுவும் ஒரு நாளைக்கு 46 தடவை இரண்டு கேட்டுகளும் ஒரே நேரத்தில் மூடப்படுகிறது இதனால் பெரும் அளவில் மக்கள், மாணவர்கள், நோயாளிகள் என்று 6 மாத காலமாக பெரும் பாதிப்பிற்கு ஆளாக்கப்படுகிறார்கள்  தனித்துணி சிக்னல் அமைத்து போக்குவரத்துக்கு நெருக்கடி இல்லாமல் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக இரண்டு ரயில்வே கேட்களிலும் மக்கள் திரள் போராட்டத்திற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள்  கொடுக்கப்பட்டது. கூடிய விரைவில் தேதி அறிவிக்கப்பட்டு மாபெரும் மக்கள் திரள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று கூட்டமைப்பு சார்பாக விக்னேஷ், முஹம்மது ஜான், கண்ணன், சுடலை, அப்துல் காதர், காஜா மற்்றும் தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு அகமது இக்பால் ஆகியோா் தொிவித்தனா்.

தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளராக புல்டன் ஜெசின் நியமனம்.!

Image
தூத்துக்குடி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் மல்லிகாா்ஜீன் காா்கே இந்திய தேசிய நாடாளுமன்ற எதிா்கட்சித்தலைவா் ராகுல்காந்தி ஆகியோா் ஆசியுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்க தாகூா் ஓப்புதலோடு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளராக புல்டன் ஜெசின் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.  இந்திய தேசிய காங்கிரசின் வளா்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மாநகர மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகளுடன் இணைந்து பணியாற்றிட தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் சகாயராஜ் வாழ்த்து தொிவித்தாா்.

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் திருவிழாவையொட்டி கூட்டு தூய்மை பணியை மேயா் ஜெகன் பொியசாமி, ஆணையா் ப்ரியங்கா, தொடங்கி வைத்தனா்.

Image
  தூத்துக்குடி பனிமயமாதா ஆலய 444வது ஆண்டு கொடியேற்று திருவிழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட்மாதம் 5ம் தேதி நிறைவு பெறும் இதனையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் கூட்டு தூய்மை பணியை மேயா் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ாியங்கா ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.  பின்னா் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் தூத்துக்குடி பனிமயமாதா 444வது ஆண்டு திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்தமாதம் 5ம்தேதி நிறைவு பெறுகிறது.  இதையொட்டி தமிழகம் மற்றும் இந்தியா உள்ளடக்கிய மாநிலங்கள் மட்டுமின்றி வௌிநாடுகளிலிருந்தும் அதிக அளவில் வந்து செல்வாா்கள். எல்லா தரப்பினரும் பங்கு கொள்ளும் மிகப்பொிய திருவிழாவான இந்த விழாவிற்கு தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் கடந்த 4 ஆண்டுகளாக மாதா கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி முழுவதும் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் பணிகளை மேற்கொண்டு ஏற்கனவே சாலை வசதி பேவா்பிளாக் கல் பதித்தல் மின்விளக்கு குடிதண்ணீா் கழிவுநீர் கால்வாய் நீரோட்டம் என அனைத்து பணிகளும் முறையாக நல்லமுறையில் செய்து கொடுத்துள்ள நிலையில், 23ம் தேதி இன்...

தூத்துக்குடியில் லாக் அப் மரணம்? - விசாரணைக்குச் சென்ற வாலிபர் மரணம் – உறவினர்கள் போராட்டம்!

Image
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் தாக்குதலே உயிரிழப்பிற்கு காரணம் எனக் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி அமுதா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் அருணாச்சலம் (24). இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு எஃப்.சி.ஐ குடோன் அருகே சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை வைத்து விற்பனை செய்ததாக தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் தரண்யா தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.  காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் இருந்தபோதே அருணாச்சலத்திற்கு திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். வாலிபர் உயிரிழந்த செய்தி பரவியதும், அவரது உறவினர்கள் மற்ற...

மார்கண்டேயன் கைது : செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை நாக்கை துருத்தி மிரட்டல் விடுத்த ஏடிஎஸ்பி! - தலைவர்கள் பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்.!

Image
  தூத்துக்குடியில் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட எம்.எல்.ஏ., மார்கண்டேயனை படம் எடுக்கச் சென்ற பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் நாக்கை துருத்தியும், கைகளை ஓங்கியும் வரம்பு மீறி நடந்த ஏ.டி.எஸ்.பி திபு மீது அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன், “எலும்பை உடைத்து விடுவேன்” என முதல்வர் விஜய்யை பார்த்து கொலை மிரட்டல் விடும் தொனியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து த.வெ.கவினர் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் நேற்று காலை விளாத்திகுளம் – அம்பாள்நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரை கைது செய்தனர். சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மார்கண்டேயனை பார்க்க வந்த முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏக்கள் அப்துல் வகாப், கருணாநிதி ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இரவு சுமார் 7 மணியளவில் மருத்த...

இந்தியா-ஐரோப்பா கப்பல் போக்குவரத்திற்கு இரட்டைச் சிக்கல்: ஆகஸ்ட் 1 முதல் ஏற்றுமதியாளர்கள் மீது மெர்ஸ்க் நிறுவனம் 2 முக்கிய கட்டண மாற்றங்களை அமல்படுத்துகிறது.!

Image
  கப்பல் போக்குவரத்து நிறுவனமான மெர்ஸ்க், இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் இந்தியா-ஐரோப்பா கொள்கலன் சரக்குப் போக்குவரத்திற்கான தனது கட்டணங்களை உயர்த்தவுள்ளது. இதனால் ஒட்டுமொத்த சரக்குக் கட்டணங்கள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அவசரகால தற்செயல் கூடுதல் கட்டணத்தின் (Emergency Contingency Surcharge) கீழ் விதிக்கப்படும் கட்டண உயர்வுகள், இந்தியத் துறைமுகங்களிலிருந்து வடக்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் சரக்குகளின் மீது பாதிப்பை ஏற்படுத்தும்; ஒவ்வொரு சரக்குக் கட்டணமும் $1,000 (சுமார் ₹96,500) அதிகரிக்கும். ECS என்பது, வழித்தட நெரிசல், போக்குவரத்துத் தடைகள், தவறவிடப்பட்ட பயணங்கள் மற்றும் உபகரணப் பற்றாக்குறை போன்ற கொள்கலன் கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகளை ஈடுசெய்வதற்காகச் சேர்க்கப்படும் ஒரு கூடுதல் சரக்குக் கட்டணத்தைக் குறிக்கிறது. தென்னிந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள எண்ணூர், சென்னை, காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், கொல்கத்தா, கொச்சி, மங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய துறைமுகங்களில் இருந்து புறப்படும் வடக்கு ஐரோப்பாவிற்கான சரக்கு...

"இளமையின் விளையாட்டு முதுமையிலும் இளமையாக காட்டும் விளையாட்டு"- வீரா்களுடன் கலந்துரையாடி மேயா் ஜெகன் பொியசாமி பாிசு வழங்கினாா்.

Image
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அசோக்நகாில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி இறகுபந்து கூட்டரங்கில் சிஎம்என் ஷட்டில் கிளப் சாா்பில் தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமாி, தென்காசி, மதுரை, விருதுநகா், தேனி, சிவகங்கை, ஆகிய 8 மாவட்டங்களுக்கிடையேயான ஆண்களுக்கான இறகு பந்து விளையாட்டு போட்டி 2 நாட்களாக நடைபெற்றது. நிறைவு விழாவில் விளையாட்டு வீரா்களுடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி கலந்துரையாடி பேசுகையில் இளமை பருவம் என்பது எல்லோருக்கும் வாழ்க்கையின் முக்கியமான கட்டமாகும் சிறுவயதில் இருந்தே ஏதாவது ஓரு விளையாட்டு போட்டியை தோ்ந்தெடுத்து அதை தினசாி விளையாடி வருவதின் மூலம் உடலில் உறுப்புகள் அனைத்தும் முழுமையாக இயங்கும் அதன் மூலம் ரெகுலரான உடல்நிலை அமைய பெற்று இரத்தோட்டம் நல்லமுறையில் இயங்கும் இந்த இளமையில் விளையாட்டுகளின் மூலம் எல்லோருடைய வாழ்க்கையும் முதுமையிலும் கூட இளமையாக நம்மை காட்டும் தற்போது பல கிராமப்பகுதிகளில் விவசாய பணிகளை செய்த பலா் 90 வயதிலும் வழக்கம் போல் உள்ள தனது விவசாய பணிகளையும் செய்து வருகின்றன. இந்த பருவத்தை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தோடு விளையாட்டு போட்டிகளில்...

தூத்துக்குடி 44வது வாா்டு மக்கள் தளம் திமுக சாா்பில் கல்வி உதவித்தொகை.!

Image
தூத்துக்குடி தமிழகத்தில் பள்ளி கல்வியில் படிக்க வேண்டும் என்று பலா் ஆா்வத்துடன் இருந்து வருகின்றனா். அவா்களுக்கு அரசின் சாா்பில் சில உதவிகள் செய்தாலும் மற்ற பல செயல்களுக்கு படிப்புக்கு தேவையான உதவிகள் தேவைப்படும் நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 44 வது வார்டு மக்கள் தளம் சார்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வழிகாட்டுதலின் படி 10 பேருக்கு கல்வி உதவித்தொகையாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் எலிசபெத் ராஜன் கல்வி நிதி வழங்கினார்.  விழாவில் மாநகர திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக் அப் தனபால், காங்கிரஸ் மண்டலத்தலைவர் நிா்மல் கிறிஸ்டோபா், முன்னாள் கவுன்சிலா் இசக்கிமுத்து, பகுதி பிரதிநிதி செந்தில்குமாா், மற்றும் ராஜன், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடியில் தாமிரபரணி நதியை மீட்க கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Image
  தூத்துக்குடி தாமிரபரணி நதியில் திருநெல்வேலி மாநகராட்சியில் மட்டும் 25 இடங்களில் சாக்கடை கலக்கும் அவலம் அவற்றை ரூபாய் 59 கோடி ரூபாய் ஒதுக்கிய பணத்தை வைத்து நதியில் சாக்கடை கலக்காமல் அடைத்திட தாமிரபரணி நதியை மீட்டிட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் உள்ள இரண்டு லட்சம் பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதற்கு தொடக்க விழாவானது தூத்துக்குடியில் தமிழன்டா இயக்கம் கலைக்குழு கலைக்கூடம் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த தொடக்க நிகழ்விற்கு தாமிரபரணி நீரினை பயன்படுத்துவோர் சங்க தென்கரைக்குளம் 2 தலைவர் ஆறுமுக நைனார் என்ற பாஸ்கர் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார் தமிழன்டா இயக்க தலைவர் கலைச்சுடர் மணி ஜெகஜீவன் தலைமை தாங்கினார் தமிழன்டா இயக்க பொதுச்செயலாளர் அத்திமரபட்டி விவசாயி ஜோதிமணி முன்னிலை வகித்தார். பொருளாளர் யாக்கோபு வாழ்த்துரை வழங்கினார் முன்னதாக அனைவரையும் அன்போடு வரவேற்றார் தமிழன்டா இயக்க துணை செயலாளர் பிரேக்கா இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாமிரபரணி நதியை பாதுகாப்பதற்காக கையொப்பமிட்டுள்ளனா்.

முதலமைச்சர் விஜயை விமர்சனம் செய்து பேசியதற்காக விளாத்திகுளம் திமுக MLA மார்க்கண்டேயன் கைது.

Image
கடந்த சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சனம் செய்து பேசியதாக கூறி வீட்டில் இருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டமன்றம் கூடும்போது முதல்வரின் எலும்புகளை உடைத்து விடுவோம், ஊழலின் மொத்த உருவம் தான் மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர், என கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய நிலையில், மிரட்டல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெறுப்புணர்வை தூண்டுதல் ஆகிய பிரிவுகளில்கீழ் கைது செய்யப்பட்டார் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் வைத்து திமுக MLA மார்க்கண்டேயனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது

தூத்துக்குடி : பொருட்காட்சி நடக்க உள்ள பகுதியில் மாமூல் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகிகள்!

Image
  தூத்துக்குடி, பனிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு பொருட்காட்சி நடக்க உள்ள பகுதியில் மாமூல் கேட்டு மிரட்டி பொருட்களை அடித்து நொறுக்கிய தவெக பகுதிச் செயலாளர் திவாகர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல். 'பொருட்காட்சிகள் மூலம் கிடைக்கும் பணத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும்' என மிரட்டிய தவெக பிரமுகர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். “என்னை கேட்டுதான் எல்லாம் செய்யணும்னு சொல்றான்.. தேர்தலில் வேலை பார்த்தா ரவுடித்தனம் பண்ணுவானா?” என நிர்வாகிகள் ஆவேசம் தூத்துக்குடி பணிமயமாதா பேராலய திருவிழாவை ஒட்டி சவேரியானா மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள பொருட்காட்சிக்குள் புகுந்து தவெக பகுதி செயலாளர் திவாகர், ஆண்டோ, சாமிங் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் பொருட்களைச் சூறையாடியதாக போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரனை.

விஜய் அறிவிப்பு.!?? - தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

Image
"If a patient dies in a hospital, the family will pay NOTHING." - CM Vijay's Proposal on Hospital Reforms தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினர் ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளதாகப் சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வைரலாகி வருகிறது.  இதனுள் மறைந்து கிடக்கும் உண்மை என்ன?  பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.  இதையடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களிலும் தேடிப் பார்த்த போது,  இது தொடர்பான எந்த செய்தியும் வெளியாகவில்லை.  அதே போல செய்தி ஊடகங்களிலும் இது குறித்தான செய்தி வெளியாகிவுள்ளதா என்று பார்த்த போது, முதல்வர் அறிவித்ததாக இது சம்பந்தமான எந்த செய்தியும் வெளியாகவில்லை.  இதை வைத்து பார்க்கும் போது, பரவி வரும் தகவல் ஆதாரமற்றவை என்பது உறுதியானது.  எனவே, த...

வடமாநிலங்களுக்கு காய்கறி ஏற்றிச் செல்லும் தமிழக லாரிகளை குறிவைத்து வாடகை பணம் மோசடி- மோசடி நபரை பிடித்து தருபவருக்கு 20 ஆயிரம் பரிசு அறிவிப்பு.!

Image
  தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு காய்கறி லோடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகளை குறிவைத்து, வாடகைத் தொகையை நூதன முறையில் மோசடி செய்து வரும் மர்ம நபரால் லாரி உரிமை யாளர்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநிலங்க ளில் இருந்து ஜெய்ப்பூர், ஆக்ரா, இந்தூர், நாக்பூர், ராஜ்பூர் உள்ளிட்ட வடமா நிலங்களுக்கு காய்கறிகள் லாரிகள் மூலம் அனுப்பப் படுகின்றன. இந்நிலையில், கடந்தாண்டு மே மாதம் முதல் ஒரே மர்ம நபர் தமிழக லாரிகளை குறிவைத்து, கடைக்காரர்களிடம் இருந்து லாரி வாடகைத் தொகையை மோசடியாக பெற்று வருவதாக லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுவரை ரூ.21 லட்சம் பறிபோனதால் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த மாதம் 25ம்தேதி கிருஷ்ணகிரியில் இருந்து இந்தூருக்கு மாங்காய் ஏற்றிச் சென்ற லாரிக்கு வரவேண்டிய ரூ.96 ஆயிரம், கடந்த 7ம்தேதி ஆந் திர மாநிலம் அனந்தபூ ரில் இருந்து ஆக்ராவுக்கு தக்காளி ஏற்றிச் சென்ற நாமக்கல் லாரிக்கு வர வேண்டிய ரூ.1.67 லட்சம் மற்றும் கடந்த 12ம்தேதி கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து ஜெய்ப்பூருக்கு தக்காளி ஏற்றிச் சென்ற நாமக்கல் லாரிக்கு வர வேண்டிய ரூ.1.37...

உடன்குடி கருப்பட்டியில் கலப்படம் : 75 சதவீதத்திற்கு மேல் சீனி கலந்த கருப்பட்டி, கற்கண்டு தயாரித்து விற்பனை - வியாபாரிகள் 5 பேருக்கு ரூ. 38 கோடி அபராதம் விதிப்பு.!

Image
  உடன்குடி என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது கருப்பட்டிதான். உடன்குடி கருப்பட்டி என்று ஊர் பெயரோடு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது . இந்த கருப்பட்டி மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 5 மாதங்கள் மட்டுமே உற்பத்தியாகும். தற்போது கருப்பட்டி உற்பத்திக்காக கற்பக தரு என்று அழைக்கப்படும் பனை மரத்தில் தினசரி ஏறி இறங்குவதற்கு இடையூறாக உள்ள சின்ன சின்ன தடைகளை நீக்குதல், பனை மரத்தில் உள்ள சில்லாட்டை, காய்ந்த ஓலைகளை அப்புறப்படுத்தி, மட்டைகளை விரித்து விடுதல், இப்படி விரித்து விட்டால் பதநீர் தரும் பாளைகள் வேகமாக வெளிவரும் என்கிறார்கள். பின்பு பாளையை கயிற்றால் கட்டி, தட்டி, பக்குவப்படுத்தி பதநீர் தரும் பாளைகளாக மாற்றுவார்கள். இப்போது கருப்பட்டி உற்பத்திற்கான ஆரம்பக்கட்ட பணி தொடங்கி முடிவுக்கு வந்துள்ளது. உடன்குடி பகுதியில் பெரும்பான்மை யான மக்களின் வாழ்வாதாரமாக இருந்த பனைத்தொழில் விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்களே செய்யும் நிலைக்கு தள்ளபட்டது. பனைத்தொழிலை அழியாத வண்ணம் காக்கும் வகையில் கருப்பட்டி, கற்கண்டு எப்படி தயாரிப்பது, பக்குவப்படுத்துவது என பல்...

தூத்துக்குடி மாவட்ட அளவிலான பேட்மிட்டன் போட்டி - பள்ளி மாணவி மிராயா முதலிடம் பிடித்து சாதனை!

Image
தூத்துக்குடி கார்ப்பரேஷன் பேட்மிண்டன் கிளப் (தூத்துக்குடி பேட்மிட்டன் அசோசியேஷன்) சார்பில், நான்கு மாவட்ட அளவிலான பேட்மிட்டன் போட்டிகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன.  (Under-9 & Under-11) ஆகிய பிரிவுகளுக்கான போட்டிகள் நடைபெற்றன.   இப்போட்டிகளில், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி N.மிராயா கலந்துகொண்டு, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலிடம் பிடித்து, முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.   வெற்றி பெற்ற மாணவி N.மிராயாவிற்கு, தூத்துக்குடி வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் திரு. வேல்ராஜ் அவர்கள் நேரில் கலந்து கொண்டு பரிசுகளையும், கோப்பையையும் வழங்கிப் பாராட்டி வாழ்த்தினார். இந்த விழாவில் பேட்மிட்டன் அசோசியேஷன் நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

கொள்கையோடு பணியாற்றி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்று பணியாற்றுங்கள் மாற்று கட்சியினா் இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.!

Image
தூத்துக்குடி தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வரை திமுக காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்து இரண்டு அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாநில மாவட்ட நிா்வாகிகள் விலகி திமுகவில் இணைந்து வருகின்றனா்  இந்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17வது வாா்டு பகுதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 போ்  கவுன்சிலா் சந்திரபோஸ் ஏற்பாட்டில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் அருள், சேகா், ஜெயக்குமாா், மாாிமுத்து, உள்பட 50 போ் திமுகவில் இணைந்தனர்.  அனைவரையும் வரவேற்று கருப்பு சிவப்பு சால்வை அணிவித்து மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் மாவட்டம் மற்றும் மாநகர பொறுப்பில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி நபர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளீா்கள். நாம் எல்லோரும் இணைந்து ஓற்றுமையாக பணி...

தூத்துக்குடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை மேயா் ஜெகன் பொியசாமி வழங்கினாா்.

Image
தூத்துக்குடி மாநகராட்சி 7வது வார்டுக்குட்பட்ட திருவள்ளுவர் புரம் பகுதியில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு திடீரென்று தீப்பிடித்தது. இதில் ஏழு வீடுகள் முழுவதும் தீயில் எரிந்தது. வீட்டிலிருந்த வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் துணிகள் சமையல் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து வாழ்வாதாரம் இன்றி தெருவில் ஏழு குடும்பங்கள் அவஸ்தைப்பட்டு வந்தது. தமிழக அரசு இது தொடர்பாக எந்த ஒரு நிவாரணமும் பொருட்களும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது.  இந்நிலையில் தீவிபத்து மூலம் எரிந்த ஏழு வீட்டின் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது வீட்டில் எந்த ஒரு பொருட்களும் இல்லை என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமியிடம் சில தினங்களுக்கு முன்பு நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர் அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் என்னால் முடிந்த உதவி கண்டிப்பாக உங்களுக்கு செய்வேன் என்று உறுதியளித்தார்.  அதன்படி வீட்டிற்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களான பீரோல். கட்டில். சீலிங் ஃபேன். கேஸ் அடுப்பு. தண்ணீர் பிடித்து வைக்கும் ட்ரம் உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருட்க...

தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்பில் காமராஜா் பிறந்தநாளை யொட்டி 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Image
தூத்துக்குடி காமராஜா் 124வது பிறந்தநாளை யொட்டி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் வட்டக்கோவில் அருகில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மைக்கிள் பிரபாகா் தலைமை வகித்தாா். வாா்டு தலைவா் ராஜரத்தினம் சுப்பிரமணியன், துணைத்தலைவர் ஜெபமாலை ராஜ், ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாா்டு செயலாளா்கள் ஜேசுபாக்கியம், எபனேசா் ரத்தினராஜ், ஆகியோா் வரவேற்புரையாற்றினாா்கள். மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் முன்னாள் எம்.எல்.ஏ சுடலையாண்டி, ஆகியோா் பெண்களுக்கு சேலை, மாணவிகளுக்கு நோட்புக் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினாா்கள்.  விழாவில் மண்டலத்தலைவர் ஐசன்சில்வா, நிா்மல்கிறிஸ்டோபா், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் மைதீன், வழக்கறிஞர் அணி தலைவர் பா்னபாஸ், மீனவா் அணி தலைவர் சேவியா்யம்மாள், துணைத்தலைவா்கள் ராஜாராம் பெத்துராஜ், வட்டாரத் தலைவர் எட்வா்ட்ராஜ், உள்பட பலா் கலந்து கொண்டனா். வாா்டு பொருளாளா் மாாிகாமராஜ் நன்றியுரையாற்றினாா்.

தூத்துக்குடியில் பிரதான சாலைகளில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதற்கு பிஜேபி எதிர்ப்பு - மாவட்ட தலைவா் சித்ராங்கதன் அறிக்கை

Image
  தூத்துக்குடி நகரின் பிரதான சாலைகளில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உடனடியாக அந்த கடைகளை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால், பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பிஜேபி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 63 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி சில கடைகள் மூடப்பட்டிருந்தாலும், தூத்துக்குடி எட்டயபுரம் சாலை மற்றும் குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில்,  கலைஞர் அரங்கம் அருகில்  ஏற்கனவே செயல்பட்டு வந்த ஒரு டாஸ்மாக் கடையின் அருகிலேயே அடுத்தாக புதிதாக மேலும் இரண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  ஒருபுறம் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்துவிட்டு, மறுபுறம் ஒரே பகுதியில் கூடுதலாக கடைகள் திறப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். மது போதையால் கொலை, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதி...

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் நாட்டின் பசுமை வளர்ச்சிப் பயணத்தில் புதிய மைல்கல் - பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் அன்னபூர்ணா அறிக்கை

Image
  தூத்துக்குடி இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் அறிமுகம், நாட்டின் ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் அன்னபூர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்தியா அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதன் ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாக, நாட்டின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  உலகின் முதல் வணிக ரீதியிலான ஹைட்ரஜன் பயணிகள் ரயில் சேவை ஜெர்மனியில் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவும் தனது சொந்த தொழில்நுட்ப திறனுடன் அந்த வரிசையில் இணைந்துள்ளது. இது ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பிரதமரின் இலக்கை மேலும் வலுப்படுத்துகிறது. ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம், கார்பன் உமிழ்வை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை உருவாக்குகிறது. டீசலுக்கு மாற்றாக ஹைட்ரஜனை பயன்படுத்துவதன் மூலம் நீராவி மட்டுமே வெளியேறுவதால், தூய்மையான மற்றும் பசுமையான போக்குவரத்துக்கு இ...

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு பேரணியை ஆணையா் ப்ரியங்கா தொடங்கி வைத்தாா்..!

Image
  தூத்துக்குடி தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆகஸ்ட் 1 முதல் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ல் சுய கணக்கெடுப்பு குறித்ததான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ப்ரியங்கா துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் உதவியாட்சியர் (பயிற்சி), துணை ஆணையர், மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

"எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது"- தூத்துக்குடியில் அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் பேச்சு.

Image
  தூத்துக்குடி  அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின்படி அண்ணா தொழிற்சங்கம் மற்றும் இணைப்பு தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் மாவட்டங்கள் தோறும் நடைபெற்று வருகிறது.  அதன்படி  தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் மற்றும் இணைப்பு அண்ணா தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளா் பெருமாள்சாமி தலைமையில், தெற்கு வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்கள் ராஜா, ராஜேந்திரன், அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலாசந்திரன் ஆகியோர் முன்னிலையில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மஹாலில் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் கல்விக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.  அமைப்புச் செயலாளரும் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான எஸ்.பி சண்முகநாதன் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் தமிழரசன், மாநில தலைவர் பொன் தனபாலன், மாநில பொருளாளர் அப்துல் அமீது ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றினாா்க...