அம்பேத்கர் சிலைக்கு செயற்கை நீரூற்று அமைத்து தருமாறு கோரிக்கை.!

 

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பொியசாமியை, நந்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் தாமோதரன், செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஸ்டீபன் ஜெயராஜ், கௌரவ தலைவர் துரை, கௌரவ ஆலோசகர் மதிவாணன் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பில்  மாநகராட்சிக்குட்பட்ட பாளை ரோடு பகுதியில் உள்ள (தென் பாகம் காவல்நிலையம் அருகில்)  அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலை அமைந்துள்ள வளாகத்தில் செடிகள் வைத்து பராமரிப்பதற்காக தண்ணீர் வசதி வேண்டியும், அலங்கார நீரூற்று ஒன்றும் அமைத்துத் தருமாறு நந்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பாக மேயரிடம் கோரிக்கை விடுத்தனர்.

நந்தமிழர் தொழிலாளர் நலச் சங்கத்தினர் கோரிக்கை, விரைவில் நிறைவேற்றி தருவதாக மேயர் உறுதி.

அம்பேத்கர் சிலை வளாகத்தில் தற்போது செடிகள் வைப்பதற்காக தண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளேன். மேலும் வரும் நாட்களில் செயற்கை நீரூற்று ஒன்றும் நேர்த்தியாக இந்த வளாகத்தினுள் அமைத்து தருகிறேன் என்று மேயர் ஜெகன் பொியசாமி உறுதி அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட நந்தமிழர் தொழிலாளர்  நலச் சங்க நிர்வாகிகள் காலம் கடத்தாமல் உடனடியாக நிறைவேற்றி தருமாறு வேண்டுகோள் விடுத்து நன்றி கூறிக் கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி