தூத்துக்குடி: தூய இம்மானுவேல் ஆலயம் முன்பு சபை மக்கள் ஆர்ப்பாட்டம்.!

 

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட தாளமுத்துநகர் சேகரம், தூய இம்மானுவேல் ஆலயத்தில் சபை மக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 09.11.2025 அன்று நடைபெற்ற சேகர மன்றத் தேர்தலில் தோல்வியடைந்த ஆபிரகாம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் முடிவை ஏற்காமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் செயல்படுவதை தடுக்க முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், தேர்தலுக்கு முன்பு அவர்கள் நிர்வாகத்தில் இருந்த 13 மாத காலத்தில் சபை மக்களின் காணிக்கை, பண்டிகை வரி, ஆசன நன்கொடை, ஆண்டு சந்தா உள்ளிட்ட தொகைகள் வசூலிக்கப்பட்ட போதிலும், அவற்றுக்கான வரவு-செலவு கணக்குகள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அந்தப் பணம் சேகர வங்கி கணக்கிலும் செலுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த 2012-ம் ஆண்டு முதல் சேகர அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், வரவு-செலவு பதிவேடுகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று, தற்போதைய நிர்வாகிகள் மீது களவு புகார் சுமத்த முயற்சி செய்யப்பட்டதாகவும், அலுவலகத்தில் இருந்த சிசிடிவி ஹார்ட்டிஸ்க் சேதப்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தற்போது மார்ச் மாதம் முதல் பொறுப்பேற்றுள்ள குருவானவர் காலேப் மேன்சிங் மற்றும் தற்போதைய நிர்வாகம் மேற்கண்ட முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதால், அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி