அனிதா ராதாகிருஷ்ணனை சிறைக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு - அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஜாமினில் விடுவிப்பு.!!
CM விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நீதிமன்ற காவல் மறுப்பு
பிணை தொகையாக ரூ.10,000 செலுத்திவிட்டு சொந்த ஜாமினில் விடுவிப்பு. திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து ,பத்து நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக இன்று காலையில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். தொடர் விசாரணைக்கு பிறகு அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். அதை தொடர்ந்து திருச்செந்தூர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் முன்னிலையில் ஆஜரானார். அரசு தரப்பு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு என இரு தரப்பினரும் காரசாரமாக சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக வாதிட்டனர்.
மேலும் அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி திருச்செந்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணன் நீதி வென்றதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
