மீனவர்கள் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முக்கிய கோரிக்கைகள் மனு!
தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மற்றும் ஃபைபர்படகு மீனவர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷூ மகாஜன் அவர்களிடம் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வணிகக் கப்பல்களால் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் வலைகள் மற்றும் வள்ளங்கள் சேதமடைவதைத் தடுக்க வேண்டும் என்றும், கடலோரக் கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்க உடனடியாகத் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், தொகுதி வரையறையில் மீனவர் கிராமங்களுக்கு (மண்டல கமிஷன் 1990 பரிந்துரைகளில்) பஞ்சாயத்து ராஜ்ஜியம் வழங்கப்பட வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையோடு, கடலோர இளைஞர்களுக்கு உயர்கல்வி மற்றும் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
