தூத்துக்குடி பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்.!

தூத்துக்குடி பள்ளிக் கல்வித்துறை சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு, அரசு உதவி ெபறும், மெட்ரிக் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்காக வயது வாரியான தடகளப் போட்டிகள் “விளையும் பயிர்” என்ற தலைப்பில் மாவட்டம் முழுவதும் வட்டார வாரியாக 6 மையங்களில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்காக மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் செயின்ட் மேரிஸ் மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

வட்டார அளவில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவ மாணவிகள் பங்கேற்கும் இப் போட்டிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் அனைத்தும் தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமையிலும், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் முன்னிலையிலும் நடைபெற்றன. போட்டிகளை தூத்துக்குடி கல்வி மாவட்ட அலுவலர் முனியசாமி மற்றும் சென்மேரிஸ் கல்லூரி முதல்வர் ஷிபானா ஆகிய இருவரும் துவக்கி வைத்தனர்.

முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி கூறுகையில் பள்ளி மாணவ மாணவிகளின் உடற்திறன் மற்றும் விளையாட்டுத் திறமைகளை இளம் வயதிலேய கண்டறிந்து அவர்களை ஒலிம்பிக் போட்டிகள் போன்று சர்வதே போட்டிகளில் பங்கேற்றிட ஏதுவாக பிரத்தியேகமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக 60மீ ஓட்டம், 600மீ ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் 11 வயது, 12 வயது மற்றும் 13 வயது பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டு அவர்களது திறமைகளை கண்டறிந்து தொடர் மதிப்பீடு  செய்து சிறந்த வீரர் வீராங்கனைகளாக உருவாக்கிட இத்திட்டம் பயனுள்ளதாக அமையும் எனவும் மாவட்டம் முழுவதும் 6 மையங்களில் வட்டார வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டு அதில் முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவ மாணவிகள் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க செய்து அவர்களின் திறமை மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள்  வழங்கிட வழி வகை ஏற்படுத்தப்படும் என முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி கூறினார்.

பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் ேவல்ராஜ் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி, இளம் வயதிலிருந்தே விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது மாணவ மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்துதல் மட்டுமல்லாமல் அவர்களது ஒழுக்கமான எதிர்கால வாழ்க்கைக்கும் பெரும் உதவியாக இருக்கும் என உற்சாகப்படுத்தினார். நடுவர்களாக அனைத்து பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்பட்டன.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி