காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் வீட்டிற்குள் கற்களை வீசிய நபர் கைது.!

தூத்துக்குடி சிதம்பரநகர் 2வது தெருவில், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி என்பவர் வீட்டின் மீது கற்களை வீசிய டூவிபுரம் 4வது தெருவைச் சேர்ந்த டேனியல் மகன் கிறிஸ்டோபர் (56) என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி சிதம்பரநகர் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் ஐஎன்டியுசி மாநில தலைவர் பி.கதிர்வேல். இவருடைய மகன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி. நேற்று (ஜூலை 3) இரவு சுமார் 10.40 மணி அளவில், பெருமாள்சாமி வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர் திடீரெனக் கல் எறிந்துவிட்டுத் தப்பிச் சென்றனர். இச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாகப் பொருட்கள் எதுவும் சேதமடையவில்லை.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று (ஜூலை 4) காலை 9.45 மணி அளவில் மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி தனது கட்சித் தொண்டர்களுடன் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு நேரில் சென்றார். அங்குப் பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் தரண்யாவிடம் புகார் மனு அளித்தார். அந்தப் புகாரில், தனது வீட்டின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சுச் சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் மீது சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டுத் தனித்தனியாக இரண்டு மனுக்களை அவர் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாய் கூசும் விதத்தில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குப் பெருமாள்சாமி சென்றார். 

அங்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவை நேரில் சந்தித்துப் புகார் மனுவை அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர், இப்புகார் மீது உரிய விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதனையடுத்து மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தெற்கு காவல் நிலைய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் மதுபோதையில் கற்களை வீசியதாக டேனியல் மகன் கிறிஸ்டோபர் (56) என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி