தூய மரியன்னை கல்லூரியில் பேரவைத் தேர்தல் - வரலாற்றுத்துறை மாணவி தலைவியாகத் தேர்வு!

 

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் பேரவைத் தேர்தல் இன்று நடைபெற்றது. 

கல்லூரி முதல்வர் சி.ஷிபானா மற்றும் சுயநிதிப்பிரிவு இயக்குனர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி இந்தத் தேர்தல் நடைமுறைகளை முறைப்படி தொடங்கி வைத்தனர்.

இத்தேர்தலில் கல்லூரியைச் சேர்ந்த 1,130 மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று, தங்களது வாக்குகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக ஆர்வத்துடன் பதிவு செய்தனர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தூய மரியன்னை கல்லூரியின் புதிய மாணவர் பேரவைத் தலைவியாக பிரியதர்ஷினி (மூன்றாமாண்டு, வரலாற்றுத்துறை) தேர்வு செய்யப்பட்டார். சுயநிதிப்பிரிவில் பொன் செல்வி (வணிகவியல் துறை) தலைவியாக தேர்வு செய்யப்பட்டார். 

செயலர்களாக கேத்தரின் லியோ (மூன்றாமாண்டு, கணிதவியல்துறை), லியாண்ட்ரா ஃபேனிடா (வணிக மேலாண்மைத் துறை), துணைத் தலைவர்களாக பிரின்ஸி ஸ்னோஸ்லின் (மூன்றாமாண்டு, வணிகவியல் துறை), அனுஷ்யா (மூன்றாமாண்டு, உளவியல்துறை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

வெற்றி பெற்ற புதிய மாணவர் பேரவை நிர்வாகிகளுக்குக் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி