"மாணவ மாணவியா்களை மன உளைச்சலுக்கு ஆளாகச் செய்த மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான ராஜினாமா செய்ய வேண்டும் " - தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தீா்மானம்
தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கைலாஷ் மஹாலில் மாநகர மாவட்டத் தலைவர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட முன்னாள் தலைவர் வழக்கறிஞர் சுப்ரமணிய ஆதித்தன் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்பியை நியமனம் செய்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார் ஜூன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியாகாந்திக்கும் மாநிலத் தலைவருக்கும் வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்வது பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பெருந்தலைவரின் கொள்கையான அனைவருக்கும் சமமான கல்வி என்ற கொள்கையை சீர்குலைக்கு பொருட்டு மத்திய பாரதிய அரசால் கொண்டுவந்துள்ள நீட் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகளை கண்டித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்துவது தேசிய மருத்துவ முகாமை தேர்வு வினாத்தாள் கசிந்து அதன் மூலம் மாணவ மாணவியர்களை மன உளைச்சலுக்கு ஆளாகச் செய்த மத்திய அரசிற்கு கண்டனங்களை தெரிவித்து அதற்கு பொறுப்பு ஏற்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான ராஜினாமா செய்ய வலியுறுத்துவது தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்று லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத அரசை கொண்டு மேற்கொண்டு வரும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அவரது தலைமையிலான தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து ெகாள்வது மாநகராட்சி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை துரிதப்படுத்தி தீவிரமாக பணியாற்றுவது உள்பட 6 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மண்டல தலைவர்கள் ஐசன் சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை, ஊடக பிரிவு தென்மண்டல தலைவர் ஜான் சாமுவேல், துணை அமைப்பு தலைவர்கள் எஸ்சி பிரிவு பிரபாகரன், ஐஎன்டியுசி பாலகிருஷ்ணன், ஊடகபிரிவு ஜெயஜோதி, அமைப்பு சாரா தொழிற்சங்க பிரிவு சேவியரம்மாள், மீனவரணி சிமியோன், ஆராய்ச்சி துறை சிவராஜ்மோகன், மகிளா காங்கிரஸ் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முத்துவிஜயா, மகிளா காங்கிரஸ் பாராளுமன்ற பொறுப்பாளர் உமா மகேஷ்வரி, மாணவர் காங்கிரஸ் பிளசி புளோரினா, பொது செயலாளர்கள் மைக்கேல் பிரபாகர், கோபால், ஜெபராஜ், நாகேந்திரன், துணை தலைவர்கள் டேவிட் வசந்தகுமார், ராஜாராம், தனபால்ராஜ், மாவட்ட செயலாளர்கள் இக்னேஷியஸ், மரிய செல்வராஜ், காமாட்சி தனபால், அந்தோணி ஜெயராஜ், கதிர்வேல், அசன் பாத்திமா, வக்கீல் சகாயராஜ், மாரியப்பன், ராஜ்குமார், வார்டு தலைவர்கள் காமராஜ், தனிஸ்லாஸ், முனியசாமி, முருகேசன், ராஜரத்தினம், சுப்பிரமணியன், சித்திரை பால்ராஜ், பரமசிவன், முத்துராமன், சாமிக்கண்ணு, சரவணன், செல்வராஜ், கருப்பசாமி, இளைஞர் காங்கிரஸ் ஜோசப், கௌதம், பாலமுருகன், முத்துபாலகிருஷ்ணன், மந்திரமூர்த்தி, முத்துவேலாயுதம், நிர்வாகிகள் பாஸ்கர், மரிய சிங்கம், ராஜகோபால், பாலு, ஜெயபாண்டியன், சுரேஷ்குமார், பூர்ட் ராயல், டொமினிக், பிரகாஷ், மகிளா காங்கிரஸ் வசந்தி லதா, வனஜா, இசக்கியம்மாள், நாகலட்சுமி, முத்துமாரியம்மாள், ராமலட்சுமி, வேணி, மஞ்சுளா தேவி, மகேஷ்வரி, பூரணபொற்கொடி, பர்வீன் பாத்திமா, செய்யதுஅலி, மாரீஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனர்.
இதில் மாற்று கட்சியை சேர்ந்த இளைஞர்கள் ஜோனத்தான், ரோஷன், கௌசிக், பிரதீப், கௌதம், ஹரிஷ், ஆகாஷ் மற்றும் பல இளைஞர்கள் மாநகர மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.
