வல்லநாட்டில் நீா் வரத்து குறைவாக இருந்தாலும் மக்களுக்கு நிறைவாக குடிதண்ணீா் வழங்குகிறோம் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் சுப்பையா பூங்கா பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வருகின்ற நீாின் அளவையும் வௌியேற்றும் நீரின் அளவையும் பாா்வையிட்ட பின் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் 

வல்லநாடு ஆற்றுபடுகையில் நான்கு உறைகிணறுகள் அமைக்கப்பட்டு அதில் பம்பிங் செய்யப்பட்டு அதன் பிறகு சுத்தரிக்கப்பட்டு 60 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மாநகர் பகுதிக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மழை வெள்ளத்தால் மாநகராட்சிக்கு குடிநீர் வந்து கொண்டிருந்த இரண்டாவது மூன்றாவது பைப் லைன் மற்றும் உறைக்கிணறு. பம்பிங் ஸ்டேஷன் உள்ளிட்டவைகள் சேதமடைந்தது. அதனை சரி செய்ய வேண்டும் என்று மேயர் ஜெகன் பொியசாமி அப்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நேரு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 20 கோடி ரூபாய் மதிப்பில் நவீன முறையில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு எவ்வளவு வெள்ளம் வந்தாலும் பாதிக்காத வகையில் உயரமான வகையில் பில்லர் எழுப்பப்பட்டு அதன் மீது புதியதாக பைப் லைன் அமைக்கப்பட்டது. 

இந்நிலையில் தொடர்ந்து குடிநீர் பிரச்சனையில் 100 சதவீதம் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மேயர் ஜெகன் பொியசாமி மாநகராட்சி பகுதி முழுவதும் வல்லநாடு பம்பிங் ஸ்டேஷனுக்கும் உறைக்கிணறுக்கும் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். பின்னா் இரண்டாவது பைப் லைன் 100 சதவீதம் பணிகள் முடிந்து தற்போது அதன் மூலம் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வந்து கொண்டிருக்கிறது அதுபோல் மூன்றாவது பைப் லைன் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது அந்தப் பணிகளும் 10 நாட்களில் முடிந்து விடும். பின்னா் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம் எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்த கட்டத்திற்கு சென்று அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது வல்லநாடு ஆற்றுப்படுகையில் நீர் வரத்து இல்லாத காரணத்தினாலும் கோடை மழை சரிவர பெய்யாத காரணத்தினாலும் வல்லநாடு ஆற்றுபடுகையில் தற்போது நீர் இல்லாத சூழ்நிலையிலும் பல்வேறு வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது தினசரி மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது குடிநீர் தாமதமான பகுதிகளுக்கு இரண்டு நாட்களில் தொடர்ந்து வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் வரை குடிநீர் பிரச்சனை எதுவும் இருக்காது மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் தங்கு தடை இன்றி வழங்கப்படும்     அதன் பிறகு மழைக்காலம் தொடங்கி விடும் அதனால் குடிநீர் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது கடந்த 10 நாட்களாக குடிநீர் தாமதம் ஏற்பட்டதை வைத்து சில அரசியல் கட்சியினர் அரசியல் செய்ய முன் வந்தனர். உடனடியாக மாநகராட்சி மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார் வருகிற 10-ம் தேதி குடிநீர் பிரச்சனை முழுவதும் சரி செய்யப்பட்டு மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் அதன்படி கடந்த சனிக்கிழமை முதல் குடிநீர் வினியோகம் சீரான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தனக்கு கொடுத்த வாய்ப்பை மாநகர மக்களுக்கு 100சதவீதம் முழுமையாக நிறைவேற்றி பணியாற்றுவேன் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான நடவடிக்கைகளை ஈடுபட்டு தற்போது அதனை நிறைவேற்றி வருகிறேன் மேயா் ஜெகன் பொியசாமி தொிவித்தாா். 

ஆய்வின் போது முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி