தூத்துக்குடி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு.!
தூத்துக்குடி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தூத்துக்குடியிலிருந்து தாம்பரத்திற்கு (வ.எண்.06018) ஜூலை 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 11:30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:30 மணிக்குச் சென்றடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்கு (வ.எண்.06017) ஜூலை 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் மாலை 3:40 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு வந்தடையும்.
இந்த சிறப்பு ரயிலானது தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் இந்த நீட்டிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
