தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி அவதி: பேட்டரி கார் இருந்தும் பயன்படுத்தப்படாததால் சர்ச்சை.!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், நடக்க முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் நீண்ட தூரம் சிரமப்பட்டு நடந்து அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அலுவலக வளாகத்தில் பேட்டரி கார் இருந்தும் அது பயன்பாட்டில் இல்லையா? மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களை எளிதாக அணுகும் வகையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தகைய சம்பவம் சேவையின் செயல்திறன் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி, பேட்டரி கார் சேவை முறையாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, அலட்சியம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு பேட்டரி கார் சேவை எப்போதும் கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது..
