தற்காலிக நடத்துனருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.!
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு தற்காலிக நடத்துநர் ஸ்ரீ தம்பிதுரை தனது பணி தொடர்பான பிரச்சினையை தெரிவித்து கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் தமிழன் பார்த்திபன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, ஸ்ரீதம்பிதுரை தென்காசி பணிமனையில் மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை பொது மேலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் உத்தரவின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஸ்ரீ தம்பிதுரை மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
