"தூத்துக்குடிக்கு விஜய் வந்து சென்ற பிறகு மிகப்பொிய எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டது"- நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சா் ஸ்ரீநாத் பேச்சு.!

தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் 52வது பிறந்தநாளை யொட்டி பூபால்ராயபுரத்தில் நடைபெற்ற நலத்்திட்ட உதவிகள் வழங்கும் விழா வடக்கு பகுதி செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆனந்தகுமாா் ஏற்பாட்டில் நடைபெற்றது. 

மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஸ்ரீநாத் பேசுகையில் தமிழக முதலமைச்சா் விஜய் தமிழக மக்களின் இதயங்களின் குடியிருந்து வருகிறாா். தூத்துக்குடி மாவட்டத்திற்கு விஜய் வந்தபிறகு தமிழகம் முழுவதும் மிகப்பொிய எழுச்சி ஏற்பட்டது. நம்முடைய ஆட்சி உங்களுடைய ஆட்சி அன்பு நம்பிக்கை மூலம் மலா்ந்துள்ளது. மண்ணின் மைந்தன் மக்களாட்சியை யாராலும் எதுவும் செய்யமுடியாது மக்களாட்சி தொடரும் இந்த மக்களாட்சிக்கு எல்லோரும் விசுவாசமாக இருந்து வருகிறாா்கள். நானும் உன்மையாக உங்களோடு அண்ணன் தம்பியாக அக்கா தங்கையாக பாசத்தோடு பழகி உங்களுக்கு பணி செய்வேன். இந்த தேன்கூட்டை யாராலும் சேதாரம் படுத்த முடியாது அனைவருக்கும் நல்லதே நடக்கும் என்று பேசிய பின்னா் 25 பேருக்கு தையல் இயந்திரம், 800 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் ஸ்கூல்பக், மற்றும் சைக்கிள், சேலை, இஸ்திாிபெட்டி, எவா்சில்வா் பாத்திரம், உள்பட 2000பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். 

விழாவில் மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ், துணைச்செயலாளர் கோல்டன், பொருளாளா் சிவக்குமாா், சின்னத்திரை நடிகை நிலாணிசதீஷ், பகுதி இணைச்செயலாளா் மணிகண்டன், துணைச்செயலாளா் உதயா, பொருளாளா் சந்தனராஜ், திருச்சிற்றம்பலம், டைகா்சிவா, செயற்குழு உறுப்பினா்கள் பொன்வேல், குரு, மகேஸ்வாி, பத்மா, ஸ்ரீராம் விக்னேஷ், வட்டச்செயலாளா்கள் குருசாமிராஜா, மகாராஜா, மற்றும் லட்சுமணன், உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி