திருப்பூர் தெற்கில் வெற்றி பெறுவோம்... அதிமுக, பாஜக, அமமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் சூளுரை
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருப்பூர் தெற்கு தொகுதியில் தாராபுரம் சாலை புதூர் பிரிவில் தேர்தல் பணிமனையினை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தேர்தல் பணிமனையினை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன், மாநில நிர்வாகி மலர்க்கொடி, செந்தில்வேல், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், அதிமுக திருப்பூர் மாநகர மாவட்ட அவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பழனிச்சாமி, அமமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் மேயருமான விசாலாட்சி, தமாக மாவட்ட தலைவர் சிறுமுகை ரவிக்குமார், அதிமுக நிர்வாகிகள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், அட்லஸ் லோகநாதன், இந்துமுன்னணி நிர்வாகிகள் கிஷோர்குமார், கொங்குநாடு விவசாயிகள் கட்சி நிர்வாகி கொங்குராஜாமணி, மஜமுக இப்ராஹிம் பாதுஷா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
தேர்தல் பணிமனையை திறந்து வைத்து முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் திருப்பூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தங்கராஜ் அவர்களுக்கு கூட்டணி கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தங்கராஜ் பேசுகையில், அதிமுக ஆட்சி காலத்தில் தான் அனைத்திற்கும் திட்டங்களும் கொண்டுவரப்பட்டது, நமது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் முதல்வராக இருக்கும் பொழுது நான்காவது குடிநீர் திட்டத்தை கொண்டுவந்தார்.
90 சதவீத பணிகள் நிறைவடைந்து ஆனால் கடந்த நான்காண்டுகளாக மேயர் கனெக்சன் கொடுக்காமல் எடுத்து அடித்து வந்தார், எந்த ஒரு திட்டத்தையும் மக்களுக்கு கொடுக்கவில்லை, மேலும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் கழிவு நீர் கால்வாய் அமைத்து தர கோரியிருந்தோம் அதற்கும் எந்த ஒரு நடவடிக்கையும், கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெறாமல் உள்ளது என்றும், அதேபோன்று சுரங்கப்பாதை பணிகளும் மெத்தனப் போக்கில் உள்ளது.
முன்னாள் மேயரும், திமுக வேட்பாளர் தினேஷ் அவர்களால் கடந்த ஐந்தாண்டு காலமாக திருப்பூர் சோதனைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும், அவரை வாக்கு சேகரிக்கவே நாம் விடக்கூடாது, அவர் எந்த திட்டமும் மக்களுக்கு செய்யவில்லை, அவர் மேயரான பின்பு கமிஷன் மற்றும் கொள்ளை மட்டுமே செய்துள்ளார் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை, வாயால் உருட்டுவதை தவிர எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை.
அதனால் மேயர் அவர்கள் நாளை ஒரு நாள் அவகாசம் உள்ளது வேட்பு மனுவை வாபஸ் பெற்றால் நன்றாக இருக்கும் என்றும், வரும் தேர்தலில் நிச்சயம் எடப்பாடியார் முதல்வராவார், திருப்பூருக்கு தேவையான அனைத்து திட்டங்களும் மத்திய அரசிடம் இருந்து பெற்று தரப்படும் என்று பேசினார்.
அமமுக மாவட்டச் செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி முன்னாள் மேயருமான விசாலாட்சி பேசுகையில்,
குப்பையை குறித்து பேச வேண்டாம் என்று தெற்கு தொகுதி வேட்பாளரும் முன்னாள் மேருமான தினேஷ் குமார் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார், நான் குப்பையை தவிர்த்து பல விஷயங்களை பேச தயாராக இருக்கிறேன் விவாதத்திற்கு நீங்கள் தயாரா என்று கேள்வி எழுப்பினார்? குறிப்பாக அவரது இல்லத்திற்கு அனுமதி பெறாமல் மின்சாரத்தை திருடிய குற்றத்திற்காக அபராதம் கட்டியவர் தான் இந்த திமுக வேட்பாளர் தினேஷ்குமார்.
இது மக்கள் பிரதிநிதி செய்யக்கூடிய காரியமா? தேமுதிகவில் இருந்த இந்த மேயரை என்னிடம் போட்டியிட்டு தோற்ற பறகு, அவருக்கு எதிர்காலம் கொடுக்கலாம் என்று எண்ணிய தற்போதைய திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜை வளர்த்த கடா மார்பில் பாய்வது போல், சொந்த தொகுதியை விட்டு அவரை பல்லடத்திற்கு அனுப்பி வைத்தவர் தான் இந்த தினேஷ்குமார் என்றும், இதைப் போன்ற ஒரு அமாவாசை கேரக்டர் எங்கும் பார்க்க முடியாது என்றும், 1991ல் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் அமைதியாக இருக்கிறார்.நீங்கள் ரொம்ப துள்ள வேண்டாம் தம்பி விடிந்தால் காணாமல் போய்விடுவீர்கள்.
இவர் நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக மேயராகவில்லை முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகவே இதை செய்கிறார், மேலும் இங்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுப்புராயன் அவர்கள் குப்பை பிரச்சனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தார் ஆனால் கனிமொழி வருவதால் அந்த ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுத்த இவர் மக்களுக்காக பணியாற்றாமல் கட்சி சீட்டு கொடுத்ததற்காக விசுவாசமாக உள்ளார், இதைவிட வெட்கங்கெட்ட ஒரு மக்கள் பிரதிநிதி நாம் எங்கும் பார்க்க முடியாது என்றும், நம் அனைவரும் ஒன்றாக இணைந்து திருப்பூர் தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் தங்கராஜ் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.
திருப்பூர் மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் பேசுகையில்,
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள அவல நிலையை பார்த்துள்ளீர்கள், திமுக முன்னாள் மேயிரும், தெற்கு தொகுதி வேட்பாளருமான தினேஷ் ஓட்டு கேக்க வந்தால் செருப்பால் அடியுங்கள் என்றும், வரிகள் அதிகமாக உள்ளது மக்கள் அவதிப்படுகிறார்கள் இதை தீர்மானமாக நிறைவேற்றி முதலமைச்சருக்கு அனுப்புங்கள் என்று கூறினால் அதை அனுப்பாமல் குப்பையில் போட்டுள்ளார், இன்று அது டீக்கடையில் வடை மடிப்பதற்கு பயன்படுவதாகவும் குற்றம் சாட்டினார், மேலும் இது பன்ற மானங்கெட்ட மேயர் எங்கும் பார்க்க முடியாது, கம்யூனிஸ்ட் கட்சியினர் அவருக்கு ஜால்ரா அடிப்பதாகவும், மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் மக்களின் குரலாக மாமன்ற கூட்டத்தில் பேசினோம், ஆனா திருப்பூர் மக்களை படு பாதாளத்தில் தள்ளி விட்டவர்தான் மேயர், அல்லாத மண்ணுக்கு பில் போட்டு கமிஷன் அடுத்தவர் தான் தினேஷ்குமார், நாம் செய்த திட்டத்தை கூற வேண்டும் என்று அவசியமில்லை அவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்டாலே போதுமானது என்று பேசினார்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசுகையில்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி அவர்கள் எனக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார், கம்யூனிஸ்ட் வலிமையாக இருந்த காலகட்டத்தில் அண்ணா பனியன் சங்கம் என்று ஆரம்பித்து சிறப்பாக வழி நடத்தினார், இந்து முன்னணி அரசியல் கட்சி இல்லை என்றும், திமுக கூட்டணி இந்து உயிரிழந்த கூட்டணியாக உள்ளது, கடந்த ஐந்து ஆண்டுகளில் 175 கோவில்களை இடித்துள்ளனர்.
அதுதான் அவர்களின் மிகப்பெரிய சாதனை என்றும், 5 லட்சம் கோடியாக இருந்த கடனை கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக உயர்த்தி உள்ளனர் அதனால் இந்து முன்னணி கூட்டங்கள் கூடி திமுக கூட்டணியை தோற்கடிக்க பணியாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்காக தமிழ்நாடு முழுவதும் இந்து முன்னணியினர் பணியாற்றி வருவதாகவும், குறிப்பாக கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜியை தோற்கடிக்கப்பதற்காக 500 இந்து முன்னணியினர் கூட்டணி கட்சி மற்றும் வேலுமணி அவர்களுடன் பணியாற்றி வருவதாகவும், பாஜகவும் இந்து முன்னணியும் முஸ்லிம் விரோத கட்சிகள் இல்லை.
ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது போல விநாயகர் சதுர்த்திக்கும் சொல்ல வேண்டும் என்று தான் நாங்கள் கேட்கிறோமே தவிர நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், அதிமுக பொதுச்செயலாளர் அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறார் மேலும் தைப்பூசத்திற்கு விடுமுறையும் கொடுத்துள்ளார் இது போன்ற அனைத்து மதத்திற்கும் சமமாக இருப்பதால்தான் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று பேசினார்.
