தூத்துக்குடி : ரூ.25 கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதம் -குடோன் இடிந்து விழுந்து தரைமட்டம்
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு எரிந்து சேதமானதுடன் குடோனும் தரைமட்டமானது.
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ஏற் பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான பஞ்சு எரிந்து சேதமான துடன் குடோனும் தரை மட்டமானது.
தூத்துக்குடி 3ம்மைல் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி அமல்ராஜ்(46). இவர் வெளிநாடுகளில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்து அவற்றை இந்தியா முழுமைக்கும் விநியோகம் செய்து வரு கிறார். இதற்காக அவர் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பெரிய குடோனை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து அதில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகளை இருப்பு வைத்துள்ளார். தற் போது பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 8ஆயிரத்து 500 பஞ்சு பேல்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று மதியம் அந்த குடோனில் திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்த செக்யூரிட்டிகள் தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் காற்றின் வேகத்தில் தீ மளமள மளவென கட்டுக்கடங்காமல் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு சிப்காட், தெர்மல்நகர் மற்றும் டவுன் தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 80க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடா மல் தடுக்கும் பணியில் ஈடு பட்டனர். சுமார் 4 மணி நேரம் தீயணைப்பு வீரர் கள் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து இடிபாடுகளுக்குள் இருந்த பஞ்சில் பரவிய தீயை அணைக்க ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, தீயை அணைக்கும் பணி நேற்று இரவு வரையில் நடந்தது. இந்த தீ விபத்தில் ரூ.25 கோடி மதிப்பிலான பஞ்சு பண்டல்கள் மற்றும் குடோன் ஆகியவை எரிந்து நாசமானது. தீயின் வெப்பத்தினால் குடோன் பாதிக்கப் பட்டு, இடிந்து விழுந்து தரைமட்டமானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தீவிபத்து ஏற்பட்ட குடோன் அருகேயுள்ள ஒரு ஹைவோல்ட்டேஜ் மின் கம்பத்தில் நேற்று பகலில் அவ்வழியாக சென்ற லோடு ஆட்டோ மோதியுள்ளது. இதில் மின்கம்பம் ஒடிந்து விழுந்துள்ளது. இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மின்வாரி யத்தினர் அதனை சீர் செய்து மீண்டும் மின் இணைப்பு கொடுத்துள் ளனர். அதன் பின்னர் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த மின்கம்பி சென்ற பகுதியில் இருந்த பனைம ரங்கள் மற்றும் காட்டு புதர்களும் தீயில் எரிந்துள்ளன. இதனால் மின் கசிவு ஏற்பட்டு, தீ பற்றி பற்றி இருக்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
