த.வெ.க.வில் புறக்கணிப்பு - திமுகவில் இனைந்த அஜிதா ஆக்னல்!!
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.
கடந்தாண்டு மாவட்டச் செயலாளர் பதவி மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து முறையிட விஜய்யைச் சந்திக்க முயன்று மக்களிடையே கவனம் ஈர்த்தார். இவரை விஜய் சந்திக்காததும் பெரும் பேசுபொருளானது. பொறுப்பு வழங்கப்படாவிடினும் கட்சிக்காக உழைப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து தற்போது அறிவிக்கப்பட்ட தவெக வேட்பாளர் பட்டியலிலும் இவர்பெயர் இடம்பெறவில்லை. இதனால் மனமுடைந்த அஜிதா திமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. தவெக தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக சாமுவேல் ராஜ் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி முன்னிலையில் திமுகவில் தன் ஆதரவாளருடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மீனவர் நலன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் கான்ஸ்டன்ட்டைன் ரவீந்திரன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, உமரி சங்கர், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜெகன், முன்னாள் இளைஞர் அணி செயலாளர் மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
