தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி கால உதவி ஊதியத்தை தமிழ்நாடு அரசு உயர்த்திட வேண்டும். பல்வேறு மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழ்நாட்டில் தான் இவர்களுக்கான பயிற்சிக் கால உதவி ஊதியம் குறைவாக உள்ளது. 2021 ஆம் ஆண்டிற்குப் பிறகு பயிற்சிக் கால உதவி ஊதியம் உயர்த்தப்படவில்லை. தற்பொழுது பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ 27,319 வழங்கப்படுகிறது. இவ்வூதியம் மேற்கு வங்கத்தில் ரூ 44,000, ஒடிசாவில் ரூ 40,000, அசாமில் ரூ 36,000 ஆக உள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ 52,451 முதல் ரூ 56,275 வரை வழங்கப்படுகிறது. இதுவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ 93,559 முதல் ரூ 95,257 வரை வழங்கப்படுகிறது. உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கு ரூ 54,636 முதல் ரூ 60,101 வரை வழங்கப்படுகிறது. இதுவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூபாய் 85,000 முதல் ரூபாய் 99,000 வரை வழங்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டைவிட அதிகமாக பயிற்சிகால உதவி ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, இன்றைய பணவீக்கம், விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்...