அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு தூத்துக்குடி பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வேண்டுகோள்.!

 

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது பருவ காலச் சூழ்நிலைகள் மாறிவரும் நிலையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய மழை நீரை சேமிக்க வேண்டியது அவசியமானதாகிறது. மழை நீர் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மை பயன்பாட்டிற்கு ஏதுவானதாக  மாறுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் எதிர்பாராத வறட்சி காலங்களில் மாநகர பகுதிகளில் குடிநீர் விநியோகத்திற்காக பயன்படுத்தக்கூடிய நீர் நிலைகள் ஏதும் இல்லாத நிலையில் ஒவ்வொரு கட்டிடத்திலும் மழை நீரை முறையாக சேகரித்து சேமித்து வைக்கும் அமைப்பினை ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாததாக காணப்படுகிறது. எனவே மாநகர பகுதியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களின் உரிமையாளர்கள் தங்களது சொந்த பொறுப்பில் சேமிப்பு அமைப்பினை உடனடியாக ஏற்படுத்தி நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இதுகுறித்து ஏற்படக்கூடிய சந்தேகங்களை  மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் நேரில் கேட்டு செயல்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையர்  ப்ரியங்கா வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!