திண்டுக்கல்லில் ATM-களில் பணம் எடுக்க வந்தவர்களிடம் நூதன முறையில் ஏமாற்றி பணம் கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்ட கணவன் - மனைவி கைது

 

திண்டுக்கல் நகர் வத்தலகுண்டு ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ATM-களில் பணம் எடுக்க உதவுவது போல ATM- கார்டை வாங்கி, மேலும் ரகசிய எண்ணை கேட்டறிந்து ATM- இயந்திரத்தில் பணம் எடுப்பது போல் போலியாக முயன்று பணம் இல்லை என்று கூறி கண்ணிமைக்கும் நேரத்தில் கார்டுக்கு பதிலாக வேறொரு கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விடுவார். கார்டு கொடுத்த நபர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

இதுகுறித்து மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நகர் DSP. கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூரியகலா, நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம்,சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கோவை, கணபதியை சேர்ந்த முகமதுதம்பி(34) மற்றும் அவரது மனைவி அனிதா(26) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

தமிழகம் முழுவதும் இதுபோன்று ATM- கொள்ளையில் ஈடுபட்டு அந்தப் பணம் மூலம் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர் மேலும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள், விலை உயர்ந்த செல்போன்கள் வாங்கி சொகுசு வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இரண்டு பேரையும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!