எம்எல்ஏக்களுக்கு கார் என்றால் விவசாயிகளுக்கு டிராக்டர்! – விருதுநகர் விவசாயிகள் அதிரடி கோரிக்கை.!

 

எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுமானால், டிராக்டர் இல்லாத விவசாயிகளுக்கு அரசு சார்பில் டிராக்டர் வழங்க வேண்டும் என விருதுநகரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ் விவசாயிகள் சங்கம் அதிரடி கோரிக்கை விடுத்துள்ளது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி, 

“சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கும் அதேபோன்ற சலுகை வழங்க வேண்டும். டிராக்டர் இல்லாத விவசாயிகளுக்கு நிலங்களை உழுது பயிரிடுவதற்காக அரசு டிராக்டர் வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

மேலும், அரசு வழங்கும் டிராக்டர்களை இயக்குவதற்கான ஓட்டுநர் சம்பளத்தையும் அரசே ஏற்க வேண்டும் என்றும், எம்எல்ஏக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளில் விவசாயிகளுக்கும் உரிய பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் தமிழ் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

கூட்டத்தில் சங்க மாநில பொருளாளர் சுப்புராஜ், மூலிப்பட்டி கருமுத்து முருகன், ஜெயபாண்டி, கஞ்சநாயக்கன்பட்டி விவசாயிகள் ராமர், சீனிவாசன் உள்ளிட்ட தமிழ் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

“எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கினால்… விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்க வேண்டும்!” என்ற இந்த கோரிக்கை, விருதுநகர் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!