இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியா? விஜயா?குழப்பத்தை விளைவிக்கும் தவெகவினர்...!
மத்தியில் ஆளும் அரசை எதிர்க்க பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய கூட்டணியே இந்தியா (INDIA) கூட்டணி ஆகும். இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட பல முக்கிய மாநில மற்றும் தேசிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தவெக வெற்றிக்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் உள்ப்பட இடதுசாரிகள், விசிக போன்ற திமுக கூட்டணியில் அங்கம் வகித்த சில முக்கிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்க உதவியது, ஆட்சியிலும் பங்கு பெற்றது. இதன் பிறகு அரசியல் மேடையில் பேசிய பேச்சுக்களால் ஏற்பட்ட முட்டலும் மோதலும் திமுகவை முழுமையாக தனிமை படுத்தியது. இன்று திமுகவுடன் அணி சேர்ந்த அரசியல் கட்சிகள் இன்று தவெக தலைமையில் புதிய கூட்டணியாக உதயமாகி உள்ளது. ஆளுமை பெருந்திய திமுக vs அதிமுகவை தொடர்ந்து இன்றைய அரசியலில் தவெக வும் புதிய அணியை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், தவெகவின் பவர் புல் அரசியலை நம்பிய காங்கிரஸ் பிரமுகர்கள் பிரதிநிதிகள் பொறுப்பாளர்கள் திமுகவை வசைபாடி பேசத் தொடங்கினார்கள். தவெகவின் பவர் புல் அரசியல் பாராளுமன்ற தேர்தலில் பலரை எம்.பி ஆக்கிவிடும் என்ற வெற்றிக் கணவில் மிதக்கவும் தொடங்கினார்கள். இந்த கதையையே நாளைய வெற்றிக்கான அரசியல் நிகழ்வுகளாக மனதில் பதிவு கொண்ட ராகுல் காந்தியின் கனவையும் தவெக அமைச்சர் பெருமக்கள் மாற்றியமைக்க இப்பவே ஒரு புதிய திட்டத்தை உச்சரிக்க தொடங்கிவிட்டனர். அதற்கான பணிகளையும் பிற மாநிலங்களில் செய்யவும் தொடங்கிவிட்டனர்.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தவெக அங்கம் வகிக்கிறதா? இல்லையா?
அப்படி ஆனால் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியா? விஜயா?
யாரை தான் முன் மொழிகிறார்கள், முதன்மைபடுத்திகிறார்கள் என்ற குழப்பம் தமிழக அரசியலில் பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதைப்போலவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதமருக்கான முழக்கம் ராகுலை மையபடுத்துமா? விஜயை முதன்மைபடுத்துமா? என்பது தான் கேள்வியாகவும் ஒலிக்கிறது. காங்கிரஸ்க்கு ஆட்சியில் பங்கு கொடுத்த தவெகவின் தேசிய அரசியலுக்கு கை கொடுக்குமா? கை கழுவுமா? என்பது தான் இந்தியா கூட்டணியில் புரியாத புதிராகவே தொடர்கிறது.
காங்கிரஸ் பிரமுகர்களின் எம்.பி கனவு தவெக கூட்டணியில் வெற்றி பெறுமா? தவெக வின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்று கூட்டணியில் முன் நிறுத்துவார்களா? என்பதை நாமும் இவர்களுடன் பொறுத்திருந்து பார்ப்போம்...
