தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சி முகாம்.

 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி திட்டங்களைச் திட்டமிட்டுச் செயல்படுத்துவதற்காக, தெருநாய்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் நோக்கில் சுகாதாரப் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

 இக்கணக்கெடுப்புப் பணியானது 'வேர்ல்ட் வெட்டரினரி சர்வீஸ்' (ற்றும் 'டாக்ஸ் ஆஃப் கோயம்புத்தூர்' ஆகிய அமைப்புகளின் தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளப்படுகிறது. இதில் தரவு சேகரிப்பு மற்றும் கணக்கெடுப்பு முறைகள் குறித்து காமராஜ் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்களாகப் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

இப்பயிற்சி முகாமினை மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தலைமையேற்று துவக்கி வைத்து  மாநகரப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து, அதன் அடிப்படையில் விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாடு (ABC) மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முறைப்படி திட்டமிட்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இக்கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர்கள் முழு ஒத்துழைப்புதருமாறு  கேட்டுக்கொள்ளகிறோம் என மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!