தூத்துக்குடி: கஞ்சா கடத்திய 3 பேர் கைது - 3½ கிலோ கஞ்சா பறிமுதல்
தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் விற்பனைக்காக பைக்கில் கஞ்சா கடத்திய ஓம்சாந்தி நகர் தங்கராஜ் மகன் முத்துராஜ் என்ற கார்த்திக் (34), கிருஷ்ணராஜபுரம் முனியசாமி மகன் இசக்கிராஜா (22) மற்றும் KTC நகர் முத்துமாணிக்கம் மகன் கலைமணி (24) ஆகிய 3 பேர் கைது
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 2 பைக்குகள் பறிமுதல்
மாவட்ட எஸ்பி சிவபிரசாத் உத்தரவின்பேரில், டவுன் டிஎஸ்பி சுனில் மேற்பார்வையில், தாளமுத்துநகர் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ், தலைமை காவலர் மீனாட்சி சுந்தரம், காவலர்கள் கோட்டை கருப்பசாமி, முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய போலீசார் நடவடிக்கை
